செயலை என்னும் அசோகு: கருத்தாய்வு புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்களஞ்சியம் நுட்பமானது. அதனால் ஒவ்வொரு சொல்லையும் சூழல் நோக்கிக் கருத்தறியவேண்டும். சான்றாக, அடி, கடி, பூ போன்ற சொற்கள் பெயராகவும் வினையாகவும்; மா என்னும் சொல் பெயராகவும் உரியாகவும் பொருட் பன்மையில் இயல்வதைக் கருதலாம். எனவே ஒரு தொடரில் ஒரு சொல் பயிலுமாற்றை நோக்கிக் கருத்தறியலாம். இக் குறிப்புரை * செயலை* என்னும் பெயர்ச்சொல் அசோக மர த்தைச் சுட்டிப் பழந்தமிழில் பயில்வதை எடுத்துரைக்கின்றது. செயல்+ ஐ> செயலைச் செய் என்று தொடராக இக்காலத் தமிழில் ஆளப்படுகின்றது. பழந்தமிழில் செயலை என்னும் பெயர்ச்சொல் அசோக மர த்தைச் சுட்டுகின்றது. திருமுருகாற்றுப்படையின் 207ஆம் அடியில் “ செயலைத் தண் தளிர...
Posts
- Get link
- X
- Other Apps
மன்னை யும் கையறு நிலை யும் ஒப்பாரி யும் புதுச்சேரி குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் உயிருள்ள எதுவும் இறப்புக்கும் வளர்ச்சிக்கும் இறப்புக்கும் உட்பட்டவை . அதனால் மனித வாழ்க்கை மரணத்தில் முடிவது இயல்பு . இருந்தாலும் சாவை யாரும் விரும்புவதில்லை என்பதோடு உற்றார் , தலைவர் போன்றோர் காலமாகும்போது இரங்கி ஏங்கி அழுவது உண்டு . இன்றைய நிலையில் இறந்தவர் பிணத்தின் அருகில் உறவு சுட்டியும் பெருமை கூறியும் ஒப்பாரி பாடி மகளிர் புலம்புவர் : பாவலர் இரங்கற்பா இயற்றுவர் . நாடகம் , திரைப்படம் போன்ற நிகழ்த்து கலைகளிலும் இவ்வாறான காட்சிகளும் பாக்களும் இடம்பெற்றுப் பார்வையாளர்களை நெகிழ்விக்கின்றன . இது தன்னுணர்ச்சி வெளிப்பாடாக இயலும் . இந்த மரபு உலக இலக்கியங்களில் தொல்பழங் காலத்திலிருந்து தொடர்கின்றது . ஆங்கிலத்தில் ‘ எலிஜி ’ , வடமொழியில் ‘ சோக் கீத் ’ என்றவாறு இது அழைக்கப்படுகின்றது . ...
- Get link
- X
- Other Apps
’ அல்ல கூற்று மொழி ’ ( உடல் மொழி )– எண்ண வெளியீட்டு முறை புதுச்சேரி குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் அறிவுத் திருக்கோவிலாக / பண்பாட்டுப் பாதுகாவலனாக / மொழித்திறன் மேம்பாட்டுப் பாட நூலாக / விளக்கவியல் ஆய்வுச் சுரங்கமாகத் தொல்காப்பியம் திகழ்கின்றது . தொல்காப்பிய இலக்கண / இலக்கியக் கொள்கைகள் உலக மதிப்பும் பொருத்தப்பாடும் நிறைந்தவை . தொல்காப்பியத்தில் இடம்பெறுகின்ற கலைச்சொற்கள் நுட்பமானவை ; தன்விளக்கமுடையவை , ஒவ்வொரு கலைச்சொல்லையும் சூழலுக்கேற்பக் கருத்துணர்ந்தால் புரிதிறன் வாய்த்து நவில் கொள்கைகள் தெளிவாகும் . அம் முறையில் களவியலில் உடல் மொழியைக் குறிக்கப் பயில்கின்ற ’ அல்ல கூற்று மொழி ’ என்னும் கலைச்சொல்லைக் கருத்து வெளியீட்டு நோக்கில் விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது . அகப் பாடல்களின் எண்ண வெளியீட்டு மரபு : குறிக்கோள் பாங்கினவான அகப் பாடல்கள் அனைத்தும் கதைமாந்தர் கூற்றாகவே அமைகின...
- Get link
- X
- Other Apps
எழில் நலம் – கருத்தாய்வு புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் மனித ஆற்றலும் ஆளுமையும் போற்றத்தக்கனவாக அமைகின்றன. இவை கல்வியறிவோடும் செயல்திறனோடும் இயையும்போது மேலும் சிறப்படைகின்றன. மானுட மேன்மைக்கான கொள்கை வரைவான திருக்குறளின் கல்லாமை அதிகாரத்தில் இக் கருத்து வலியுறுத்தப்படுகின்றது. சான்றாக , நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று ( குறட்பா 407 ) என்னும் குறட்பாவில் ஒன்றை நோக்கி ஆராயவல்ல கல்வியறிவும் அதனால் உண்டாகின்ற திறனும் இலாதவனின் சமூகப் பயனின்மை உணர்த்தப்படுகின்றது. அப்போது வலிமையான பருத்த உடல் தோற்றம் பொய்யானது; துணிக்கடைப் பொம்மை போன்று இயங்க இயலாதது என்னும் உவமையால் தெளிவிக்கப்படுகின்றது. காண்பாரைக் கவர்கின்ற வளமையான உடல...
- Get link
- X
- Other Apps
மதுரைக்காஞ்சியில் ”காழ்” – ஒப்புருப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் பாப் புனைவோர் மொழித்திறன் வாய்ப்பால் சொல் விளையாட்டில், ஒரே இலக்கண வகையில் ஒரு வடிவத்தில் பல கருத்தில் சொல்லைக் கையாளுகின்றனர். தமிழின் சொல் வளமும் பொருண்மைக் கட்டமைப்பும் இதை வாய்ப்பாக்குகின்றன. இந் நிலையில் மதுரைக்காஞ்சியில் காழ் என்னும் பெயர்ச்சொல் ஒப்புருச் சொல்லாக இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது. · காழ்: கருத்து : காழ் , பெயர்ச்சொல் . ( https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D) 1. மரவயிரம் , விறகு , காம்பு , கழி 2. மனவுறுதி 3. கட்டுத்தறி 4. தூண் , கதவின் தாழ் 5. ஓடத்தண்டு 6. இரும்புக் கம்பி 7. ...
- Get link
- X
- Other Apps
தலைப்பாடு = நிகழ்தகைமை (probability) : கருத்தாய்வு புதுச்சேரி குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் பழங்காலத்தில் அனைத்து அறிவுத் துறைகளும் இலக்கியங்களாகக் கருதப்பட்டதால் , அரசியல் , போரியல் , பொருளாதாரம் , மனையியல் , வேளாண்மை , மருந்தியல் , இறையியல் போன்ற பலதுறைக் கருத்துகளின் புதைவிடமாக இலக்கியங்கள் திகழ்கின்றன . மேலும் இசை , கணிதம் , வானியல் சார்ந்த நூல்களும் இவற்றைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் தமிழகத்தில் இருந்தனர் ; முழு / பின்ன எண்கள் பயன்படுத்தப்பட்டன . ஆகவே தொல்காப்பியம் தொடங்கி இலக்கண , இலக்கியங்களில் இத்தகைய கருத்துகள் காணப்படுகின்றன . இம் முறையில் நிகழ்தகைமை குறித்த கருத்து , புறநானூறு 70 ஆம் பாவின் 18 ஆம் அடியில் இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது . கோவூர் கிழார் கிள்ளிவளவனின் ஈகைத் திறனைப் போற்றுகையில் , நாடி வந்த இரவலர்க்கு உறுதி...
- Get link
- X
- Other Apps
செல்வை ஆயின் செல்வை ஆகுவை – நடை அழகியல் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் இலக்கியங்கள் மொழித் தொழில்நுட்பத்தைக் கையாண்டு ஆக்கப்படுவதால் உரிய அணுகுமுறையால் பாக்களைத் தெளியலாம் . பாவலர் தன் மொழித் திறனையும் ஆளுமையையும் பயன்படுத்திப் பாவின் முருகியலை வாய்ப்பாக்குகின்றனர் . இதற்காக அழகியலை அனைத்து நிலைகளிலும் புகுத்துகின்றனர் . இம் முறையில் கீழ்வருகின்ற , கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் போற்றிய புறநானூறு 70 ஆம் பாவின் 16 ஆம் அடி நோக்கத்தக்கது . செல்வை ஆயின் , செல்வை ஆகுவை ! இதில்...