752ஆம் குறட்பாவின் தொடர்ப் பொருண்மை

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                இலக்கியத் தொடரமைப்பு யாப்புக் கட்டுப்பாடு, மொழிநடை முதலிய காரணங்களால் பொது இயல்பிலிருந்து வேறுபடுவதுண்டு. சான்றாக, ‘நான் செடியை நட்டேன்என்பதைநட்டேன் செடியைஎன்றும் ஆள்வர். பொருள்கோள் நெறிப்படியும் சூழலுக்கேற்பவும்  முறையாகப் பொருளறியவேண்டும்.

            திருக்குறள் தொடரமைப்பில் சில மாற்றங்கள் அறியப்படுகின்றன. இவற்றை உரைநடைத் தொடராக்கி, விடுபட்டவற்றை இணைத்தும் முறைப்படுத்தியும் பொருளுணரவேண்டும். இம் முறையில் 752ஆம் குறட்பாவின் தொடர்ப் பொருண் மையை அணுகலாம். பொருட்பால், அங்கவியல்/ கூழியலிலுள்ள பொருள் செயல் வகை அதிகாரத்தின்,

                இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை

             எல்லாரும் செய்வர் சிறப்பு  (752)

என்னும் குறட்பாவின் தொடரமைப்பு நோக்கித் தெளியத்தக்கது.

    இக் குறட்பாவில் முரணான இரண்டு தொடர்கள் உள்ளன. அவையாவன:

ü  செல்வ வளம் இல்லாதவரை அனைவரும் எள்ளுவர். ஆனால்/ மாறாக,

ü  செல்வம் நிறைந்தாரை அனைவரும் பணிந்து போற்றுவர்.

ஆனால், குறட்பாவில் எது இல்லாரை என்று சுட்டவில்லை. எனவே அடுத்த தொடரிலுள்ள செல்வரை என்னும் செயப்படுபொருளை இயைத்துக் கொண்டுகூட்டிப் பொருளுணரப்படுகின்றது. அவ்வாறே கருத்தை வற்புறுத்தவேண்டி, எழுவாயும் பயனிலையும் வரிசை முறை பிறழ்ந்துள்ளதால், இயல்பாக்க வேண்டும். மேலும் ஆனால் என்னும் முரண் தொடரிணைப்பானை அமைத்துக்கொள்ளலாம். இப்போது குறட்பாவின் கருத்து மயக்கமின்றிப் புரியும்.

            இவ்வாறு குறட்பாக்களைத் தொடர்ப் பொருண்மை நோக்கில் அணுகின் தெளிவு வாய்ப்பாகும்.

  நன்றி: இணையத் தரவுகள்                      ******

   

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு