தொல்காப்பியத்தில் நோக்கு: அகராதிச் சொல்லியல் விளக்கம்
முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி.
தொன்மையான, விளக்கமுறை இலக்கணமான
தொல்காப்பியத்தின் ஒவ்வொரு நூற்பாவும் பொருண்மையியல்/ இலக்கணக்
கொள்கையை விண்டுரைக்கின்றது. அதனால் நூற்பாவில் பயில்கின்ற ஒவ்வொரு
சொல்லையும் உற்றுநோக்கிக் கருத்தறிந்தால், அவண் விளக்கப்படுகின்ற
கொள்கையைத் தெளியலாம். இதற்கு அகராதிச் சொல்லியல் வாய்ப்பாகி
; அகராதியில் இடம்பெறுகின்ற சொற்களின் வகை, கருத்து
முதலிய அடிப்படைக் கோட்பாடுகளை நல்குகின்றது. அதாவது நோக்கு
ஒப்புருச் சொல்லாகவும். பல்பொருட் கிளவியாகவும் ஆளப்பட்டு,
வெவ்வேறான கருத்தைக் குறிப்பதை வெளிப்படுத்தும். அகராதியைத் தொகுக்குநர் இதைச் செவ்வனே பயன்கொள்வார். அவ் வகையில் நோக்கு கலைச்சொல்லாகவும், பொது வழக்கிலும்,
வெவ்வேறான கருத்தில் தொல்காப்பியத்தில் ஆளப்பட்டுள்ளதை எடுத்துரைப்பதாக
இக் கட்டுரை இயல்கின்றது.
வழக்கு
அட்டவணை
|
நூற்பா எண் |
வருகை |
சொல் வகை |
கருத்து |
|
578 |
நோக்கோரனைய |
பெயர் |
கருத்து |
|
579 |
நோக்கல்
நோக்கம் |
பெயர் |
பார்வை, கருத்து |
|
1364 |
நோக்கு
எனப்படுமே |
பெயர் |
கலைச்சொல் |
|
1061 |
களம்
நோக்கி |
வினை |
காணல் |
|
1029 |
பகுதி
நோக்கி |
வினை |
கருதுதல் |
|
1236 |
தகைய
நோக்கு |
இடை |
உவம
உருபு |
இதனால்
பார்வை, கருத்து மற்றும் நுட்பமான ஆய்வு என்னும் பொருளிலான இலக்கியவியல் கலைச்சொல்லான
பெயராகவும்; காணல், கருதுதல் ஆகிய வினைச்சொல்லாகவும்;
போல என்றவாறு உவம உருபாகவும் நோக்கு தொல்காப்பியத்தில் இயல்வதை
அறியலாம். இவ்வாறு அடிப்படைக் கூறுகளை ஆராய்ந்து வெளியிட்டால்,
அகராதியைத் தொகுக்குநர் அதை உரிய முறையில் அமைத்துக்கொள்வார். தமிழில் மட்டுமன்றி, பல மொழிகளில் சொற்கள் பெயராகவும் வினையாகவும் [ அடி,
படி, பூ / bank ] பல்பொருட்
கிளவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் தொல்காப்பியத்தில்
நோக்கு என்னும் சொல் இலக்கியவியல் கலைச்சொல்லாகவும், பொது வழக்கில்
உற்றுப் பார் என்னும் வினைப் பொருளிலும், ஒப்புருச் சொல்லாகவும் பல்பொருட் கிளவியாகவும் ஆளப்பட்டுள்ளதைத் தெளியலாம். தொல்காப்பியர் வகுத்துரைக்கின்ற இலக்கணவியல்
கொள்கைகளோடு, தொல்காப்பிய நடையும் சொல்லாட்சியும் பொருண்மை/ அகராதியியல்
ஆய்வுக்கு வாய்ப்பாகின்றன.
பயன்கொண்டவை
ஜெயதேவன்,வ.,(பதிப்.) 2004, தொல்காப்பிய
அகராதி,
சென்னைப் பலகலைக்கழகம்.
தமிழ் இணையக் கல்விக்கழகத் தரவுகள்
********
Comments
Post a Comment