Posts

Showing posts from December, 2022
  திருக்குறளில் நீக்கலும் நீங்கலும் – வழக்குப் பொருண்மைஒப்பு நோக்கு        ப . கொழந்தசாமி , தமிழியல் துறைத் தலைவர் , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி .         தமிழுக்கும் தமிழருக்கும் புகழீட்டி , மானுட மேன்மையை வாய்ப்பாக்குகின்ற    நன்மறையான திருக்குறள் ,   மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது . வாழ்வியல் விழுமியங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும் , இலக்கிய உத்திகளும் நடையியல் நுட்பங்களும் திருக்குறளில் செறிந்து காணப்படுகின்றன . வழக்குச் சூழலுக்கேற்பவும் தொடர்ப் பொருண்மை / பயன் மொழியியல் / நடையியல் / குடிமையியல் / எடுத்துரைப்பியல் நோக்கிலும் இத்தகைய கூறுகளை நுணுகி ஆராய்ந்து கருத்துணரவேண்டும் . அப்போது படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி , அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் மக்களிடம் இயல்பாகப் பிறக்கும் . அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள மொழி , இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிந்திருக்கவேண்டி...