Posts

Showing posts from March, 2025
                                 பால்கெழு கிளவி: இலக்கணப் பக்கச் சொல்       புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்                 செம்மொழியா ன தமிழின் தொன்மை யான விளக்கவியல் இலக்கணமான தொல்காப்பியம்   ஒவ்வொரு நூற்பாவிலும் தமிழ்ப் பொருண்மைக் கோட்பாட்டை வகுத்துரைக்கின்றது . அதன்படி பொருளதிகாரத்தின் ஐந்தாம்   இயலான பொருளியல் இலக்கியப் பொருண்மையை , அதாவது பாடலின் நுண்பொருளை அறியும் நுட்பத்தை இலக்கணவியல் / இலக்கியவியல் பாங்கில் எடுத்துரைக்கின்றது . இவ் இயலின் ஐந்தாம் நூற்பா, பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே    என்று கதைமாந்தர் கூற்று மரபினை எடுத்துரைக்கின்றது. அதாவது  தோழி, செவிலி, நற்றாய், தலைவி ஆகிய பெண்பாலார், தன்னோடும் பிற உயிரினங்களோடும் அன்பு மிகுந்த சொற்களைப் பேசுவதாகப் பாடல் அமைந்தால் மயங்காமல் அதை ஏற்று, அதன் உளவியல் நோக்க த்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப் பால்கெழ...
                 ” இசை யும் அசை யும் ” – தொல்காப்பியத் தொடர்ப் பொருண்மைக் கொள்கை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்               உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் தொன்மை / விளக்கவியல் இலக்கணமான தொல்காப்பியம்  ஒவ்வொரு நூற்பாவிலும் தமிழ்ப் பொருண்மைக் கோட்பாட்டை வகுத்துரைக்கின்றது. அதன்படி பொருளதிகாரத்தின் ஐந்தாம்  இயலான பொருளியல் இலக்கியப் பொருண்மையை , அதாவது பாடலின் நுண்பொருளை அறியும் நுட்பத்தை இலக்கணவியல் / இலக்கியவியல் பாங்கில் எடுத்துரைக்கின்றது.             தரவுகளின் அடிப்படையில் நுட்பமாக ஆய்ந்து நூலை ஆக்கியுள்ள தொல்காப்பியர்,  27 இயல்களுக்கும் கொள்கைவிளக்க நோக்கில் தலைப்பிட் டுள்ளார்.  இதை உரையாசிரியர்கள் தெளிவித்துள்ளனர். பொருளியலின் இயல் விளக்கத்தில், ‘சொல்லதிகாரத்தில் விளக்கப்பட்ட சொல்லிலக்கண மரபிலிருந்து மாறுபடுகின்ற இலக்கியச் சொற்றொடர்களுக்கும் முறையாக மரபுப்படி பொருள்கொள்வதை எடுத்துரைக்...
                             உறைப்புழியோலை = குடை – தொடர்ப் பொருண்மை                                                             புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் வரலாறு , பண்பாடு , ஆட்சியியல் , பட்டறிவு , உழவியல் போன்ற பல துறைக் கருத்துகளை இலக்கியங்களால் அறியலாம் . அவ்வாறே மக்களின் புழங்கு பொருட்களை யும் இலக்கியங்கள் ஆங்காங்கே சுட்டுகின்றன . அம் முறையில் பறநானூற்றின் 290 ஆம் பாடலின் ஏழாம் அடியில் அவ்வையார் , உறைப்புழியோலை   என்று மழைக் குடையைக் குறிப்பிடுகின்றார் . உறைப்பு + உழி + ஓலை   என்னும் மூன்று சொற்களால் இத் தொடர் ஆக்கப்பட்டுள்ளது . அக் காலத்தில் கொற்றக் குடை அரசச் சின்னமாக விளங்கியது . மக்கள் மழை பெய்கையில் பாதுகாப்புக்காகக் குடை பிடித்தனர் . மூங்கில் குச்சியில் பனை ,  தாழை , தென்னை ஆகியவற்றின் ஓலையைப் பின்னி அடுக்கிக் குடை செ...
  *பிற்றை நிலை – கல்வி உளவியல்*                                 பேராசிரியர் குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்   இலக்கியங்கள் நிலைபேறுடைய மானுட மதிப்புகளை உரக்கப் பேசி, மானுட வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் வாய்ப்பாகின்றன. இம் முறையில் கல்வியியல் / உளவியல் கொள்கைகளையும் வகுத்துரைக்கின்றன. இந் நிலை தொல்பழங்காலம் தொட்டு இயல்கின்றது. புறநானூறு 183ஆம் பாவில், உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே என்று பாண்டிய வேந்தன் கல்வியின் தேவையை வலியுறுத்துகின்றார். இது எக்காலத்திற்கும் பொருந்துகின்ற கொள்கையாகும். கற்பிப்பவருக்கு உதவுவதோடு, தான் எத்தகையவராயினும் வகுப்பில் மிகுதி காட்டாமல் , தேவையான பணிவோடு திகழ்ந்து கற்கவேண்டும். பணிவே அறிவு வளர்ச்சியின் அடிப்படை; கற்றலில் மட்டும் கருத்தூன்றவேண்டும்; தற்பெருமை தேவையில்லை என்னும் கல்வி உளவியலைப் பாண்டிய மன்னன் எடுத்துரைப்பதை மாணவர்க்கு உணர்த்தின் இள...