392ஆம் குறட்பாவில் ‘ என்ப’ – இரண்டு பொருண்மை

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

            உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்களஞ்சியம் நுட்பமானது; விரிவானது. அதனால் பல்பொருட் சொற்கள் இயல்கின்றன. சான்றாக, நடு என்னும் சொல்  நடுப் புள்ளி; மரம் நடு ஆகிய வழுக்குகளில் முறையே மையம்; ஊன்றுதல் என்று பொருள்படுகின்றது. இத்தகைய பொருட்பன்மை கொண்டதாக ,

எண்ன்ப ஏனை எழுத்து ன்ப; இவ்விரண்டும்
கண் ன்ப வாழும் உயிர்க்கு ( 392)

என்னும் குறட்பாவிலுள்ள என்ப அமைகின்றது. இக் குறட்பா மானுட மேன்மைக்குக் கணிதம் முதலிய அறிவியலும்; இலக்கியம் உள்ளிட்ட கலைகளும் வாய்ப்பாவதை எடுத்துரைத்து. இவற்றை  முயன்று கற்றுத் தேர்ந்து பயன்படுத்தி வளம்பெற வலியுறுத்துகின்றது. இதன் முதலடியிலுள்ள இரண்டு என்ப என்னும் பலவின்பால்ப் பெயர்ச் சொற்கள் எனப்படுவது என்னும் கருத்திலும் ; இரண்டாம் அடியில் என்ப என்னும் பலர்பால் வினைச்சொல்  சொல்வர் என்னும் பொருளிலும் வழங்கப்படுகின்றன. எனவே பல்பொருள் தன்மையை அறிந்து, முறைப்படி கருத்தறியலாம். வள்ளுவம் விளம்புகின்ற விழுமியங்களோடு, சீரிய நடைநலத்தாலும் சிறப்படைகின்றது.

                                            ***** 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு