Posts

Showing posts from September, 2023
                                               அகராதிச் சொல்லியல் நோக்கில் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் ‘ வண்ணம் ‘                                        முனைவர் ப . கொழந்தசாமி , புதுச்சேரி .                           மக்களின் கருத்துப் பயன்பாட்டுக் கருவியான மொழி , நுட்பமானது ; மாறுகின்ற / வளர் போக்கினது ; நடை வேறுபாடு கொண்டது . யார் ? எவருக்கு ? எதை ? எதற்காக ? எவ் ஊடகத்தில் ? எப்போது ? உணர்த்துகின்றார் என்பதிற்கேற்ப மொழியமைப்பு இயலும் . ஒரு மொழியின் அமைப்புகளையும் அவற்றின் இயக்கத்தையும் இயைபையும் , அந்த மொழியால் விளக்குகின்ற ...
                                திருக்குறளில் ‘ நீடு ’ : சூழற் கருத்துப் பொருண்மை முனைவர் ப . கொழந்தசாமி , புதுச்சேரி . மனித மேன்மைகளை எடுத்துரைத்து , மானுட வளர்ச்சிக்கு வித்தூன்றி , மனிதவள மேம்பாட்டை ஊக்குவிக்கும் வள்ளுவம் , ஒவ்வொரு சொல்லிலும் நுட்பமாக வாழ்வை வளமாக்குகின்ற விழுமியத்தை விண்டுரைக்கின்றது . ஆகவே குறட்பாக்களை மேம்போக்காகப் படிக்காமல் , ஒவ்வொரு சொல்லையும் பொருண்மையியல் அணுகுமுறையில் உற்று நோக்கினால் உள்பொருள் புலப்பட்டுத் தெளிவு வசப்படும் : இழிதகைமை தீர்ந்து , கட்டறுத்து மேம்படலாம் . எனவே எந்தப் பொருண்மைக் களம் / சொல் / தொடர்ப் பயன்பாடு ஆகிய மொழி மற்றும் மொழியல்லாப் புறச் சூழலில் , குறிப்பட்ட ஒரு சொல் ஆளப்பட்டுள்ளது என்பதை நோக்கிப் பொருளுணரவேண்டும் . அவ் வகையில் நீடு என்னும் நீள் அடியாகத் தோன்றிய முதனிலைத் தொழிற்பெயர்    வினையெச்சப் பொருளில் , பயில்வதை எடுத்துரைப்பதாக இப் பகுதி இயல்கின்றது . மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்         ...
                                                 வள்ளுவ எண்குணத்தான்                                  பேராசிரியர் ப . கொழந்தசாமி , புதுச்சேரி வான்மறை வள்ளுவம் வாழ்வியல் விழுமியங்களை விளக்கி , மானுட வெற்றிக்கும் மேன்மைக்கும் வழிவகுக்கின்றது ; அதோடு ஏற்புடைய பண்பாட்டு மரபுகளையும் தத்துவ விளக்கங்களையும் எடுத்துரைப்பதைக் கடவுள் வாழ்த்து அதிகாரத்தால்   அறியமுடிகின்றது . அவ் வகையில் , கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை   (  குறள் 0 9 ) என்னும் குறட்பாவில் , எண்குணத்தான் என்கின்ற பெயர்த் தொடர் , உரை வேற்றுமைக்கும் சிந்தனைக்கும் வாய்ப்பாகின்றது . இதில் கோளில் என்பது பயனற்ற என்னும் பொருளில் இயல்கின்றது ; எண்குணத்தானை வணங்காத தலை  பயனற்றது என்று கடிவதன் மூலம் , வணங...