தொல்காப்பியத்தில் ’ காட்சி ’ யின் பொருட்பன்மை பேரா . குழந்தைசாமி , புதுச்சேரி உயர்தனிச் செம்மொழியான தமிழ் வரையறுக்கப்பட்ட இலக்கணக் கட்டமைப்பைக் கொண்டதாகும் . அதனால் இலக்கணவியல் , இலக்கியவியல் கொள்கைகளை இலக்கணவாணர்கள் உருவாக்குகின்றனர் . அதன்படி , ஒரு பனுவலில் பயில்கின்ற சொற்களின் சூழற்பொருளை அறிந்து கருத்துணர்தல் அடிப்படையானதாகும் . இக் குறிப்புரை காட்சி என்னும் தொழிற்பெயர் தொல்காப்பியத்தில் ஒப்புருச் சொல்லாக , மாறுபட்ட பொருளில் இயலுமாற்றை விளக்குகின்றது . தொல்காப்பியர் வகுத்தளித்துள்ள இலக்கணக் கொள்கைகளோடு அவரது நடையும் சொல்லாட்சியும் தமிழின் இயங்கியலைத் தெளிய வாய்ப்பாகின்றன . காட்சி : காண் + சி > காட்சி . காண் என்னும் வினைப் பகுதியுடன் சி என்னும் தொழிற்பெயர் விகுதியை ஒட்டி , காட்சி என்னும் தொழிற்பெயர் ஆக்கப்படுகின்றது . பரவலாக பார் த்தல் என்னு...
Posts
Showing posts from August, 2024
- Get link
- X
- Other Apps
வள்ளுவம் காட்டும் ‘காட்சியவர்’ பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி ஆறறிவும் அளவிலா ஆற்றலும் புத்தாக்கச் சிந்தனையும் வாய்த்த மானுடன் உணர்ச்சிகளால் உந்தப்படுகின்றான். அதனால் சிக்கலுக்கு ஆளாவதுடன் வளர்ச்சியும் வாய்ப்பாவதில்லை. பிறழ் உணர்ச்சி மேலெழும் போது அறிவு என்னும் பகுத்தறிவை முன்னிறுத்தின் தகாத உணர்ச்சிகளைத் தவிர்த்து, சீரான வாழ்வை வாய்ப்பாக்கலாம் என்பது வள்ளுவ விழுமியமாகும். இத்தகைய உணர்ச்சி மேலாண்மைச் சீர்மையைப் பெற்ற ஆன்றோர்களை ’காட்சியவர் / காட்சியார் ‘ என்று வள்ளுவம் சுட்டுகின்றது. தொல்காப்பியம் களவியலில் தலைவி கூற்றாக, உயிரினும் சிறந்தன்று நாணே ; நாணினும் செயிர்தீர் காட்சி க் கற்புச் சிறந்தன்று ( நூற்பா 1059; 1-2 ) என்று அறிவாண்மையின் தேவையை வலியுறுத்தியுள்ளார். பொருளீட்டப் பிரிந்த தன் தலைவனை அகநானூற்றுத் தலைவி, ...
- Get link
- X
- Other Apps
பொதுமறையில் ‘ புலம் ’ – கருத்தாய்வு பேரா . குழந்தைசாமி , புதுச்சேரி உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் , பொருண்மை வளம் மிக்க வளர் மொழியாகும் . இதனால் இலக்கியத்தில் ஒரு சொல் பொருட்பன்மையுடன் வழங்குவதால் , சூழலுக்கேற்ற கருத்தை அறிவது தேவையாகின்றது . இம் முறையில் திருக்குறளில் புலம் என்னும் ஒன்றன்பால் பெயர்ச்சொல் வேறுபட்ட பொருளில் , ஒப்புருச் சொல்லாகப் பயில்வதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது . புலம் = சொற்பொருள் : வயல் , இடம் , திசை , பொறி , புலனுணர்வு , அறிவு , நூல் ஆகிய பொருளில் புலம் என்னும் பெயர்ச்சொல் வழங்குவதாக , செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி ( ஆறாம் மடலம் ; இரண்டாம் படலம் , பக் .361- 362 ) சுட்டுகின்றது . நிலம் , கல்வி/தொழில் பிரிவு , நுணுகி ஆயும் அறிவு என்று விக்சனரி குறிப்பிடுகின்றது . இவற்றால் இதன் பொருட்பன்மை தெளியலாகின்றது ...
- Get link
- X
- Other Apps
பெரியசாமித் தூரன் பாடல்களில் பழனி முருகன் பேராசிரியர் குழந்தைசாமி , புதுச்சேரி . ஆசிரியர் , சிறாரிய / கொங்கு வட்டாரவழக்குப் படைப்பாளர் , இசைவாணர் , மொழிபெயர்ப்பாளர் , கலைக்களஞ்சியப் பதிப்பர் போன்ற தளங்களில் மேன்மையாக இயங்கித் தமிழுக்கு ஆக்கங்களை அள்ளித் தந்த பெரியசாமித் தூரன் (1908-1987 ) பழனி முருகனையும் பிற தெய்வங்களையும் போற்றி வாழ்த்திப் பாடியுள்ளார் . தொல்பழங்காலந்தொட்டுத் தமிழர்களின் கடவுளாகத் திகழ்பவர் முருகன் . இன்றுவரை இந் நிலை தொடர்ந்து மென்மேலும் வளர்கின்றது . முத்தமிழ் இலக்கியப் பாடுபொருளாக முருகன் விளங்குகின்றான் . தூரனின் இசைப் பாடல்களில் காணலாகும் பழனி முருகனின் ...
- Get link
- X
- Other Apps
புறநானூற்றின் தாக்கமுற்ற குறள் பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி மானுட மேன்மைக்காகப் படைக்கப்படுகின்ற இலக்கியங்கள் தனி மனித, சமூக, அரசியல், ஆட்சியியல் சான்ற விழுமியங்களை நிலைபேறுடைய மானிட மதிப்புகளாக விண்டுரைக்கின்றன; முடியாட்சிக்குக் கூறப்பட்டவை குடியாட்சிக்கும் பொருந்துவன. இத்தகைய புறநானூற்றுப் பாடல் வருமாறு: காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே , மாநிறைவு இல்லதும் , பன்நாட்கு ஆகும் ; நூறுசெறு ஆயினும் , தமித்துப்புக்கு உணினே , வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும் ; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே , கோடி யாத்து , நாடுபெரிது நந்தும் ; மெல்லியன் கிழவன் ஆகி , வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு , பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் , யானை புக்க புலம்போலத் , தானும் உண்ணான் , உலகமும் கெடுமே . (184) ...