திருக்குறள் சுட்டுகின்ற ‘ தவறு ’கள் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் அற இலக்கியமான வள்ளுவம் மனித எண்ணங்களையும் செயல்பாட்டினையும் கூர்ந்துநோக்கிப் புல்லுக [கற்க] ; தள்ளுக [பொய்யற்க] என்னும் வாய்பாட்டிலும் உடைமை [ ஊக்கமுடைமை ] ; ஆமை [ கொல்லாமை] என்னும் பின்னொட்டுகளாலும் அறக் கொள்கைகளை வகுத்துரைக்கின்றது. உடன்பாட்டில் அறையப்பட்டவற்றை வளர்த்தும், எதிர்மறையில் குறிக்கப்பட்டவற்றை விலக்கியும் வாழ்ந்தால் அனைவரும் சிறக்கலாம். இம் முறையில் வள்ளுவம் சிலவற்றைத் தவறு என்று சுட்டுகின்றது. பழந்தமிழ்ப் பல்பொருட் பெயர்ச்சொல்லான ’தவறு’ வள்ளுவத்தில் பயில்வதைக் கீழ்வருகின்ற அட்டவணையால் அறியலாம்: குறள் எண் சொல்லாட்சி கருத்து 469 தவுறு பிழை 1154 தவறு குற்றம் 1286 தவறு பிழை ...
Posts
Showing posts from November, 2024
- Get link
- X
- Other Apps
எண்ணுப்பெயரை எண்ணுமுறைப் பெயராக்கல் ( Cardinal number > Ordinal number ) புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் மனித உறவாடல் கருவியான மொழியை மக்கள் தம் தேவைகளையும் நோக்கங்களையும் நிறைவேற்றப் பயன்படுத்துகின்றனர். அதற்காகப் பல வகைச் சொற்களை ஆக்குகின்றனர். இது தொடர்கின்ற அறிவாக்க நிகழ்வாகும். அந் நிலையில் எண்ணுப் பெயர்கள் குறிப்பிடத்தக்கன. வணிகம், பொருளாதாரம், அளவீடு ஆகிய தளங்களில் எண்ணுப் பெயர்கள் இன்றியமையாதன. இவை முழு/ பின்ன எண்களாக இயல்கின்றன. எத்தனை? என்று வினவும்போது எண்ணுப்பெயரில் 10. 120 என்று விடையிறுக்கின்றனர். இதுவே பெரும்பான்மை. ஆயினும் மற்றொரு தேவையான எத்தனையாவது? என்று அறிய விரும்பும்போது பத்தாவது, நூறாவது என்று எண்ணுமுறைப் பெயரால் குறிக்கப்படுகின்றன . தமிழில் 10 என்னும் எண்ணுப்பெயரை 10ஆவது அல்லது 10ஆ...
- Get link
- X
- Other Apps
’ நேருக்கு நேர் ’ திரைப்படப் பாட லில் திருக் குறள் அடி பேராசிரியர் புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் விளம்பு விழுமியங்களாலும் இலக்கிய முருகியலாலும் சால்புடை ய திருக்குறள் காலந்தோறும் படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்துவருகின்றது . திருவள்ளுவ ர் காலம் தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரை வள்ளுவத்தின் தாக்கமும் செல்வாக்கும் படைப்புகளில் வலுவாகத் தொடர்கின்றன . அந் நிலையில் 1997 ஆம் ஆண்டு வெளியான ’ ’ நேருக்கு நேர் ’ படத்தில் வைரமுத்து இயற்றி ய ‘அவள் வருவாளா’ என்று தொடங்குகின்ற இன்பாடல் திருக்குற ளின் தாக்கமுற்றதா கத் திகழ்கின்றது . காதல் உளவியலை மையமிட்ட இப் படத்தில் கதைத் தலைவன் காதலியின் வரவைவேண்டி, அவளால் ஏற்பட்ட தாக்கத்தைத் தாகத்துடன் தோழனிடம் எடுத்துரைக்கும்போது, தலைவி கண் பார்வையின் ஈர்ப்பாற்றலை விளக்கி, தன் காதல் உணர்ச்சியை விவரிக்கும்போது, கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு என்று பாடுகின்ற...
- Get link
- X
- Other Apps
திருக்குறளில் ‘ என்ன ’ – கருத்தாய்வு புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் இலக்கியத்தில் பயில்கின்ற ஒவ்வொரு சொல்லும் மதிப்புமிக்கவை ; கருத்துப் பொதிந்தவை . அதிலும் அற இலக்கியச் சொல்லாடல் நோக்கித் தெளியத்தக்கது . இந் நிலையில் ‘ என்ன ’ என்னும் சொல் வள்ளுவத்தில் பலபொருட்சொல்லாக இயல்வதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை அமைகின்றது . குறட்பா எண் சொல்லாட்சி கருத்து 144 என்னாம் [ என்ன + ஆகும் ] வினா மூலம் வற்புறுத்தல் 705 என்ன ஒன்றுமில்லை என உறுதிப்படுத்தல் 987 என்ன வினா மூலம் வற்புறுத்தல் 1100 என்ன ஒன்றுமில்லை எனஉறுதிப்படுத்தல் 1122 என்ன அதைப் போன்றது என்று உவமித்தல் ...
- Get link
- X
- Other Apps
வினையியலில் பொருண்மைக் கொள்கைகள் புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பாங்குடன் தமிழை ஆய்கின்ற விளக்கவியல் நூலான தொல்காப்பியம் தொடரை அடிப்படை மொழியலகாகக் கொண்டு , வாய்பாடுகளால் இலக்கணம் வகுத்துள்ளது . அதனால் ஒவ்வொரு நூற்பாவும் தொடர் இலக்கணக் கொள்கைகளாக அமைகின்றன . பெயர் , வினை , இடை , உரி ஆகிய சொற்கள் இலக்கண , பொருண்மை முறைப்படி இணைந்து தொடரை ஆக்குகின்றன . ஒரு தொடரில் எழுவாயின் இயக்கத்தைத் தெரிநிலை வினைமுற்றும் [ முருகன் வருகின்றான் ] ; எழுவாயின் இயல்பைக் குறிப்பு வினைமுற்றும் [ முருகன் நல்லவன் ] சுட்டுகின்றன . சில தொடர்களில் எழுவாய் புற நிலையில் தோன்றாமல் இயல்வதுமுண்டு [ எனக்குத் தந்தான் ]. இவற்றுள் தொடரில் வினைச்சொல்லின் இயக்கத்தை எடுத்துரைக்கின்ற தொல்காப்பிய வினையியல் , 203 ஆம் நூற்பாவில் ஏழு தன்மையொருமை வினைமுற்றுகளைப் பட்டியலிட்டு , அடுத்த நூற்பாவில் , அவற்றுள் செய்கு என் கிளவி வினையொடு மு...
- Get link
- X
- Other Apps
வள்ளுவத்தில் பெயராகவும் உரியாகவும் ‘ வாள் ’ புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் விளம்புகின்ற விழுமியங்களாலும் சொல்லாட்சிச் சீர்மையாலும் உலகப் புகழ் பெற்றுள்ள வள்ளுவம், வாள் என்னும் பழந்தமிழ்ப் பெயர்ச் சொல்லைப் பொருட்பன்மையில் ஆண்டுள்ளதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது. வீட்டிலும் காட்டிலும் போர்க்களத்திலும் ஒன்றை வெட்டற்குப் பயன்படும் கருவி வாள் . இது இன்றைய வழக்கிலும் பெயர்ச்சொல்லாகப் பயில்கின்றது. இதோடு தொல்காப் பியம் உரியியல் 69ஆம் நூற்பாவில் சுட்டுமாறு ஒளி என்னும் பொருளிலும் வள்ளுவத்தில் பயில்கின்றது [ வாள் நுதல் ]. இம் மொழி மரபில் வள்ளுவம், நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாள து உணர்வார்ப் பெறின் ( 334 ) என்றும், 614, 726, 727, 882 ஆகிய குறட்பாக்களிலும் வாள் என்னும் சொல்லைப் பெயர்ச் சொல்லாக ஆண்டுள்ளது. இதோடு, ஒளி என்னும் பொருளில் உரிச்சொல்லாக, வாள ற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விர...
- Get link
- X
- Other Apps
திருக்குறளில் ‘அற்கா’ × ‘ அற்குப’ – முரண் மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் மனித எண்ணங்களும் வாழ்வியலும் ஏற்றத்தாழ்வுடையவை; மாறுபடக் கூடியவை. அதனால் வாய்க்கும்போதெல்லாம் அறச்செயல்களை உடனுக்குடன் செய்துவிடவேண்டும் என்று அற இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. இந் நிலையில், அற்கா இயல்பிற்றுச் செல்வம் ; அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் (333) என்னும் குறட்பா உன்னத்தக்கது. இக் குறட்பாவில், செல்வம் நிலையற்றது; அதனால் உள்ளதைக் கொண்டு உடனுக்குடன் நலம்புரிக என்னும் இரண்டு தொடர்கள் அமைந்துள்ளன. இயல்பால் நிலையற்றதை ச் செயலால் நிலைநிறுத்துக என்னும் முரண்மை செல்வத்தின் நிலையாமையைத் தெளிவித்து, நன்மை வளர வலியுறுத்துகின்றது. அ ல் குதல் என்பதற்குத் தங்குத...
- Get link
- X
- Other Apps
வள்ளுவம் கண்ட ‘ நல்லாள் ’ - உயர்வுப் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் மக்களின் மேன்மைக்காகப் படைக்கப்பட்ட திருக்குறள் மக்கள் மொழியிலும் விழுமியங்களை விளம்புகின்றது . அதனால் இலக்கிய விழுமியங்கள் எளிதில் மக்களைச் சென்றடைந்து ஏற்கப்படுகின்றன . உயர்ந்த பண்புகளையுடைய / வளமையான சிறந்த பெண்ணை நல்லாள் என்பர் . இச் சொல்லை க் கீழ்வருகின்ற 924, 1040 ஆகிய இரண்டு குறட்பாக்களில் திருக்குறள் ஆண்டுள்ளது . நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் ; கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு ( 924 ) என்னும் குறளில் நாணத்தைச் சீர்மை சான்ற உயர்ந்த பெண் ணாக உருவகித்துக் காட்சிப்படுத்துகின்றார் . போதைப் பழக்கம் தீமைகளை வாரிக்கொடுக்கின்ற பெருங்குற்றமும் பிறழ் உணர்ச்சியும் ஆகும். போதைக்கு அடிமையானவனுக்குத் தீமை / அவமானம் / புறக்கணிப்பு ஆகியன பற்றிய நாணம் ஏற்படாது . ஆகவே போதைப் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிடுக என்று இக் குறட்பா வ...