Posts

Showing posts from July, 2024
  655 ஆம் குறட்பாவின் இருமைப் பொருண்மை : செயலும் உணர்வும் பேராசிரியர் குழந்தைசாமி , புதுச்சேரி               மானுட மேம்பாட்டிற்கும் வெற்றிக்கும் வாய்ப்பாகின்ற வள்ளுவம் , மனித எண்ணங்களை ஆராய்ந்து அவற்றை வெற்றிகொள்கின்ற முறையையும் எடுத்துரைக்கின்றது . இந் நோக்கில் ஆட்சி ஆளுமை / உளவியல் / மனித உறவியல் ஆகியன தொடர்பான , எற்றென்று இரங்குவ செய்யற்க ; செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று ( 655 ) என்னும் குறட்பாவின் இருமைப் பொருண்மை கருதத்தக்கதாகும் . அதாவது வருந்தத்தக்க இழிசெயல்களைச் செய்யலாகாது : செய்துவிட்டால் திருத்திக்கொள்க ; மென்மேலும் அதற்காக வருந்தக்கூடாது என்னும் உளவியல் கொள்கை இதில் எடுத்துரைக்கப்படுகின்றது . இதிலுள்ள எற்று = இதைச் செய்துவிட்டோமே ; ஏல் = விட்டால் : அன்ன = அத்தகையவற்றை ஆகிய சொற்களின் பொருளைப் புரிந்துகொண்டு , மற்று என்னும் இடைச்சொல் வினைமாற்றுப் பொருளில் [ நோக்குக : தொல்காப்பியம் , நூற்பா 747 ], அதாவது முன் தொடரில் சுட்டிய வினையினும் வேறான வினையைச் சுட்டி ஆளப்படுகிறது என்பதை அறிந்து , குற...