முதுமை – தொல்காப்பிய ஒப்புருப் பொருண்மை
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தொன்மையான
விளக்கவிய இலக்கணமான தொல்காப்பியம் இலக்கணவியல், இலக்கியவியல், பொருண்மையியல் போன்ற
பல்துறைத் தரவுகளின் பெட்டமாக இலங்குகின்றது. அம் முறையில் தொல்காப்பியத்தில் முதுமை
என்னும் பெயர்ச்சொல் இரு வேறு கருத்தில் ஆளப்பட்டுள்ளதை விளக்குவதாக இக் குறிப்புரை
இயல்கின்றது.
முதுமை
என்னும் பெயர்ச்சொல் அகவை முதிர்வை முதியவர்,
மூத்தோர் என்றவாறு சுட்டுவது இன்றளவும் நிலவுகின்றது. தொல்காப்பியம் ,
முதுமை,
இளமை, இறத்தல்…….. ( நூ. 563:05)
என்னும் நூற்பா அடியில் அகவை முதிர்வைக் குறிப்பதாக முதுமை
என்னும் சொல்லை ஆள்கின்றது. இது பொது வழக்காகும். அடுத்து, காஞ்சித் திணையின் துறையாக,
கழிந்தோர்
ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை.. ( நூ. 1029:02 )
என்று முதுமையைக் கலைச்சொல்லாக, அறவுரை என்னும் சிறப்புப்
பொருளில் ஆள்கின்றது.
இங்ஙனம்
முதுமை என்னும் சொல்லைப் பொது/ சிறப்புப் பொருண்மையில், அகவை மூப்பையும், மூத்தோர்
அறவுரையையும் குறிப்பதாக, ஒப்புருப் பெயர்ச்சொல்லாகத் தொல்காப்பியம் ஆண்டுள்ளது. இவ்வாறு
கூர்ந்து சூழல் நோக்கிக் கருத்துணரின் பனுவலின் கொள்கையைத் தெளியலாம்.
நன்றி:
வ. ஜெயதேவன் (2004), தொல்காப்பிய அகராதி, சென்னைப் பலகலைக்கழகம் & இணையத் தரவுகள்
********
Comments
Post a Comment