Posts

                 தொல்காப்பியத்தில் ’ போ ’ – சூழற் பொருண்மை ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி .             தமிழின் இயக்கத்தைத் தரவுகளின் அடிப்படையில் ஆய்ந்துரைக்கின்ற தொல்காப்பியம் வகுத்துரைக்கும் இலக்கணவியல் கொள்கைகளால் மொழி வரலாற்றையும் சொற்பொருண்மை மரபையும் தெளியலாம் . அந் நிலையில் போ என்னும் ஓரெழுத்தொருமொழி தொல்பழங்காலத்திலிருந்து பலபொருள் தன்மையில் இயல்வதை அறிந்தால் இலக்கியங்களை முறையாக உள்வாங்கி வரலாற்றை விளக்கலாம் . புறத்திணையியலில் ,             புடைகெடப் போ கிய செலவே ….( நூற்பா 1008 அடி 02 ) என்னும் நூற்பாவில் இடம் பெயர்தல் என்னும் கருத்தில் போ பயில்கின்றது . அடுத்ததாக , இடையியலில்               பிற , பிறக்கு , அரோ , போ ……. அசைநிலை … ( நூற்பா 764 ) என்னும் பயில்வில் பொருளற்ற அசைநிலையாக இயல்வது இலக்கணப்படுத்தப்பட்டுள்ளது . எனவே போ வினை யாகவும் இடை ச்சொல்லாகவும் பழந்தமிழில் பல்பொருளொரு சொல்லாக வழங்கியமை தெளிவு .             இப் பொருண்மை மரபு இன்றும் தொடர்கின்றது . போனான் என்று இயக்கத்தைக் குறிப்பதோடு , ’ வந்தா வா ; வராட்டிப் போ ’ போன்ற சொ
                                     பெரியசாமித் தூரனின் ’ அழைப்பு ’ ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை ; சீரிய படைப்புகள் மக்களால் சீராகப் போற்றப்படும் . அம் முறையில் பாராட்டத்தக்க பன்முகப் பெருமைகளையும் பங்களிப்புகளையும் வாய்ப்பாக்கியர் பெரியசாமித் தூரன் (1908-1987 ) . ஆசிரியர் , சிறாரிய / கொங்கு வட்டாரவழக்குப் படைப்பாளர் , இசைவாணர் , மொழிபெயர்ப்பாளர் , கலைக்களஞ்சியப் பதிப்பர் போன்ற தளங்களில் மேன்மையாக இயங்கித் தமிழுக்கு ஆக்கங்களை அள்ளித் தந்தவர் . இவரது படைப்பாளுமை பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றது . இத்தகைய திறனாளர் / உலகநலவேட்பாளர் இளைஞர்களுக்குப் பல அறிவுரைகளை நல்கி விழிப்புணர்வூட்டியுள்ளார் . இளமை : பாரதத் திருநாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இளைஞர்கள் . அதோடு வாழ்க்கையின் வளர்ச்சிக்கான அடித்தளத்தைக் கட்டமைக்கின்ற தொடக்க காலப் பருவமாகவும் , வாழ்க்கையை வளப்படுத்த முனைகின்ற முயற்சி ப் பருவமாகவும் , கனவுகள் கற்பனைகளோடு இல்லற வாழ்வை ஆக்கி இன்புறுகின்ற காலகட்டமாகவும் குமரப் பருவம் அமைகின்றது . இந்தப்
Image
                பெரியசாமித் தூரனின் ’ ஹோமா ’ உருவகம் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை ; பூதவுடல் மறைந்தாலும் புகழுடம்பு நிலைத்திருக்கும் ; சீரிய படைப்புகள் மக்களால் சீராகப் போற்றப்படும் . அம் முறையில் பாராட்டத்தக்க பன்முகப் பெருமைகளையும் பங்களிப்புகளையும் வாய்ப்பாக்கியர் பெரியசாமித் தூரன் (1908-1987 ) . ஆசிரியர் , சிறாரிய / கொங்கு வட்டாரவழக்குப் படைப்பாளர் , இசைவாணர் , மொழிபெயர்ப்பாளர் , கலைக்களஞ்சியப் பதிப்பர் போன்ற தளங்களில் மேன்மையாக இயங்கித் தமிழுக்கு ஆக்கங்களை அள்ளித் தந்தவர் . இவரது படைப்பாளுமை பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றது . இத்தகைய திறனாளர் / நலவேட்பாளர் மேலே பற என்னும் தலைப்பிலான பாடலில் ஹோமா என்னும் கற்பனைப் பறவையை , மக்களை / இளைஞர்களை ஊக்குவிக்க உருவகமாகப் படைத்துள்ளதை விண்டுரைப்பத்தாக இக் குறிப்புரை இயல்கின்றது .   ‘ ஹோமா ’ பறவை :             ஒவ்வொரு பண்பாட்டிலும் சில உயிரினங்கள் / பறவைகள் கருத்துவிளக்க உருவங்களாக அமைந்துள்ளன . அன்னம் , காக்கை , மஞ்சள் போன்றவை தமிழ்ப் பண்பாட்டில் பிரித்தறிதல் , கூ
                     தொல்காப்பியம் - செய்யுளுறுப்பு : பயன் – பொருண்மை நோக்கு ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி உலக இலக்கணத் தளத்தில் தொல்காப்பியத்திற்குச் சிறப்பான பெருமை உண்டு ; அவற்றுள் பொருளதிகாரமும் ஒன்றாகும் . இலக்கிய வகைமை , பாடுபொருள் , வடிவம் , முருகியல் ,  உணர்ச்சிகள் , சொல் வழக்கு வரையறை போன்றன பொருளதிகாரத்தில் இலக்கணப்படுத்தப்பட்டுள்ளன . இலக்கிய வடிவ அமைப்பியலையும் பொருண்மை இயக்கத்தையும் செய்யுளியல் வகுத்துரைக்கின்றது . செய்யுளியலின் முதல் நூற்பா செய்யுள் (34) உறுப்புகளை அறிமுகப்படுத்த , அவை பின்னர் விரித்துரைக்கப்படுகின்றன . இவற்றுள் ஒன்று பயன் என்பதாகும் . பயன் :            ஒன்றால் விளைகின்ற பேற்றைப் பயன் என்று குறிக்கின்றனர் . மனிதனின் ஒவ்வோர் எண்ணமும் பேச்சும் செயலும் தனி மனிதனுக்கும் ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் நற்பேறாக வேண்டும் . இவ்வாறே மானுட மேன்மைக்காக மனிதப் பற்றாளர்கள் ஆக்குகின்ற இலக்கியங்களும் இய ங்க லாம் . இல க்கியவியல் கலைச்சொல்லான பயனை த் தொல்காப்பியர் ,             இதுநனி பயக்கும் இதனால் என்னும்             தொகைநிலைக் கிளவி
                               தொல்காப்பிய ‘ காட்சி ’ : ஒப்புருப் பொருண்மை ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி             தமிழ் மொழி ஒட்டுமொழிப் பண்பும் சொல் வளமும் கொண்டது . அதனால் ஒரு வேர்ச்சொல்லைப் பலவாறு இணைத்து வெவ்வேறான சொற்களை ஆக்கலாம் . காட்டாக , பகல் என்பதை நேரம் ; பிரித்தல் என்று ஆளலாம் : மிதிவண்டி , தொலைபேசி என்று கட்டலாம் .. இந்தப் பண்பைப் படைப்பாளர்கள் செவ்வனே பயன்படுத்திப் புலமை ஆற்றலையும் மொழித் திறனையும் வெளிப்படுத்கின்றனர் . மொழியமைப்பை விளக்குகின்ற தொல்காப்பியரின் மொழிநடையும் இத்தகையதே . அந் நிலையில் காட்சி [ காண் + சி ] என்னும் தொழிற்பெயர் தொல்காப்பியத்தில் ஒப்புருச் சொல் லாக [ ஒரே இலக்கண வகையைச் சார்ந்த வேறுபட்ட கருத்துடைய சொற்கள் ] இயலுமாற்றை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது . காட்சி :           காண் + சி [ பார்த்தல் என்னும் தொழில் ] ஆகிய இரண்டு பொருண்மைக் கூறுகளைக் கொண்ட , பிரிந்தியலக்கூடிய [ பகுபதம் ]  கூட்டுச் சொல்லாக , பெயராக அமைகின்றது . இது தொல்காப்பியத்தில் ,             வெட்சியின் துறையாக ‘ தேடுதல் ’ – காட்சி , க
                                  வள்ளுவத்தில் ‘ பற்று ’ – சூழற் பொருண்மை ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருக்குறள் பொருண்மையியல் ஆய்வுக் களமாகவும் திகழ்கின்றது .  வள்ளுவத்தின் சொல்லாட்சி , தொடரமைப்பு நுட்பங்கள் ஆகியன உற்றுநோக்கி அறியத்தக்கன . இந் நிலையில் பற்று என்னும் பலபொருட்சொல் வள்ளுவத்தில் இயலுமாற்றை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை அமைகின்றது . பற்று :             தடி , படி , ஆடு , நாடு , நகை , இல் போன்ற சொற்கள் பெயராகவும் வினையாகவும் இயல , மா போன்றவை பெயராகவும் உரியாகவும் பயில்கின்றன . அவ்வாறே பற்று என்பதும்   வள்ளுவத்தில் பெயராகவும் வினையாகவும் ஆளப்பட்டுள்ளது .             88, 275, 347, 349, 350, 438, 506, 521, 606, 747, 748, 852, 856, 956 ஆகிய எண்ணுள்ள 14 குறட்பாக்களில் பற்று இயல்கின்றது . இ வற்றின் கருத்தையறியப் , பின்வருநிலையணி அமைந்த  பின்வருகின்ற குறட்பாவை நோக்கலாம் : பற்றுக பற்றற்றான் பற்றினை அப் பற்றைப் பற்றுக பற்று விடற்கு ( குறட்பா 350)     இதில் ,       பற்றுக = வியங்கோள் வினை = இடைவிடாமல் நினைத்தல்
                                                                 Sharing hints                                                 P. Kolandasamy, Puducherry. This morning  I browsed internet( https://www.quora.com/ Anubav Jain ) for an academic purpose & found  relevant mental health hints entitled “ Remain calm and collected during a heated argument ”  as available in ThirukuRaL, for control of emotion, as  stated below : ·         Focus on resolution, your peace of mind, your day, and your goals. Your peace is above people's mismanaged ego and pending frustration. ·         Don't consider the other person superior or inferior ; both bring your ego into play. Treat them like an immature kid; you need to handle them and not fight. Remember, aging doesn't bring adulthood; most people in the market are overgrown kids, pity them, manage them, and don't get angry. ·         Answer people’s doubts and questions, communicate your thoughts well, and your communic