தூரனின் பொதுநல வேணவா= கண்ணுதல் பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி இலக்கியக் கருத்துப் புலப்பாட்டு நெறிகளில் மக்களுக்கு அறிமுகமான தொன்மக் கதைகளைச் சுட்டிக்காட்டுவதும் ஒன்றாகும். இதனால் படைப்பாளர் வாசகருக்கு நெருக்கமாவதோடு தெளிவையும் உண்டாக்குகின்றார். இவ் உத்தியைப் பன்முகப் பங்களிப்புக்காகப் போற்றப்படுகின்ற பெரியசாமித் தூரன் கண்ணுதல் போல என்னும் பாவில் (தூரன் கவிதைகள், ப. 143) கையாண்டுள்ளார். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைச் சிவபெருமான் உண்டு, தேவர்களுக்கு அமிழ்தம் கிடைக்கச்செய்தார் ; சிவன் நெற்றியில் கண்ணுடையவர் ஆகியன சிவனின் அருட்பெருக்கை வெளிப்படுத்துகின்ற தொன்மக் கதைகளாகும். இவற்றை மேற்சுட்டிய பாடலில் அமைத்துத் தூரன் மக்களுக்கு அறமுரைக்கின்றார். தீமை விளைவிக்க எண்ணாமல் , பொதுநலம் பெருக்குக ; மானுட வெற்றியை வாய்ப்பாக்குக என்று அழைக்கின்ற தூர...
Posts
Showing posts from June, 2024
- Get link
- X
- Other Apps
’செங்கோன்மை சிறக்க’ – 556ஆம் குறட்பாத் தொடர்ப் பொருண்மை பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி நாடோடியாகத் திரிந்த மனிதன் ஆற்றங்கரையில் சேரி அமைத்தபின் உடைமை வேட்கையும் கற்பு முறைமையும் ஏற்பட்டதை மானுடவியல் எடுத்துரைக்கின்றது. இவற்றைக் கண்காணிக்கவும் மக்களைக் காக்கவும் இறை / அரசு தோற்றுவிக்கப்பட்டது. மக்கள் நலனை மையமிட்டுச் ’செங்கோன்மை’ வாய்ந்த அரசுகள் ஆண்டபோது அரண்மனை/ கோவில் , வெண்கொற்றக் குடை, செங்கோல், காவல் மரம், கொடி போல்வன அரசச் சின்னங்களாக அமைக்கப்பட்டன. இதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் ஆகியவற்றாலும் அறியலாம். செங்கோன்மை, மன்னர்க்கும் மக்களுக்கும் நலம்பயக்கவேண்டியதைக் கொடுங்கோன்மை அதிகாரத்தில் வலியுறுத்தும் வள்ளுவம், மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை ; அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கு ஒ ளி (556 ) என்னும் குறளில், மக்கள் நலனை மையமிட்ட சீரிய/ நேரிய ஆட்சிமுறை அரசுக்குப் புகழையும் நிலைபேற்றையும் உண்டாக்கும். இல்லாவிட்டால் இகழ்ச்சியும் வீழ்ச்சியும் ஏற்படும் என்று எச்சரி...
- Get link
- X
- Other Apps
பணியமர்த்து முறையை வகுக்கின்ற 506ஆம் குறட்பாவின் தொடரமைப்பு பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி ஒரு குறட்பா ஒன்று அல்லது பல விழுமியங்களை வகுத்துரைக்கின்றது; அதற்கேற்ற சொற்களால் அக் குறட்பாவின் தொடர் / தொடர்கள் கட்டமைக்கப்படுகின்றன. இத்தகைய தொடர்க் கட்டமைப்பு முறைமையைத் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் வகுத்துரைத்துள்ளன. பொதுவாக, எழுவாய் + செயப்படுபொருள்+ வினைமுற்று என்னும் அமைப்பில் தொடர் அமையும். ஆனால் செய்யுள் கட்டுப்பாடுகளால் இத்தகைய தொடராக்கத்தில் திருவள்ளுவர் புதுமைகளைப் புகுத்தியுள்ளார். அதனால் குறட்பாத் தொடர்களைத் தொடர்ப் பொருண்மை அடிப்படையில் உரைநடைத் தொடரமைப்பில் தகவமைத்துக் கருத்தறியலாம். சான்றாக, அரசியலின் தெரிந்து தெளிதல் அதிகாரத்தில், அற்றாரைத் தேறுதல் ஓம்புக ; மற் றுஅ வர் பற்றிலர் ; நாணார் பழி ( 506 ) என்னும் குறட்பாவில் கீழ்வருமாறு இணையான மூன்று அறவுரைகள் இயல்கின்றன. Ø பொறுப்பான வாழ்க்கை அமைப்பும் அறிமுகமும் இல்லாதவரைத் தலைமைப் ...
- Get link
- X
- Other Apps
ஈரளபு இசைக்கும் இறுதி யில் உயிர் – தொல்காப்பிய மாட்டேற்றுப் பொருண்மை பேராசிரியர் குழந்தைசாமி , புதுச்சேரி . பல துறை ஆய்வுகளுக்கு நிலைக்களனாகவும் விளக்கவியல் இலக்கணமாகவும் அறிவுக்கு விருந்தாகவும் தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்ப்பதாகவும் புதுப் படைப்புகளை ஊக்குவதாவும் தொல்காப்பியம் விளங்குகின்றது . இதிலுள்ள ஒவ்வொரு நூற்பாவும் தமிழின் பொருண்மை இயங்கியலை இலக்கணப்படுத்துகின்றன . இதற்காகத் தொல்காப்பியர் கருத்துவிளக்கப் புலப்பாட்டு உத்திகளையும் கையாண்டுள்ளார் . அவற்றுள் மாட்டேறு ஒன்றாகும் . நூலின் ஓரிடத்தில் விளக்கப்பட்ட கொள்கை மற்றோர் இடத்திற்கும் பொருந்துகையில் , முன்னர்ச் சொன்ன இலக்கணத்தை மீண்டும் விளக்காமல் , அதைச் சுட்டிக் காட்டுவது ஓர் அறிவாக்க / சிக்கன / திறன் வளர்ப்பு / மாட்டேற்று முறைமையாகும் . தொல்காப்பியம் நெடுகிலும் பல நூற்பாக்களில் மாட்டேறு இயல்கின்றது . இடையியலில் பொருண்மைக் கொள்கை ஒன்றை விளக்குகையில் , ” ஈரளபு இசைக்கும் இறுதியில் உயிர் ” [ இல் = இல்லாத } ( நூற்...
- Get link
- X
- Other Apps
180 ஆம் குறட்பாவின் தொடர்ப் பொருண்மை பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி தொடரை மையமிட்டு இலக்கணம் இயம்புகின்ற தொல்காப்பியம் ஆங்காங்கே தமிழ்த் தொடரியல் கொள்கை களை வகுத்துரைத்துள்ளது . இவற்றுள் பொருள்கோள் , யாப்பு , குறை போல்வன சிறப்பாகச் செய்யுளுக்குரியவை . இதனடிப்படையில் இலக்கியத் தொடரமைப்பை அணுகினால் மயக்கம் ஏற்படாமல் புரிதிறன் சிறக்கும் . அதோடு பல கட்டுப்பாடுகளால் பொது அமைப்பிலிருந்து செய்யுளின் தொடரமைப்பு வேறுபடுகின்றது . இதை நோக்கிப் பாத் தொடரை முறையாக அறிந்துகொள்ளவேண்டும் . அம் முறையில் 180 ஆம் திருக்குறளின் தொடரமைப்பை விளக்கலாம் . இதன் தொட ர்களில் உறுப்புச் சொற்கள் குறைந்து / முறைமாறி இய ல்கின்றன. அந் நிலையில் , இறலீனும் எண்ணாது வெஃகின் ; விற லீ னும் வேண்டாமை என்னுஞ் செருக்கு (180 ) என்னும் இரண்டு தொடர்களால் ஆன குறட்பா விளக்கவேண்டியதாக உள்ளது. v தீய பின் விளைவை ...
- Get link
- X
- Other Apps
திருக்குறளில் எண்ணாது / என்னாது : ஒப்பொலி ப் பொருண்மை பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி மொழிப் பொருண்மைக் கட்டமைப்பில் அனைத்துச் சொற்களும் பொருண்மை சுட்டுவனவாக இயல்கின்றன. எனினும் பொருட்பன்மை, அடக்குதலும் அடங்குதலும், எதிர்மறை, ஒப்பொலிச் சொற்கள் போன்ற சிறப்புக் கூறுகள் உருவாகின்றன. இவற்றால் பொருட் குழப்பம் நேரலாம். அதனால் இத்தகைய சிறப்புப் பொருண்மை இயக்கத்தை அறிதல் தெளிவுக்கு வாய்ப்பாகும். தமிழில் வேறுபட்ட பொருள்கொண்ட சொற்கள் , ஒப்புமையுடைய ஒலியமைப்புடையனவாக [ ஆ ள் , ஆ ல் ] அமைவதுண்டு. இத்தகைய மயங்கொலிச் சொற்களை த் தொடர்ச்சூழல் நோக்கிப் பொருண்மைக் கூறுகளைப் பிரித்தறிந்து பொருள் தெளியலாம். சான்றாக , எண்ணாமல்; எ ன்னா மல் என்னும் சொற்களைக் கருதலாம். இவை முறையே, Ø ஒன்றன் பின் விளைவை எதிர்நோக்காமல் Ø எனக் கருதாமல் என்னும் மாறுபட்ட கருத்துடையன. இவை கீழ்வருமாறு குறள் மொழியில் இயல்கின்றன: இறலீனும் எண்ணாது வெஃக...
- Get link
- X
- Other Apps
அண்ணாத்தல் : அங்காத்தல் – பொருண்மை ஒப்பு பேராசிரியர் குழந்தைசாமி , புதுச்சேரி உயர்தனிச் செம்மொழியான தமிழில் பழந்தமிழ்ச் சொற்களும் இக்கால மக்கள் வழக்கில் பயில்கின்றன . ’ அண்ணாந்து ’ என்பது இத்தகைய பழமை கொண்டதாகும் . திருக்குறளில் , உண்ணாமை உள்ளது உயிர்நிலை ; ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு (255) என்னும் குறட்பாவில் , உலகில் பல்லுயிர்ச் சமன்மையை வலியுறுத்தும்போது ஊனுண் பதா ல் வாழவேண்டிய உயிரினங்களின் எண்ணிக்கை குறைவதை எச்சரி க்கத் தொன்மக் கருத்தான நரகம் [ மன்னிக்கவியலாத / ஈடுசெய்யமுடியாத இழப்பு] காட்டப்படுகின்றது . கொடூரச் செயலான உயிர்க் கொலையும் , அவ்வாறு கொல்லப்பட்ட உயிரினங்களின் ஊனை உண்பதும் ஏற்புடையதல்ல ; ஊனுண்போர் நரகத்தை அடைவர் ; ஒருபோதும் நரகத்தின் வாயில் திறக்காது; அங்கிருந்து தப்பமுடியாது என்று எச்சரிக்க அண்ணாத்தல் [ வாயைத் திறத்தல் ] என்...
- Get link
- X
- Other Apps
வள்ளுவம் எச்சரிக்கும் ‘ பாவி ’ கள் பேராசிரியர் குழந்தைசாமி , புதுச்சேரி அற இலக்கியமான வள்ளுவம் இதைச் செய் ; இது நல்லது என்று அறிவுறுத்துவதோடு இவை தீங்கானவை; அழிவை உண்டாக்குபவை என்றும் எச்சரிக்கின்றது. அவ்வாறு எச்சரிப்பவற்றைப் பாவி என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். இச் சொல் மக்களின் பேச்சு மரபிலிருந்து பெறப்பட்டதாகலாம். தனக்கும் சமூகத்திற்கும் ஒவ்வாத ஒன்றைச் செய்யும் கொடியவன் பாவி என்று அழைக்கப்படுகின்றான். அதாவது அடிப்படை மனித மாண்பிலிருந்து விலகி, அறிந்தும் அறியாதது போல, பாவனையாகத் தீமை செய்வது இந்தப் பிறழ் உணர்ச்சியாகும். நாட்டியத்தில் ’பாசாங்கு செய்’ என்று இச் சொல் வினை யாக இயல்வது இவண் ஒப்பத்தக்கது. திருக்குறளில், அழுக்காறு எனவொரு பாவி திருச்செற்றுத் ...
- Get link
- X
- Other Apps
‘ தார் ’ – சொற்பொருள் வரலாறு பேராசிரியர் குழந்தைசாமி நெடிய தமிழ்ச் சொற்பொருள் வரலாற்றில் அரசியல், பண்பாடு, வேற்று மொழித் தாக்கம் போன்ற காரணங்களால் சொற்பொருளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அம் முறையில் தார் என்னும் பெயர்ச் சொல் பழங்காலந்தொட்டுத் தமிழில் வழங்குமாற்றை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது. தார்: தொல்காப்பியத்தில் ” வரு தார் தாங்கல்” ( நூற்பா 1010 அடி 15) என்னும் வழக்கில் முன்னணிப் படை என்றும், “ கண்ணியும் தாரு ம்” ( நூற்பா 1582 ) என்று மலர் மாலை என்னும் பொருளிலும், இரு வேறு பொருளில் ஒப்புருச் சொல்லாக இயல்கின்றது. சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் இம் முறை தொடர்கின்றது. இக் காலத் தமிழில் , Ø வாழைத் தார் என்று வாழைச் சீப்புகளின் அடுக்கைக் குறிக்கின்றது Ø தார்ச் சாலை என்று சாலையமைக்கப் பயன்படும் கருப்ப...
- Get link
- X
- Other Apps
தூரன் கண்ட அறவியல் : காந்தீயம் பேராசிரியர் குழந்தைசாமி , புதுச்சேரி இலக்கியங்கள் மானுட மேன்மை க்கான கொள்கை வரைவுகளாக இயலவேண்டும் என்பது அறிவியல் திறனாய்வின் கொள்கையாகும். பழங்காலந்தொட்டு மக்களை நெறிப்படுத்தும் விழுமியங்களை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. மக்களின் அன்றாடச் சிக்கல்களை / சமூகச் சீர்கேடுகளை மனித உரிமை நோக்கில் இக்காலப் புத்திலக்கியங்கள் நடப்பியலாக வெளிப்படுத்தித் தீர்வையும் முன்மொழிகின்றன. படைப்பாளரின் சமூக மேம்பாட்டு அக்கறை யும் தீமை மீதான அறச் சீற்றமும் இதற்கு அடிப்படையாகும். நல்லாசிரியராகவும் திறன்மிக்க படைப்பாளராகவும் வளர்ச்சியில் வேட்கைகொண்டு இருபதாம் நூற்றாண்டில் பன்முகப் பங்களிப்பால் பெருமைகொண்ட பெரியசாமித் தூரன் ’இளந்தமிழா ’ நூலில் ” பாரினில் புதுநெறியைப் பரப்பிடவே காந்தி வந்தார்” (ப. 62) என்று அண்ணல் காந்தியடிகளைப் போற்றியதோடு, அவரது...
- Get link
- X
- Other Apps
392 ஆம் குறட்பாவில் ‘ என்ப’ – இரண்டு பொருண்மை பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்களஞ்சியம் நுட்பமானது; விரிவானது. அதனால் பல்பொருட் சொற்கள் இயல்கின்றன. சான்றாக, நடு என்னும் சொல் நடு ப் புள்ளி; மரம் நடு ஆகிய வழுக்குகளில் முறையே மையம்; ஊன்றுதல் என்று பொருள்படுகின்றது. இத்தகைய பொருட்பன்மை கொண்டதாக , எண் எ ன்ப ஏனை எழுத் து எ ன்ப ; இவ்விரண்டும் கண் எ ன்ப வாழும் உயிர்க்கு ( 392) என்னும் குறட்பாவிலுள்ள என்ப அமைகின்றது . இக் குறட்பா மானுட மேன்மைக்குக் கணிதம் முதலிய அறிவியலும்; இலக்கியம் உள்ளிட்ட கலைகளும் வாய்ப்பாவதை எடுத்துரைத்து. இவற்றை முயன்று கற்றுத் தேர்ந்து பயன்படுத்தி வளம்பெற வலியுறுத்துகின்றது. இதன் முதலடியிலுள்ள இரண்டு என்ப என்னும் பலவின்பால்ப் பெயர் ச் சொற்கள் எனப்படுவது என்னும் கருத்திலும் ; இரண்டாம் அடியில் என்ப என்னும் பலர்பால் வினைச்சொல் சொல்வ...