இதை – சங்கச் சொற்பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் இலக்கியங்களில் பல துறைச் செய்திகள் புதைந்திருப்பதால் இவற்றின் ஆய்வுக் களங்களும் விரிந்து பரந்து பொருண்மையியல் / அகராதிச் சொல் அறிதல் வாய்ப்புகளும் உள்ளன. அவ் வகையில் இதை என்னும் ஒன்றன்பால் பெயர்ச்சொல்லை அணுகலாம். இது+ ஐ > இதை, இதனை என்றாகின்றது. ஆனால் , சங்க இலக்கியங்களான மதுரைக்காஞ்சி, பரிபாடல், அகநானூறு ஆகியவற்றில் மரக்கலப் பாய், கொல்லை என்னும் கருத்தில் தனிப் பெயர்ச்சொல்லாக இச் சொல் இயல்வதை இக் குறிப்புரை விளக்குகின்றது. சான்று: நெடுங்கொடி மிசை இதை எடுத்து ( மதுரைக்காஞ்சி, அடி 79 ) என்னும் அடியில் மரக்கலப் பாய் என்னும் கருத்தில்...
Posts
Showing posts from November, 2025
- Get link
- X
- Other Apps
‘மேல்’ – கொங்கு வட்டார வழக்குப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் தமிழ் இரட்டை வழக்கினது; அதோடு வட்டாரச் சொல்வளமும் கொண்டது. மக்களின் படைப்பாற்றலால் நாட்டுப்புற இலக்கியங்கள், பழமொழிகள், விடுகதை, வீரக் காப்பியங்கள் போல்வன தோன்றுவது போலச் சொற்களும் ஆக்கப்படுகின்றன. இத்தகைய சொற்களின் பொருளை அவ் வட்டாரத்தினர் இயல்பாக அறிவர். ஆனால் பிற வட்டாரத்தினர் கற்றால் மட்டும் கருத்துணரமுடியும். இதற்காக வட்டார வழக்கு அகராதிகள் ஆக்கப்படுகின்றன. இந் நிலையில் உடலின் கழுத்திற்குக் கீழுள்ள மென்மை யான தோலை/ மேல் என்னும் காரணப் பெயர்ச்சொல்லால் கொங்கு மக்கள் ஆள்கின்றனர். சான்று: ”குளுரா இருக்குது; மேலு க்கு மட்டு தண்ணி ஊத்திக்கொ” இத்தகைய சொல்லாக்கங்கள் மக்களின் அறிவாண்மையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றை ...
- Get link
- X
- Other Apps
புறநானூறு மூன்றாம் பாவில் உன்னமும் முன்னமும் - மூலபாடக் கருத்தாய்வு புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் எட்டுத்தொகைப் புறநூலான புறநானூற்றின் மூன்றாம் பா 26 அடிகளில் இயல்கின்ற நெடும்பாவாக அமைகின்றது. இது பாடாண்திணை; செவியறிவுறூஉ / வாழ்த்தியல் துறையது. பாண்டியன் வழுதியை இரும்பிடர்த் தலையார் பாடிய இது. வேந்தனுக்கு அறிவுறுத்தவும் அவனைப் போற்றவும் செய்யும் அடிக்கருத்தினது. இப் பாடல் சொற்பொருள் ஆய்வுக்கு வாய்ப்பாகின்றது, சான்றாக, உன்ன மர த்த துன்னருங் கவலை (அடி 23) முன்ன முகத்தின் உணர்ந்து .... ( அடி 25 ) என்னும் அடிகளைக் கருதலாம். ...
- Get link
- X
- Other Apps
புறநானூற்றில் ஈகை – ஒப்புருப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் மொழியை வாய்ப்பாக்கிப் படைக்கப்படுகின்ற இலக்கியங்கள் மொழி / பொருண்மை ஆய்விற்குக் களமாகின்றன. அம் முறையில் புறநானூற்றில் ஈகை என்னும் பெயர்ச்சொல் மாறுபட்ட இரு பொருளில் ஒப்புருச் சொல்லாக இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. இதற்காகக் கீழ்வருகின்ற புறநானூற்று அடிகளைச் சூழல் நோக்கி அணுகலாம். தண்டா ஈகைத் தகைமாண் குடுமி ( பா 06 அடி 26 ) ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ ( பா.353 அடி03) இவற்றுள், ஆறாம் பாவில் பாடப்படுகின்ற பொருட்சூழலைக் கருத, ஈகை= கொடை ஆகின்றது. ...
- Get link
- X
- Other Apps
முதுமை – தொல்காப்பிய ஒப்புருப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் தொன்மையான விளக்கவிய இலக்கணமான தொல்காப்பியம் இலக்கணவியல், இலக்கியவியல், பொருண்மையியல் போன்ற பல்துறைத் தரவுகளின் பெட்டமாக இலங்குகின்றது. அம் முறையில் தொல்காப்பியத்தில் முதுமை என்னும் பெயர்ச்சொல் இரு வேறு கருத்தில் ஆளப்பட்டுள்ளதை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. முதுமை என்னும் பெயர்ச்சொல் அகவை முதிர்வை முதியவர், மூத்தோர் என்றவாறு சுட்டுவது இன்றளவும் நிலவுகின்றது. தொல்காப்பியம் , முதுமை, இளமை, இறத்தல்…….. ( நூ. 563:05) என்னும் நூற்பா அடியில் அகவை முதிர்வைக் குறிப்பதாக முத...
- Get link
- X
- Other Apps
ஒரு பாவில் இரு கோதை - கருத்தாய்வு புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் தமிழ் சொல் வளமும் பொருண்மைச் சீர்மையும் கொண்டதாகும். அதனால் ஒப்புருச் சொற்கள் செய்யுள் வழக்கிலும் பேச்சுப் பயன்பாட்டிலும் இயல்கின்றன. பாவலர் இதைச் செவ்வனே ஆண்டு இலக்கிய முருகியலை மிகுவித்து வேட்கையைத் தூண்டுவதோடு, மொழித் திறன் மேம்படவும் வாய்ப்பாகின்றனர். பொய்கையார் சேரமான் கோக்கோதை மார்பனைப் பாடிய, புறநானூற்றின் 48ஆம் பாவின் முதல் ஈரடிகளில், கோதை மார்பின் கோதை யானும் ...