வள்ளுவத்தில் ‘ அமை ’ - கருத்தாய்வு புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் திருக்குறளின் சொல்லாட்சி நுட்பமானது. பழந்தமிழ்ச் சொற்களோடு, தான் அறிவுறுத்தவந்த அறவுரைக்கேற்ப அறவியல் கலைச்சொற்களையும் வள்ளுவம் ஆண்டுள்ளது. அதனால் ஒவ்வொரு சொல்லையும் சூழல் நோக்கிக் கருத்துணரவேண்டும். அப்போது தெளிவு வாய்க்கும். அந் நிலையில், இமையாரின் வாழினும் பாடிலரே ; இல்லாள் அமை யார்தோள் அஞ்சு பவர் (906) என்னும் குறட்பாவில் பயில்கின்ற அமை என்னும் ஒன்றன்பால் பெயர்ச்சொல்லின் கருத்து அறியத்தக்கதாகும். அமை + ஆர்+ தோள் என்னும் செய்யுள் தொடர்க் கட்டமைப்பில் பசிய வளவளப்பான இளம் மூங்கில் என்னும் கருத்தி...
Posts
Showing posts from June, 2025
- Get link
- X
- Other Apps
திருக்குறளில் ‘ பிணி ’ – பொருட்பன்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் விளம்புகின்ற அறத்தால் சிறப்புறுவது போலவே மொழியமைப்பு / நடைச் சிறப்பு ஆகியவற்றாலும் திருக்குறள் மிளிர்கின்றது . பழந்தமிழ்ச் சொற்களைச் செவ்வனே ஆண்டும் புதுக்கியும் வள்ளுவம் வழங்குகின்றது . இம் முறையில் பிணி என்னும் பல்பொருட் சொல்லைப் பெயராகவும் வினையாகவும் திருக்குறள் ஆளுமாற்றை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது . மனித வாழ்க்கையில் உடல்நலம் முதன்மையாகி , மானுட இயக்கத்திற்கும் அடிப்படையாகின்றது . இதில் நலிவு ஏற்படும்போது பிணி / நோய் உண்டாகின்றது . இதோடு உள்ளத்தில் பிணி ஏற்படுவதும் உண்டு . வள்ளுவத்தில் கீழ்வருமாறு பிணி பெயராகப் பயில்கின்றது: குறட்பா எண் பொருள் 227 பசியால் உண்டாகின்ற நலிவு 734 தொற்று நோய் 738 தொற்று நோய் 949 த...