பல்லியாடிய- புறநானூற்று உழவியல் கலைச்சொல் புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் இலக்கியங்களால் கதை, வரலாறு, பண்பாடு, முருகியல், விழுமியங்கள், நிலைபேறுடைய மானிட மதிப்புகள் ஆகியவற்றோடு பல்துறைக் கலைச்சொற்- களையும் அறியலாகின்றது. மக்களை/ மானுடத்தை மையமிட்டுப் படைக்கப்பட்ட சங்கச் செய்யுள்களில் இவை இயல்பாகப் பயில்கின்றன. ”வெப்புள் விளைந்த வேங்கை... என்று தொடங்குகின்ற, வேள்பாரியைக் கபிலர் பாடிய புறநானூற்றின் 120ஆம் பாவின் தொடக்கத்தில் வரகு / தினைப்புல உழவியல் விளக்கப்பட்டுள்ளது. மழை பொழிந்து ஈரமான நிலத்தைப் புழுதியாகும்படி பல முறை உழுது, வித்திட்டுக் களையைக் கருவியால் அகற்றி, விளைந்த பின்னர் அறுத்தனர் என்று படம்பிடிக்கப்பட்டுள்ளது. இதன் 04ஆம் அடியில், பல்லியாடிய……… என்று பெயரெச்சமாகப் பல்லியாடல் என்னும் உழவியல் கலைச்சொல் ஆளப்பட்டுள்ளது. இது வயலில்...
Posts
Showing posts from October, 2025
- Get link
- X
- Other Apps
கசடு- வள்ளுவ ஆட்சிப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்பொருண்மைக் களம் விரிவானது; ஆராயத்தக்கது. இரட்டை வழக்காலும் கால வளர்ச்சியாலும் அணுகுமுறையாலும் ஒரு சொல்லின் பொருளில் விரிவும் மாறுபாடும் தோன்றுவதுண்டு. அத்தகைய பல்பொருளதான பழந்தமிழ் ஒன்றன்பால்ப் பெயர்ச்சொற்களுள் கசடு என்பதும் ஒன்றாகும். மு. சண்முகனாரின் தமிழ் அகராதி: கசடு= குற்றம் ; அழுக்கு ; மாசு ; தழும்பு ; ஐயம் திரிபுகளாகிய குற்றங்கள் ; வடு ; அடிமண்டி ; குறைவு . ( https://www.tamilvu.org/ta/library-ldttam-html-ldttamws-159468 ) ஆகிய பொருளைச் சுட்டுகின்றது. சங்க காலத்தில், அழுக்கு, குற்றம் என்னும் கரு...
- Get link
- X
- Other Apps
தொல்காப்பியத்தில் ’மை ’ – பொருட்பன்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் ஒட்டு மொழியான தமிழ் மொழியின் சொற்பெருக்கில் ஓரெழுத்தொருமொழி ஒரு கூறாகும். அந்தச் சொல் வேறு இலக்கண வகையில் இயல்வதுண்டு. கை, மை, அல் போல்வன இவண் நோக்கற்பாலன. [வரு கை, ஆ மை, கோ ரல் ]. இந் நிலையில் மை என்னும் சொல் பொருட்பன்மையில் தொல்காப்பியத்தில் இயலுமாற்றை எடுத்து -ரைப்பதாக இக் குறிப்புரை அமைகின்றது. தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கைகளால் அறிவதோடு, அவரது நடையாலும் தமிழின் இயங்கியலைத் தெளியலாம். கீழ்வருகின்ற நூற்பாக்களை நோக்குக: சேயோன்மேய மைவ ரை உலகமும் ( நூ. 952) மை யறு சிறப்பின் உயர்ந்தோ...
- Get link
- X
- Other Apps
வள்ளுவத்தில் ‘ அன்று ‘ – கருத்தாய்வு புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்களம் விரிவும் நுட்பமும் கொண்டது. அதனால் முழுத் தொடரில் அமைத்துச் சொற்களின் கருத்தைச் சூழலுக்கேற்பத் தெளியவேண்டும். ஒவ்வொரு சொல்லும் பொருள் குறிப்பன; ஆயினும் அது தொடரில் உறுப்பாகும்போது கருத்து அறியப்படும். காட்டாக ஐ, பிடி போன்ற சொற்களைக் கருதலாம். அம் முறையில் அன்று என்னும் சொல் , சூழலுக்கேற்ப உறழ் பொருள் பயப்பதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது. அன் று அ றிவாம் என்னாது அறஞ்செய்க ; மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை ( 36) என்னும் குறட்பாவில் குறிப்பிட்ட / பின் நாளில் என்னும் பொருளில், இன்று போலுமாறு ஒன்றன்பால் காலப் பெயராக இச் சொல் அமைகின்றது. அடுத்து, நன்றி மறப்பது நன் று அ ன்று ; நன்றல்ல...
- Get link
- X
- Other Apps
752 ஆம் குறட்பாவின் தொடர்ப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் இலக்கியத் தொடரமைப்பு யாப்புக் கட்டுப்பாடு , மொழிநடை முதலிய காரணங்களால் பொது இயல்பிலிருந்து வேறுபடுவதுண்டு . சான்றாக , ‘ நான் செடியை நட்டேன் ’ என்பதை ’ நட்டேன் செடியை ’ என்றும் ஆள்வர் . பொருள்கோள் நெறிப்படியும் சூழலுக்கேற்பவும் முறையாகப் பொருளறியவேண்டும் . திருக்குறள் தொடரமைப்பில் சில மாற்றங்கள் அறியப்படுகின்றன . இவற்றை உரைநடைத் தொடராக்கி , விடுபட்டவற்றை இணைத்தும் முறைப்படுத்தியும் பொருளுணரவேண்டும் . இம் முறையில் 752 ஆம் குறட்பாவின் தொடர்ப் பொருண் மையை அணுகலாம் . பொருட்பால் , அங்கவியல் / கூழியலிலுள்ள பொருள் செயல் வகை அதிகாரத்தின் , இல்லாரை எல...