உறைவிபொருட்பன்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

           

உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்களஞ்சியம் விரிவானது; ஆய்வுக்கு வாய்ப்பாவது; தமிழ்ப் பொருண்மை அமைப்பை வெளிப்படுத்தவல்லது. அந் நிலையில்  உறைவி என்னும் பலபொரு ளொருசொல் அறிவுக்கு விருந்தாகின்றது. உறை என்னும் அடியாக ஆக்கப்படுகின்ற இச் சொல் உறைவிடம், உறைபவள் என்று பெயராகவும், பாலை உறைவி என்று வினையாகவும்  ஆளப்படுகின்றது.

    இன்னாது உறைவி அரும் படர் களைமே ( புறநானூறு,பா.145 அடி 10 )

 

என்னும் அடியில் ’பெருந்துயரோடு வீட்டில் இருப்பவளின் துயர் களைக’ என்று உறைவி என்னும் பெயர்ச்சொல்  இடவாகுபெயராகத் தலைவியைச் சுட்டுவதாக இயல்கின்றது.

இதனோடு உரை, உறுவி போன்ற சொற்களையும் இணைத்துப் பார்த்தால் தெளிவு வாய்க்கும். இவ்வாறான சொற்களைக் கூர்ந்து நோக்கிக் கருத்தறிதல் இலக்கியப் பனுவலை முறையாகப் பொருளுணரவும் மொழி வரலாற்றை அறியவும் வாய்ப்பாகும்.

நன்றி: இணையத் தரவுகள்                                         *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு