321 ஆம் குறட்பாவின் தொடர்ப் பொருண்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் தனிச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள திருக்குறள் மொழித் தொழில்நுட்பங்களைக் கையாண்டு ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் தொடரமைப்பு உத்தியும் ஒன்றாகும். அதனால் குறட்பாக்களின் தொடர் அமைவை உற்றுநோக்கித் தெளியவேண்டும். அவ் வகையில், இரண்டு தொடர்களாலான, அறவினை யாதெனின் கொல்லாமை . கோறல் பிறவினை எல்லாந் தரும் ( 321) என்னும் குறட்பாவை நோக்கலாம். இதிலுள்ள அறவினை × பிறவினை ; கொல்லாமை × கோறல் ஆகிய முரண்மையைக் கருதுக. முதல் தொடரில் கொல்லாமையை வலியுறுத்துகின்ற வள்ளுவம் அனைத்து அறச் செயல்களின் பயன்களையும் கொல்லாமை உண்டாக்கும் என்று உறுதியாக எடுத்துரைக்கின்றார். அறவினை என்பதைப் பன்மையாக்கி, பயன்கள் என்பதை வருவித்துக் கருத்தறியலாம். இது உடன்பாட்டுத் தொடராகும். அடுத்த தொடர் கொலைச் செயலின் தீமையைச் சுட்டிக்காட்டுகின்றது. மற்ற தீய செயல்களால் உண்டாகி...
Posts
Showing posts from April, 2025
- Get link
- X
- Other Apps
செய்ய – பொருட்பன்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் இலக்கியங்களில் பயில்கின்ற சொற்கள், தமிழ்ப் பொருண்மை அமைப்பையும் அறிய வாய்ப்பாகின்றன. அவ்வாறே பொருண்மை நோக்கில் சூழலறிந்து சொல்லின் கருத்தறியவேண்டும். அவ் வகையில் செய்ய என்னும் எச்சச்சொல் பெயரெச்சமாகவும் வினையெச்சமாகவும் தொன்றுதொட்டு இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது. செய்ய திருவடி = சிவந்த தாள் செய்ய சிந்தை = நேர் சிந்தனை ஆகிய வாக்கியங்களில் பெயரின் பண்பைச் சுட்டுகின்ற பெயரெச்சமாக இச் சொல் இயல்கின்றது. இவண் ஒற்று மிகாது . செய்யச் சொன்னார் என்ன...
- Get link
- X
- Other Apps
Thirukkural couplet 453 encapsulates a timeless truth about human relationships and character. This couplet aligns well with the proverb "Tell me who your friends are, and I'll tell you who you are," highlighting that friendships should be formed thoughtfully, as they mirror and influence our character and path in life. This idea also finds echoes in many philosophical traditions: Confucianism: emphasizes the importance of virtuous companionship for moral development. Greek philosophy: Aristotle spoke about friendships of virtue — those based on mutual goodness — being the highest form. Biblical proverbs: warn about becoming like those you spend time with (“Bad company corrupts good character.” – 1 Corinthians 15:33). Courtesy : ChatG...
- Get link
- X
- Other Apps
உறைவி – பொருட்பன்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்களஞ்சியம் விரிவானது; ஆய்வுக்கு வாய்ப்பாவது; தமிழ்ப் பொருண்மை அமைப்பை வெளிப்படுத்தவல்லது. அந் நிலையில் உறைவி என்னும் பலபொரு ளொருசொல் அறிவுக்கு விருந்தாகின்றது. உறை என்னும் அடியாக ஆக்கப்படுகின்ற இச் சொல் உறைவிடம், உறைபவள் என்று பெயராகவும், பாலை உறைவி என்று வினையாகவும் ஆளப்படுகின்றது. இன்னாது உறைவி அரும் படர் களைமே ( புறநானூறு,பா.145 அடி 10 ) என்னும் அடியில் ’பெருந்துயரோடு வீட்டில் இருப்பவளின் துயர் களைக’ என்று உறைவி என்னும் பெயர்ச்சொல் இடவாகுபெயராகத் தலைவியைச் சுட்டுவதாக இயல்கின்றது. இதனோடு உரை, உறுவி போன்ற சொற்களையும் இணைத்துப் பார்த்தால் தெளிவு வாய்க்கும். இவ்வாறான சொற்களைக் கூர்ந்து ந...
- Get link
- X
- Other Apps
திருக்குறளில் ’ ஒன்று ’- பொருட்பன்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் இலக்கியங்கள் மொழியை மூலப்பொருளாகக் கொண்டு கருத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன. படைப்பாளர் தன் நோக்கத்திற்கும் மொழித்திறனுக்கும் ஏற்ப மொழித்தொழில்நுட்பத்தைக் கையாளுகின்றார். அப்போது மொழியால் படைப்பும் , படைப்பால் மொழியும் செறிவுறுகின்றன. இம் முறையில் திருக்குறளிலும் மொழிப் பயன்பாடும் சொல்லாட்சியும் அறிவுக்கு விருந்தாகி ஆய்வுக்கு வாய்ப்பாகின்றன. இக் குறிப்புரையில் ஒன்று என்னும் சொல் பெயராகவும் வினையாகவும் வள்ளுவத்தில் பயில்வது விளக்கப்படுகின்றது. ஓர் இலக்கியத்தைக் கற்கும்போது அதில் பயில்கின்ற ஒவ்வொரு கூறிலும் செறிக்கப்பட்டுள்ள பொருண்மையை/ உணர்ச்சியைத் தெளியவேண்டும். அதற்குச் சொல்லியல், தொடரியல் பொருண்மையியல் அறிவு வாய்ப்பாகும். சான்றாக, ஒன்று என்னும் சொல் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளதைக் கருதலாம். வறியார்க் கு ஒ ன்று ஈவதே ...
- Get link
- X
- Other Apps
புறநானூற்றில் எறும்பியல் / பேரிடர் மேலாண்மை / ஒழுங்கியல் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் பழந்தமிழர் இயற்கையோடு இயைந்து இன்வாழ்வு வாழ்ந்தனர் ; அதோடு இயற்கையிலிருந்து விழுமியங்களை வகுத்தனர். அம் முறையில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடிய புறநானூற்றின் 173ஆம் பாடல் எறும்பியலை/ பேரிடர் மேலாண்மையை / ஒழுங்கியலைச் சுட்டுகின்றது. கீழ்வருகின்ற விக்கிபீடியா விளக்கத்தைக் கருதுக. எறும்பியல் ( Myrmecology) என்பது , எறும்புகள் பற்றி அறிவியல் அடிப்படையி ல் ஆ யு ம் துறையாகும். இது பூச்சியியலில் ஒரு கிளைத் துறை ஆகும். எறும்பு கள் சிக்கலான சமூக அமைப்பைக் கொண்டுள்ளதால் , சமூக முறைமைகளின் படிமலர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்கா ன மாதிரியாக இன்றும் எறும்புகள் திகழ்கின்றன. எறும்பியலின் மு தன்மைக் கூறு கள்: · ...
- Get link
- X
- Other Apps
வள்ளுவம் சுட்டும் கருவி – சிறப்புப் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் தொல் மரபைப் போற்றுகின்ற வள்ளுவம் புதுமைக்கும் வாய்ப்பளித் துள்ளது . சான்றாக , கருவி என்னும் பெயர்ச் சொல் வள்ளுவத்தில் பயில்கின்ற பாங்கைக் கூறலாம் . தொல்காப்பிய உரியியலின் 57 ஆம் நூற்பா , கருவி எனும் உரிச்சொல் தொகுதி என்று பொருள்படும் என்று குறிக்க , சங்க இலக்கியத்தில் இவ் வழக்கைக் காணமுடிகின்றது . [ அகநானூறு பா 04; அடி 06 ]. இன்றைய வழக்கிலும் இசைக் கருவி , கைக் கருவி , துணைக் கருவி போன்ற வழக்குகள் இயல்கின்றன . அதாவது ஒன்றைச் செய்வதற்குத் துணையாகின்ற மண்வெட்டி , சுத்தி , கத்தி போல்வன ; கருத்தாடலில் மொழியையும் கருவியாகச் சுட்டுகின்றனர் . அறிவு அ ற்றங் காக்க...
- Get link
- X
- Other Apps
சிறுமுதுக்குறைவி – சிறுமியின் ஆளுமைப் பெருமை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் இலக்கியங்கள் சமூக மானுடவியல் கொள்கைகளை ஆங்காங்கே பதிவுசெய்கின்றன. இவற்றை உண்மையெனப் போற்ற இயலாவிடினும், இத்தகைய எண்ண ஓட்டம் நிலவியது என்பதை உணரலாம். இந் நிலையில் மகளிர் நிலை பற்றித் தொன்மைக் காலம் முதல் இன்று வரை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் சங்கப் பாக்கள் பெண்மையின் மாண்பைப் பல பாடல்களில் படம்பிடித்துக்காட்டுகின்றன. அகநானூற்றின் 17ஆம் கயமனார் பாடலில், மகட்போக்கிய செவிலித்தாய் தலைவனுடன் உடன்போன வளரிளமைப் பருவ மகளை ” சிறுமுதுக்குறைவி “ ( அடி 09 ) அதாவது இளைமையிலேயே அறிவு சான்றவள்/ திறன் மிக்கவள் என்று பாராட்டுகின்றாள். ஒரு சமூகத்தில் இத்தகைய மேன்மை நிலவினால், அது செம்மாந்ததாக மதிக்கப்படும். தமிழகத்தில் இவ்வாறான திறன்மை இருந்தது; அதை மென்மேலும் வளர்ப்பதாகக் குடும்பச் சீர்மையும் அறிவாக்க / திறன் மேம்பாட்டு முயற்சிகளும் அமையலாம...
- Get link
- X
- Other Apps
321 ஆம் குறட்பாத் தொடரிணைப்பான் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் திருக்குறள் மொழித் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு குறட்பாவையும் பொறுமையாகப் படித்துச் சிந்தித்தால் முழுக் கருத்தையும் தெளியலாம். அம் முறையில் குறட்பாக்களின் தொடரமைப்பும் தெளியத்தக்கதாகும். சான்றாக 321ஆம் குறட்பாவை அணுகலாம். அறவினை யாதெனின் கொல்லாமை ; கோறல் பிறவினை எல்லாந் தரும் (321) என்னும் கொல்லாமை அதிகாரக் குறள், எதையும் அழிக்காமை யை / கொல்லாமையை வலியுறுத்துகின்றது. இது அழித்தலான பிறழ் மனநிலையைக் கண்டிக்கின்ற உயிரிரக்க விழுமியமாகும். இது மொழிந்ததைத் தெளிவித்து விளக்குவதாகும். இக் குறட்பாவை ஆல் சேர்த்து ஒரு தொடராக, கொல்லல் / அழித்தல், பல தீங்குகளையும் விளைவிப்ப தால் , கொல்லாமை அற வினைகளுள் சிறந்ததாகும் என்றவாறும் உரைநடைப்படுத்தலாம். அல்லது க...
- Get link
- X
- Other Apps
ஆய்ந்தவர் – சூழல் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்லிங்கபுரம் திருக்குறளின் சிறப்புகளுள் அதன் நடைச் சீர்மையும் ஒன்றாகும் . மரபைப் போற்றியதோடு புத்தாக்க முயற்சியிலும் வள்ளுவர் ஈடுபட்டார் . ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் ( 662 ) என்னும் குறட்பாவில் , எதிரது காத்துத் திட்டமிடலும் தொய்வேற்படின் மனந்தளராமையும் ஆட்சியாளருக்குத் தேவை என்பதை வலியுறுத்துகின்றார் . இக் குறட்பா கருத்து வேற்றுமைக்கு வாய்ப்பளிப்பதால் மாறுபட்ட உரை விளக்கங்கள் எழுந்துவருகின்றன . இதனால் இதைப் படிப்பார்க்குத் தெளிவின்மை தோன்றலாம் . அதைத் தெளிவிக்கச் சூழல் பொருண்மை அணுகுமுறை , [ அதாவது ஒரு சொல்லை மொழிச் சூழல் , கருத்துப் புலம் , ஒத்த கருத்துகளை ஒப்பிடல் ] வாய்ப்பா வ தால் , தெளிவிப்பு முயற்சி இவண் மேற்கொள்ளப்படுகின்றது . ...
- Get link
- X
- Other Apps
பொருளியல் – இலக்கிய நுகர் முறைமையைத் தெளிவிப்பது புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் நுண்ணறிவால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களையும் 27 இயல்களையும் உள்ளடக்கியது. ஒவ்வோர் இயலின் தலைப்பும் தன்விளக்கம் உடையதாகவும் விளம்பு பொருளை அறிவிப்பதாக வும் இயல்கின்றது. உரையாசிரியர்கள் மற்ற இயல்களுக்குப் போலவே பொருளியலுக்கும் பெயர் விளக்கம் எழுதியுள்ளனர். 53 நூற்பாக்களைக் கொண்ட, பொருளதிகாரத்தின் ஐந்தாம் இயலான இது, அதிகாரத் தலைப்பைப் பெற்றதாகும். ஆகவே அடக்குசொல் லான அதிகாரமும் அடங்குசொல் லான இயலும் ஒத்த நோக்கின; அதாவது இலக்கியப் பாடுபொருளை விளக்குவன. பொருளதிகாரம் ஒன்பது இயல்களில் இலக்கிய வகைமை, வடிவம், முருகியல், உணர்ச்சிகள், படைப்பாக்க நெறிமை, மரபுகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்க, பொருளியல் மற்ற எட்டு இயல்களிலும் கூறப்படாமல் விடுபட்ட செய்திகளையும் வழுவமைதியையும் ஒழிபியலாக அமைந்து விளக்குகின்றது. அதனால் இலக்கியப் பொருண்மை குறித...