Posts

Showing posts from August, 2023
Image
           தொல்காப்பியத்தில் நோக்கு : அகராதிச் சொல்லியல் விளக்கம்                                                                              முனைவர் ப . கொழந்தசாமி , புதுச்சேரி . தொன்மையான , விளக்கமுறை இலக்கணமான தொல்காப்பியத்தின் ஒவ்வொரு நூற்பாவும் பொருண்மையியல் / இலக்கணக் கொள்கையை விண்டுரைக்கின்றது . அதனால் நூற்பாவில் பயில்கின்ற ஒவ்வொரு சொல்லையும் உற்றுநோக்கிக் கருத்தறிந்தால் , அவண் விளக்கப்படுகின்ற கொள்கையைத் தெளியலாம் . இதற்கு அகராதிச் சொல்லியல் வாய்ப்பாகி ; அகராதியில் இடம்பெறுகின்ற சொற்களின் வகை , கருத்து முதலிய  அடிப்படைக் கோட்பாடுகளை   நல்குகின்றது .   அதாவது நோக்கு ஒப்புருச் சொல்லாகவும் . பல்பொருட் கிளவியாகவும் ஆளப்பட்டு , வெவ்வேறான கருத்தைக் குறிப்பதை வெளிப்படுத்தும் . அகராதியைத் தொகு...
              அறநெறிச்சாரம் வகுத்துரைக்கின்ற அற இலக்கியக் கொள்கைகள் முனைவர் ப . கொழந்தசாமி , தமிழியல் துறைத் தலைவர் , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி .   மனித வாழ்வியலைக் கூர்ந்துநோக்கி , மானுடம் வெல்ல / மகிழ இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன . ஆர்வத்தைத் தூண்டுகின்ற   இலக்கிய அழகியல் கூறுகளோடு , நிலைபேறுடைய மானிட மதிப்புகளும்   மரபுகளும் அறவியல் பதிவுகளும் இலக்கியத்தில் இடம்பெறுகின்றன . இலக்கியம் இலக்கியத்திற்காகவா ? வாழ்க்கைக்காகவா ? என்பது உலகத் திறனாய்வாளர்களிடையே நெடுங்காலமாகப் பேசுபொருளாக உள்ளது . ஆயினும் இலக்கியம் அறிவுறுத்தி மனிதனை நெறிப்படுத்தவேண்டும் என்பதே தமிழகக் கொள்கையாகும் . தமிழில் நீண்ட காலமாக அற இலக்கியங்கள் ஆக்கப்படுகின்றன ; மற்ற வகை இலக்கியங்களிலும் இலக்கண நூல்களிலும் அவற்றின் உரைகளிலும் அறநெறிகள் சுட்டப்பட்டுள்ளன . சமுதாய நல்லிணக்கத்தையும் மதிப்பையும் பேண , இயல்பாகவே மக்களின் எண்ணத்திலும் சொல்லாடலிலும்   அறக் கருத்துகள் இயங்குகின்றன . பட்டறிவினால் , மரபாகப் பின்பற்றப்பட்டுவருகின்ற சமூக மதிப்புகள் இலக்கி...
Image
                     தொடர்ப் பொருண்மை நோக்கில் 877 ஆம்  குறட்பாவின்  தொடர் அமைப்பு   முனைவர் ப . கொழந்தசாமி , புதுச்சேரி சீரிய  அற இலக்கியமான  திருக்குறளில்  தொடரியல் நுட்பங்கள்  காணப்படுகின்றன .   இவற்றை  முறையாகப்  பொருள் உணர்ந்தால்  அந்தக் குறட்பாவில்  சுட்டப்படும்  வாழ்வியல் விழுமியம்  அறியப்படும் .   அவ் வகையில்  பகைத்திறம் தெரிதல்  அதிகாரத்தின் , கீழ்வரும்  877 ஆம்  குறட்பாவின்  தொடர் அமைப்பைத் தொடர்ப் பொருண்மை நோக்கில்   இக் கட்டுரை  விளக்குகின்றது .                நோவ ற் க   நொந்தது   அறியார்க்கு ;   மேவற்க                மென்மை பகைவர் அகத்து   இந்தக்  குறட்பாவில்  இரண்டு  தொடர்கள்  அமைந்துள்ளன .   அதாவது  உன்னுடைய நோவை அறிந்த...
  ஒரு குறளில் ஐந்து வேற்றுமை முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி.   அற இலக்கியமான திருக்குறள் மனித வளங்களை இனங்காட்டி   முன்னேறத் தூண்டுவதோடு , மனிதவளத் தளத்தில் உள்ள தனிமனித வேறுபாடுகளையும் சுட்டுகின்றது. கல்வியாலும் பட்டறிவினாலும் உயர்திணையாகிய மனிதன் அறிவாற்றல், திட்டமிடல், செயல்திறன், கூட்டு முயற்சி, இயற்கையையும் விலங்குகளையும்   கருவிகளையும் கையாள்கின்ற திறமை போன்றவற்றால் நிகழ் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்வதோடு, அறிவாக்க மேம்பாட்டிலும் / கருவிகளைக் கண்டறிந்து செயல்பாடுகளை விரைவாகவும் நுட்பமாகவும் குறைந்த செலவில் நிறைவேற்றுகின்ற புத்தாக்கங்களையும் படைத்துப் பயன்கொள்கின்றான். தேடித் தின்றவன் விளைவிப்பவனாக, கலப்பை/ காளை / நீரைத் தேக்கிப் பாய்ச்சல் / உணவுப் பொருள் சேமிப்பு போன்றவற்றால் உற்பத்தியாளனானான். இதனால் வளர்ச்சி வாய்க்கின்றது; வாய்ப்புப் பெருகுகின்றது. இக் கூறுகள் மனிதவளமை / மேலாண்மை ஆகிய தளங்களில் வினையாற்றுவதை வள்ளுவம் வளமையான கலைச்சொற்களால் எடுத்துரைக்கின்றது. அதோடு தொடரியல் / வேற்றுமை இலக்கண நுட்பங்களையும் செவ்வனே கையாண்டுள்ளது. இக் கட்டுரையில் தெரிந்து வ...
  தொல்காப்பியத்தில் வேற்றுமை : சொற்பொருண்மை நோக்கு முனைவர் ப . கொழந்தசாமி , புதுச்சேரி . தொன்மையான , மரபு காக்கின்ற விளக்கமுறை இலக்கணமான தொல்காப்பியத்தின் ஒவ்வொரு நூற்பாவும் இலக்கணக் கொள்கையை விண்டுரைக்கின்றன . அவ் வகையில் சொல்லதிகாரத்தில் , தமிழ்த் தொடரியல் நோக்கில் வேற்றுமை இலக்கணக் கொள்கைகளும் எடுத்துரைக்கப்படுகின்றன . இங்கு வேற்றுமை என்கின்ற கலைச்சொல் , ஒரு தொடரின் உறுப்புச் சொல்லாக அமைகின்ற பெயர்ச் சொல்லின் , தொடர்ப் பொருளை வேறுபடுத்தும் பின்னொட்டின் , இலக்கண இயங்கியல் என்னும் கருத்தில் ஆளப்படுகின்றது .   சான்றாக ,      கண்ணன் குமரன் வென்றார் என்னும் தொடர்ப் பொருண்மைக் கட்டமைப்பில் இரண்டு ஆண்களுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெற்றவர் குறித்துச் சுட்டப்படுகின்றது .  இதிலுள்ள இரண்டு பெயர்ச்சொற்களும் ஆண்பாலைக் குறிப்பன . எனவே இரண்டும் வென்றார் என்னும் செயப்படுபொருள் குன்றா வினையை / பயனிலையை ஏற்கத்தக்கன . ஆனால் பொருண்மை வரையறையால் ஏதோ ஒரு பெயர் மட்டும் எழுவாயாக / செய்வானாக / வென்றவராக அமையும் . தொடரியலின்படி எழுவாய் + செயப்படுபொருள் + பயன...