கொங்கு வழக்காற்றில் தொறப்பு / மாட்டு முனைவர் ப. கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி. தமிழ் வட்டார வழக்குகள் நிறைந்தது. அவற்றுள் கொங்கு வட்டார வழக்கும் ஒன்று. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி கொங்கு மண்டலம் ஆகின்றது. இங்கு நீங்க வாங்க என்றவாறு மரியாதை அதிகம். இங்கு, கதவிலிடுகின்ற பூட்டை, தொறப்பு ( திறப்பு > தொறப்பு, அதாவது இ> ஒ ) என்றும், பூட்டின் திறவுகோலை. தொறப்புக் குச்சி எனவும்வழங்குகின்றனர்; சான்று: அம்மிணி ! தொறப்புக் குச்சி யெ எங்க வெச்சே? அடுத்து, பேச்சு வழக்கில் மாட்டு என்னும் சொல்லை, 1. வினையாக, திட்டு என்னும் பொருளில் ‘ அவெ கோவப்பட்டு மாட்றே’ 2. வினையாக, தொங்கவிடு என்னும் பொருளில் ...
Posts
Showing posts from October, 2023
- Get link
- X
- Other Apps
அவை : போலி ஒப்புருச் சொல்லாக … முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி தொன்மையான கன்னித் தமிழ் இலக்கண வளமுடையது ; மொழி வரலாற்று மாற்றங்களையும் நுட்பங்களையும் உள்ளடக்கியது . கால / பண்பாட்டு , அறிவு வளர்ச்சி , புதுத் துறை அறிமுகம் , சொற்சிதைவு ஆகிய காரணங்களால் தமிழ்ச் சொற்கள் சிலவற்றின் கருத்தை அறிவதில் இடர்ப்பாடு நேர்வதுண்டு .[ கருதுக : ஆறு ] அப்போது பொருண்மையியல் நோக்கில் அணுகின் பொருள் தெளிவு வாய்ப்பாகும் . அந் நிலையில் அவை எனும் சொல் நோக்கத்தக்கது . அது + கள் > அவை என்னும் உயிரீற்றுப் புணர்ச்சியில் , அது என்னும் ஒன்றன்பால் சேய்மைச் சுட்டுப்பெயருடன் கள் என்கின்ற பன்மை விகுதி பின்னொட்டாக ஒட்டும்போது , திரிந்து அவை என்று பன்மைச் சுட்டுப்பெயராக ஆகின்றது . அப்போது , அது வருகின்ற து / அவை வருகின்ற ன என்னும் தொடர்கள் ஆகுகின்றன . அடுத்து , மக்கள் , அறிஞோர் கூடுகை / அரசவை / கலையரங்...
- Get link
- X
- Other Apps
பாத்தி : திரிபுப் புணர்ச்சிப் பொருண்மை முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . உயர்தனிச் செம்மொழியான தமிழில் சொற்கள் முறையாக இணைந்து தொடராகும்போது இயல்பாக மாற்றம் இல்லாமலும் , மாற்றத்தோடும் புணர்கின்றன . சான்றாக , வாழை மரம் , மட்குடம் , பாத்தி ஆகியவற்றைச் சுட்டலாம் . இவற்றுள் பாத்தி என்பது பகுத்தது என்னும் பொருளிலான வினையாகுபெயர் . இதன் பகுதி / வேர்ச்சொல் பகு ஆகும் . பகு என்னும் சொல்லின் ஒலியமைப்பில் அகரத்தையடுத்து இயல்கின்ற க் ஆனது , ஹ் என்று தணிந்து , அ + ஹ் > ஆ என்று ஆகின்றது . அதனால் பகுத்தி என்னும் பகுக்கப்பட்ட பகுதி எனும் பொருளதான ஆகுபெயர் பாத்தி என்று திரிகின்றது . அதனால் இதில் நிகழ்ந்த புணர்ச்சித் திரிபைத் தெளிந்தால் பொருள் விளங்கும் . ...
- Get link
- X
- Other Apps
சாக்குத்தி – வள்ளுவ அரசியல் பொருண்மை முனைவர்ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி உயர்தனிச் செம்மொழியான தமிழில் , சொல் திரிபால் பொருள் குழப்பம் ஏற்படுவதுண்டு . இந் நிலை பிற மொழிகளிலும் இயல்கின்றது . அம்முறையில் , சாக்குத்தி போன்ற தொடர்கள் அடைந்த திரிபைத் தெளிந்து உரிய கருத்தை உணரலாம் . சாவ என்னும் செயஎன் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்தே ...
- Get link
- X
- Other Apps
வள்ளுவம் - உறழ்பொருள் : இல்லை × உண்டு முனைவர் ப . கொழந்தசாமி , புதுச்சேரி எண்ணவும் ஆராயவும் வல்ல மனிதனின் மனநிலைமையும் வாழ்க்கைத் தேவையும் மாறக்கூடியது ; முரண்பாடுடையது . ஒரு நேரத்தில் தேவைப்படுவது , வேறொரு நேரத்தில் தேவைப்படாமல் இருக்கலாம் . ஒரு பொருளால் கிடைக்கின்ற மகிழ்ச்சியும் களிப்பும் மற்றொன்றாலும் பெறப்படலாம் . ஆனால் இவை இரண்டின் பண்பும் மாறுபடலாம் . ஒருவருக்கு மகிழ்ச்சியாக அமைவது பிறருக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம் . இத்தகைய இருமை / மாற்ற முரண் நிலையை அற இலக்கியங்கள் வெளிப்படுத்தி அறமுரைத்தல் இயல்பானது ; தேவையானது . தொல்காப்பியம் சுட்டுகின்ற காஞ்சித் திணை , பத்துப்பாட்டின் மதுரைக்காஞ்சி , முரண் தொடை ஆகியன இவண் ஒப்பத்தக்கன . மனமும் அறிவும் ஒன்றோடு மற்றொன்றை ஒப்பியும் உறழ்ந்தும் அறியத்தக்கன . அறிவாக்கத்திற்கும் ஒன்றின் சிறப்புகளைத் தெளிவதற்கும் இத்தகைய ஒப்பீடுகள் வாய்ப்பாகின்றன . மானுட மேன்மைக்கான கொள்கை வரைவான வள்ளுவம் , புணர்ச...
- Get link
- X
- Other Apps
பொலந்தொடி / முன்றில் – புணர்ச்சி / கருத்து விளக்கம் முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . சங்க இலக்கியங்கள் முதலிய தொன்மையான இலக்கியங்களை நோக்கும்போது பொலந்தொடி , பொலந்தார் , முன்றில் போன்ற சொல்லாட்சிகளைக் கடக்க நேரிடும் . இவை திரிபடைந்த சொற்கள் ; திரிபு நீக்கிப் பொருளுணரவேண்டும் . பொற்றொடி என்பது பொலந்தொடி என்று திரிந்து வழங்குகின்றது . இதற்கான புணர்ச்சி விளக்கம் , பொன்னென் கிளவி ஈறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடரியலான ( புள்ளி மயங்கியல் , நூற்பா , 61 ) என்னும் தொல்காப்பிய நூற்பாவில் விளக்கப்பட்டுள்ளது . அதாவது , செய்யுள் தொடரமைப்பில் , பொன் > பொலம் என்று திரிகின்றது . அதனால் பொன் + தொடி பொலந்தொடி என்று திரிகின்றது . இது புணர்ச்சித் திரிபன்றிப் பொருள் மாற்றம் அன்று ; பொருளில் மாற்றமில்லை . இவ்வாறே , ...
- Get link
- X
- Other Apps
தொல்காப்பியத்திலும் வள்ளுவத்திலும் ‘ தொல் ’; சொற்பொருண்மை ஒப்பீடு முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . செய்யுளும் வழக்கும் என்னும் இரண்டு வகைத் தமிழ்ப் பயன்பாட்டோடு , முந்து நூல் கண்டு முறைப்படி ஆய்ந்து ஆக்கப்பட்ட , விளக்கவியல் இலக்கணமான தொல்காப்பியத்தை வள்ளுவர் பொன்னேபோற் போற்றி அனைத்து நிலைகளிலும் எடுத்தாண்டுள்ளார் . இது தொல்காப்பியத்தின் சீர்மிகு தாக்கமாகும் . அம் முறையில் தொல் என்னும் பண்பாட்டு மானுடவியல் கலைச்சொல் ஒப்பிடத்தக்கது . எழுத்து , சொல் , பொருள் என்னும் மூன்று அதிகாரங்களிலும் , பின்வருகின்ற நூற்பாக்களில் தொல் எனும் சொல் பழமை / முன் என்னும் பொருளில் பயில்கின்றது : அதிகாரம் இயல் இயல் நூற்பா எண் எழுத்து புள்ளி மயங்கியல் 60 எழுத்து குற்றியலுகரப் புணரியல் 04 சொல் வேற்றுமை மயங்கியல் 18 ...
- Get link
- X
- Other Apps
தொல்காப்பியத்திலும் வள்ளுவத்திலும் ‘ தறுகண் ’; சொற்பொருண்மை ஒப்பீடு முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . முந்து நூல் கண்டு முறைப்படி ஆய்ந்து ஆக்கப்பட்ட , விளக்கவியல் இலக்கணமான தொல்காப்பியத்தை வள்ளுவர் பொன்னேபோற் போற்றி அனைத்து நிலைகளிலும் பயன்கொண்டுள்ளார் . இது தொல்காப்பியத்தின் பெருமைமிகு தாக்கமாகும் . அம் முறையில் தறுகண் என்னும் சொல் ஒப்பிட்டறியத்தக்கது . கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே ( மெய்ப் . நூ . 09 ) ...