தொல்காப்பியகாட்சி’ : ஒப்புருப் பொருண்மை

.கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

            தமிழ் மொழி ஒட்டுமொழிப் பண்பும் சொல் வளமும் கொண்டது. அதனால் ஒரு வேர்ச்சொல்லைப் பலவாறு இணைத்து வெவ்வேறான சொற்களை ஆக்கலாம். காட்டாக, பகல் என்பதை நேரம் ; பிரித்தல் என்று ஆளலாம்: மிதிவண்டி, தொலைபேசி என்று கட்டலாம்.. இந்தப் பண்பைப் படைப்பாளர்கள் செவ்வனே பயன்படுத்திப் புலமை ஆற்றலையும் மொழித் திறனையும் வெளிப்படுத்கின்றனர். மொழியமைப்பை விளக்குகின்ற தொல்காப்பியரின் மொழிநடையும் இத்தகையதே. அந் நிலையில் காட்சி [காண் + சி ]என்னும் தொழிற்பெயர் தொல்காப்பியத்தில் ஒப்புருச் சொல்லாக [ ஒரே இலக்கண வகையைச் சார்ந்த வேறுபட்ட கருத்துடைய சொற்கள் ] இயலுமாற்றை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது.

காட்சி :

          காண்+சி [ பார்த்தல் என்னும் தொழில் ] ஆகிய இரண்டு பொருண்மைக் கூறுகளைக் கொண்ட, பிரிந்தியலக்கூடிய [பகுபதம்கூட்டுச் சொல்லாக, பெயராக அமைகின்றது. இது தொல்காப்பியத்தில்,

            வெட்சியின் துறையாக தேடுதல்’ – காட்சி , கல்கோள் (நூற்பா 1010)

            ஆற்றுப்படையில்காணல்’ – ஆற்றிடைக் காட்சி (நூற்பா 1040)

 களவியலில்தெளிவு’ – செயிர்தீர் காட்சி.. (நூற்பா 1063 )

மரபியலில்பெயர்’ – கலை என் காட்சி .. (நூற்பா 1548 )

மரபியலில்நுண்ணறிவு’ – ஒத்த காட்சி….. (நூற்பா 1614 )

என்றவாறு பெயராக, வேறுபட்ட கருத்தில் இயல்கின்றது. அதாவது ஓருருவில் அமைந்த பெயர்ச் சொற்களாக அமைந்துள்ளன.

            இத்தகைய மயக்குகின்ற பொருட்பனமையால் ஏற்படும் குழப்பத்தைச் சூழற்பொருண்மை அடிப்படையில் எதிர்கொண்டு, தெளியலாம்.

பயன்பட்டது

ஜெயதேவன்,. (பதி.) 2004. தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்

                                                                               ******

 

 

 

     

     

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு