தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் ‘ தோல் ’ – சொற்பொருண்மை ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . கன்னித் தமிழின் சொற்களஞ்சியம் வரம்பில்லா வளமுடையது ; காலந்தோறும் சொற்களின் பொருள் மாறியும் விரிந்தும் வருகின்றது . அதனால் ஒரு பனுவலை வாசிக்கும்போது , அதில் பயில்கின்ற ஒவ்வொரு சொல்லின் பொருளையும் நோக்கிக் கருத்தறிந்து முறையாகப் பொருள் அறிந்தால் விளம்பப்படுகின்ற விழுமியத்தைத் தெளியலாம் . அந் நோக்கில் , தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் பலபொருட்சொல்லான ‘ தோல் ’ பெயராகவும் கலைச்சொல்லாகவும் வினையாகவும் பயிலுமாற்றை அணுகிக் கருத்தறிவதாக இக் கட்டுரை இயல்கின்றது . தொல்காப்பியத்தில் : தமிழின் சொல் வளத்தையும் பொருண்மை அமைப்பையும் எடுத்துரைக்கின்ற தொல்காப்பியத்தில் , சொல் வழக்கு வரையறையை / தொடராக்க நெறியை மரபியலில் சுட்டுகையில் , தோல் என்னும் சொல் மரம் / புல் ஆகியவற்றின் புறத் தோலை , பொது வழக்காக இன்றுவரை பயி...
Posts
Showing posts from December, 2023
- Get link
- X
- Other Apps
தொல்காப்பியத்திலும் வள்ளுவத்திலும் ‘விழுமம்’- கருத்தாய்வு ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம்,, புதுச்சேரி. உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொல்வளம் விரிந்து பரந்துள்ள- தோடு, பொருண்மையியல் ஆய்வுக்கும் வாய்ப்பாகிறது. இத்தகைய சீர்மையை அறியத் தொல்காப்பியமும் இலக்கியங்களும் அடிப்படையாகின்றன. அவ் வகையில் விழுமம் என்னும் ஒப்புருப் பெயர்ச்சொல்லின் கருத்து விளக்கத்தைத் தெளிவுறுத்துவதாக இக் கட்டுரை இயல்கின்றது. இவ் அணுகுமுறையால் படைப்பாளரின் விளம்பு பொருளை முறையாக உணரவியலும். தொல்காப்பியத்தில் : அகராதிப் பண்புடன் அமைந்துள்ள உரியியலின், விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் ( நூற்பா 836 ) என்னும் நூற்பா, மூன்று பொருளில் விழுமம் பயில்வதைச் சுட்டுகின்றது. சீர்மை / சிறப்பு என்கின்ற மேன்மையை உணர்த்துவதோடு, இடும்ப...
- Get link
- X
- Other Apps
வள்ளுவத்தில் ‘ தாள் ’ முனைவர் ப . கொழந்தசாமி , தமிழியல் துறைத் தலைவர் , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . வான்மறையான வள்ளுவம் மனிதச் சிந்தனைகளையும் வாழ்க்கை நிகழ்வுகளையும் கூர்ந்து நோக்கி நல்லன ; அல்லன என்பவற்றைச் சுட்டி , விழிப்புணர்வை விதைத்து , தன்னிலை உணர்ந்து தன்வலிமை தெரிந்து செயல்பட , வாழ்வாங்கு வாழ அறமுரைத்து மானுட மேன்மைக்கு வழிகாட்டுகின்றது . அதனால் திருக்குறளில் மொழியப்பட்டுள்ள அறநெறிகளை முறையாக உணர , கலைச்சொற்களைத் தெளியவேண்டும் . அத்தகைய அறவியல் கலைச்சொற்களுள் ஒன்றான ‘ தாள் ’ என்பது வள்ளுவத்தில் பயிலுமாற்றை விளக்குவதாக இக் கட்டுரை இயல்கின்றது . தாள் : பொருண்மை : மனித உறுப்பான காலின் அடிப்பகுதி அடி , தாள் , பாதம் , உள்ளங்கால் என்னும் சொற்களால் பொது வழக்கில் பெயராக ...
- Get link
- X
- Other Apps
You are enough as you are Edited by: Dr. P. Kolandasamy, Puducherry UT. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் . திருக்குறள் ,359 The following points on our own inner power, how to recognize it, and use it to improve and change the things we have control over. “Honor your desire for a new life. Say yes to the small inkling of interest and curiosity that present them each day.” Sometimes it’s good to start small. If you’ve been drawn to something for a long time, but always dismissed it as not being for you, now is the time to let...
- Get link
- X
- Other Apps
வள்ளுவ ‘ தவல் ’- பொருண்மை நோக்கு முனைவர் ப . கொழந்தசாமி , புதுச்சேரி அற இலக்கியமான திருக்குறள் இலக்கிய , மொழித் தொழில்நுட்பத்தோடு அறிவுக்கு விருந்தாகவும் ஆய்வுக்கு வாய்ப்பாகவும் சீரிய வாழ்வுக்கு அடித்தளமாகவும் ஆக்கப்பட்டுள்ளது . அவற்றுள் சொற்பொருண்மை நோக்கும் ஒன்றாகும் . அந் நிலையில் தவல் என்னும் சொல்லை வள்ளுவம் ஆண்டுள்ள செம்மையை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது . ஒவ்வொரு சொல்லின் கருத்தையும் உற்றுநோக்கித் தெளியின் வள்ளுவ வாயுரை விளக்கமாகும் . தவ் - பொருண்மை : சொற்களை , வெளிப்படையாக / தெளிவாகப் பொருள் சுட்டுவன [ தாய் , அண்ணன் ]; குறிப்பால் ஆய்ந்தால் பொருள் அறியத்தக்கன [ சுர் , சல , தவ ] என்று இரண்டு வகைப்படுத்தலாம் . தொல்காப்பியம் , ...
- Get link
- X
- Other Apps
தூவி : வள்ளுவக் கருத்துப் பொருண்மை முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொல்லாய்வுக் களம் விரிந்து பரந்தது . கால வளர்ச்சியில் மொழி , சமூகம் , பண்பாடு , பிற மொழித் தாக்குரவு போன்ற காரணங்களால் சொற்பொருளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு , புதிய சொற்களும் ஆக்கப்படுகின்றன . இதனால் ஓர் இலக்கியத்தைப் படிக்கும்போது , முறையாக உளங்கொள்ள அதிலாளப்பட்டுள்ள சொற்களின் கருத்தை நோக்கி உணரவேண்டும் . அவ் வகையில் வள்ளுவம் ‘ தூவி ’ என்கின்ற பெயர்ச்சொல்லை ஆண்டுள்ள சீர்மையை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது . தூவி : வழக்காறு : தூ என்னும் பெயரடியாக , மென்மையானது என்னும் பொருளில் தூவி ( இறகு ) என்னும் பண்புச்சினைப் பெயரும் , வினையடியாக பரவலாக வீசி என்னும...