செல்வை ஆயின் செல்வை ஆகுவை – நடை அழகியல் பொருண்மை
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
இலக்கியங்கள்
மொழித் தொழில்நுட்பத்தைக் கையாண்டு ஆக்கப்படுவதால் உரிய அணுகுமுறையால் பாக்களைத் தெளியலாம்.
பாவலர் தன் மொழித் திறனையும் ஆளுமையையும் பயன்படுத்திப் பாவின் முருகியலை
வாய்ப்பாக்குகின்றனர். இதற்காக அழகியலை அனைத்து நிலைகளிலும் புகுத்துகின்றனர்.
இம் முறையில் கீழ்வருகின்ற, கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் போற்றிய
புறநானூறு 70ஆம் பாவின் 16ஆம் அடி நோக்கத்தக்கது.
செல்வை ஆயின், செல்வை ஆகுவை !
இதில், தன்னொத்த பாணனை ஆற்றுப்படுத்தும்போது, காட்டுக்கு விறகு ஈட்டச்
சென்றவனுக்கு எதிர்பாராமல் பொற்காசு கிடைத்தவாறன்றி , நீ விறலியுடன் வளவனை அணுகின்
உறுதியாகச் செல்வம் கிடைக்கும்;அதனால் நீ செல்வந்தன் ஆவாய் என்று பாணன், நிகழ்தகைமையை
முழுமையாக உறுதிப்படுத்துகின்றான்.
இவ்
அடியில் செல்வை என்னும் சொல் இரண்டு முறை , வெவ்வேறு கருத்தில் பயில்கின்றது.
முதலில் விரும்பிச் செல் என்றும் இரண்டாவதாக செல்வந்தன் என்றும் பொருள்பயக்கின்றது.
வளவன் இரவலரைப் புரக்கின்ற மேன்மை இதில் பாவலரால் நடை முருகியலோடு எடுத்துரைக்கப்படுகின்றது.
ஆகவே இலக்கிய அடிகளைப் பொருண்மை விழிப்புணர்வோடும் உரிய அணுகுமுறையிலும் தெளியவேண்டும்.
நன்றி : இணையத் தரவுகள் ********
Comments
Post a Comment