Posts

Showing posts from February, 2025
                                                    கண்மாறல் : ஒருசொல் -கருத்தாய்வு புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             மொழியாலான கவின்நுண்கலைப் படைப்பான இலக்கியம் சொல்லாட்சியில் புதுமை/நுட்பங்களை ஆள்கின்றது. மரபுத்தொடர் போன்ற சிறப்புச் சொற்களைத் திறமையாகக் கையாண்டும் புதிதாகப் படைத்தும் மாற்றியும் பொருள் நுட்பத்தை வாய்ப்பாக்குகின்றது. இதை உரை விளக்கித் தெளிவுறுத்துகின்றது. மலர்காணின் மையாத்தி நெஞ்சே ! இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று ( குறள் 1112 ) என்னும் குறட்பா உரையில் பரிமேலழகர், “ மையாத்தல் : ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல் ; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல் ” என்று விளக்கியுள்ளார் . இதனால் வடிவ நிலையில்  இரண்டு சொற்களின் கூட்டாகத் தோன்றுகின்ற சில சொற்கள், பொருள் நிலையில் ஒரு சொல்லாக இயல்வதை அறியலாம் . இவ்வாறே,       ...
                                               பழந்தமிழில் வாகை – பொருண்மை நோக்கு புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் இயற்கையோடு இயைந்து புறப் பண்பாட்டுத் தாக்கமில்லாத மேன்மையான இயல்நெறி வாழ்க்கை வாழ்ந்த பழந்தமிழர் பல்லுயிர் வளத்தைப் போற்றினர் . அதனால் கருத்துவிளக்கத்திலும் போரியலிலும் வாகைப் பூ போன்ற இயற்கைப் பொருட்களை ஈடுபடுத்தினர் . சங்க இலக்கியங்களில் வாகை என்னும் ஒன்றன்பாற் பெயர்ச்சொல் ஒப்புருச் சொல்லாக [ பல பொருளில் ] இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது . இச் சொல் வாகைப் பூவை க் குறிப்பதாக , பெரும்பாணாற்றுப்படை { அடி 109 ], குறிஞ்சிப் பாட்டு { அடி 67 ], பதிற்றுப்பத்து [ பா 43 அடி 23 & பா 88 அடி 10 ] பரிபாடல் [ பா 14 அடி 07] ஆகிய அடிகளில் இயல்கின்றது . இவற்றுள் பெரும்பாணாற்றுப்படை ” புகழா வாகைப் பூ ” என்று வாகைத் திணையிலிருந்து   பூவைப் பிரித்துக்காட்டுகின்றது . இச் சொல் வாகை மரத்தைச் சுட்டுவதாக , குறுந்தொகை { பா 07 அடி...
                                    இரண்டாம் குறட்பாவின் தொடர்ப் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்             உயர்தனிச் செம்மொழியான தமிழ் இலக்கிய வழக்கும் பேச்சுப் பயில்வும் கொண்ட இரட்டை வழக்கினதாகும் . பொருளுணர்தலில் இவ் இரண்டிலும் தொடர்கள் அடிப்படை அலகுகளாக இயல்கின்றன . செறிவான மொழிநடை கொண்ட இலக்கியத்தில் புலமை வெளிப்பாடாகவும் யாப்பு முதலிய கட்டுப்பாடுகளாலும் சீதையைக் கண்டேன் என்னும் பொதுவான அமைப்பிலிருந்து தொடர்கள் மாறிக் கண்டேன் சீதையை என்றும் அமைவதுண்டு . இதனால் தொடர்ப் பொருண்மை சிதையாது ; ஆனால் நடைப் பொருண்மை மாறுபடும் ; ஒரு தொடரில் எதை முதலில் சுட்டி அழுத்தம் கொடுக்கப்படுகின்றது ? என்பது புலனாகும் .              குறள் வெண்பாவில் இயல்கின்ற வள்ளுவத்தில் ஒரு குறட்பாவைத் தெளிவாகக் கருத்தறிய அது எவ் அதிகாரத்தில் உள்ளது ? அதில் எத்தனை தொடர்கள் உள்ளன ? ஒவ்வொரு தொடரிலு...
                                                                                    ஏணிக்கு எத்தனை பல்? கண்?  மால்பு -பொருண்மை நோக்கு புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             தேவைக்கேற்ப மனிதர் புழங்கு பொருட்களை / கருவிகளை ஆக்கிப் பயன்படுத்துகின்றனர். எழுது பொருட்கள், கலப்பை, சமையல் பண்டங்கள், போர்க் கருவிகள், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றை ஆக்கியதோடு, கீழிருந்து மேலேறப் படிக்கட்டோடு,  மூங்கிலிலும் கயிற்றிலும் படிக்கட்டைப் போன்று ஏணி செய்து பயன்படுத்துகின்றனர். பழங்காலத்தில் மதில்களில் ஏணி இருந்தது. இன்றைய வளர்ச்சியில்  வகைவகையான ஏணிகள் விற்பனைக்கு வருகின்றன. அண்மையில் ஏணி வாங்கக் கடைக்குச் சென்றபோது ஒரு கடையில் , எத்தனை பல் ஏணி வேண்டும்?  என்றும் மற்றொரு கடையில் , எத...
                           தாளிணை × தாளினை- சொற்கட்டமைப்பு வேறுபாடு புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             தமிழ் ஒட்டுமொழி; அடிச் சொல்லுடன் இலக்கண, தொடர், பொருண்மைப் பொருத்தத்துடன்  பின்னொட்டுகள் இணைக்கப்பட்டுச் சொற்கள் கட்டமைக்கப்படுகின்றன. அதாவது பொருண்மைக் கூறுகளைப் பொருத்தமுடன் இணைத்து, ஒவ்வொரு சொல்லும் தனிதனியாகப் பொருள் சுட்டுமாறு சொற்கள் ஆக்கப்படுகின்றன. சான்று:             என்ன செயல் + எப்போது + யார் என்னும் பொருண்மைக் கட்டமைப்பில் பேசு+கின்று+ ஆன் > பேசுகின்றான் என்னும்  ஆண்பால் படர்க்கை நிகழ்கால வினைமுற்று ஆக்கப்படுகின்றது. இந்தப் பொருண்மைக் கூறில்  எந்தவொன்றை மாற்றினாலும் சொற்பொருள் வேறுபடும். இந்தக் கட்டமைப்பைப் பள்ளி மாணாக்கர்க்கு உணர்த்தினால் பிழை தவிர்க்கப்படுவதோடு மொழித் திறனும் மேம்படும். இன்று பள்ளி மாணாக்கர் என்னிடம் *தாளிணை* என்னும் தொடர்ச் சொல்லைப் பிரித...