திருக்குறளில் பாராட்டு- கருத்தாய்வு புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் திருக்குறளின் சீர்மைகளுள் அதன் சொல்லாட்சியும் நடைச் செம்மையும் குறிப்பிடத்தக்கன. எழுத்துகளின் முறையான சேர்க்கையால் சொல்லும், சொற்களின் இலக்கண/ பொருண்மை/ பண்பாட்டுப் பொருத்தமுடைய தொடர்ச்சியால் சொற்றொடரும் ஆக்கப்படுகின்றன. இந்தத் தளத்தில் திறமையுடன் இயங்குகின்ற பாவலர் பெருமையுடன் நிலைக்க, அவரது பனுவலும் போற்றப்படுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்ற வள்ளுவத்தில் பழந்தமிழ்ச் சொற்களைத் திருவள்ளுவர் செவ்வனே ஆண்டு இறவாப் புகழ் பெற்றுள்ளார். அவற்றுள் பாராட்டு என்னும் செயப்படுபொருள்குன்றா வினைச்சொல்லும் ஒன்றாகும். இது பெயராகவும் இயலும். இதனோடு உண்டாட்டு, தாலாட்டு, சீராட்டு, நீராட்டு, கொண்டாட்டம் ஆகியன ஒப்பத்தக்கன. பொது வழக்கில் ஒருவரது / ஒன்றின் மேன்மையை/ வெற்றியைப் புகழ்வதாகப் பாராட்டு இயலும். ஒரு செயல் செய்ய முனைவாரை வாழ்த்துவதும் வெற்றியாளரைப் பாராட்டுவதும் மரபு என்...
Posts
Showing posts from September, 2025
- Get link
- X
- Other Apps
வள்ளுவத்தில் புலம் – ஒப்புருப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் இலக்கியங்கள் இன்புறுத்துவதோடு அறிவுறுத்தவும் விழைவதால் அதற்கான உத்திகளைப் பின்பற்றுகின்றன . குறிப்பாக அறப் பனுவல்கள் விழுமியங்களை விளம்புகையில் எளிமையையும் எண்ண ஈர்ப்பையும் முதன்மைப்படுத்தி , பூ , விலங்கு போன்ற காட்சிப் பொருள்களையும் தொன்மக் கதைகளையும் குறிப்பிட்டு / ஒப்பிட்டு நவில்கின்றன . இதனால் பொருட்புலப்பாடு முழுமையடைகின்றது . வள்ளுவம் புலம் என்னும் ஒன்றன்பாற் பெயர்ச்சொல்லை இங்ஙனம் பெய்துள்ளதைக் குறிப்பிடுவதாக இக் குறிப்புரை இயல்கின்றது . புலம் என்னும் சொல் அறிவுத் துறை , நுண்ணறிவு, விளைநிலம் , திக்கு , இடம், பொறியுணர்வு , நூல் போன்ற பொருள் சுட்டுகின்ற ஒப்புருச் சொல்லாகத் தொன்றுதொட்டு இயல...
- Get link
- X
- Other Apps
வள்ளுவத்தின் இல்லறப் பிணைப்பு விழுமியப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் கூடி வாழ்கின்ற இயல்புடைய மனிதனின் அடிப்படை இல்லறக் கடமைகளை வள்ளுவம் விரிவாக வகுத்துரைக்கின்றது. சமூகத்தின் முதன்மை அலகான குடும்பம் திருமணத்தால் கட்டமைக்கப்படுகின்றது. இது அகக்குழு; புறக்குழு / காதல் மணமாகவோ ஏற்படுத்தப்பட்டதாகவோ நிகழலாம். இவற்றைத் தொல்காப்பியம் களவு, கற்பு என்னும் கலைச்சொற்களால் குறிக்கின்றது. மக்கட்பேறு, குழந்தை வளர்ப்பு, நன்னடத்தை போன்றவற்றோடு பண்பாட்டு, மத விழுமியங்களைக் கட்டிக்காக்கின்ற அரும்பணிகளை இல்லறம் ஆற்றுகின்றது. அதனால் ‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று புகழப்படுகின்றது. சமூகவியல், மானுடவியல், உளவியல், மருத்துவம், சட்டவியல் ஆகிய துறைகளில் இல்லறவியல் கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. நிலைபேறுடைய மானிட மதிப்பில் இல்லற நெறி முதன்மை பெறுகின்றது. உலகெங்கும் ...
- Get link
- X
- Other Apps
தொல்காப்பிய ஆ – பொருட்பன்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் உயர்தனிச் செம்மொழியான தமிழ் சொற்களஞ்சியப் பெருக்குடையது. பழந்தமிழ் மொழிக் கூறுகள் மாற்றமின்றி இன்றும் வழக்கிலுள்ளன. அவற்றுள் பொருட்பன்மை கொண்ட ஆ என்பதும் அடங்கும். தொல்காப்பியத்தில் ஆ, - நெட்டுயிர் ( நூற்பா, 04) - கால்நடை (1003) - சுட்டு [ அவ்>ஆ] (17 ) - வினா (32) - பெயரடை ( 42 ) - பெயர் விகுதி ( 181 ) - ...
- Get link
- X
- Other Apps
தொல்காப்பியம் சுட்டுகின்ற களவழிகள் புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் தொல்காப்பியப் புறத்திணையியல் உலா, பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியத் தோற்றத்திற்கான வாய்ப்புகளைச் சுட்டுமாறே வெற்றியைப் பாராட்டுகின்ற களவழி இலக்கிய வகைமையையும் வெளிப்படுத்துகின்றது. புறத்திணையியலின் வாகைத் திணை பற்றிய 17ஆம் நூற்பாவின் 03ஆம் அடி, ஏரோர் களவழி அன்றிக் களவழி என்று இரண்டு களவழி இலக்கியங்களைக் குறிக்கின்றது. களவழி நாற்பது, கலிங்கத்துப்பரணி ஆகியன இவண் எண்ணத்தக்கன. அதனால் பொருநரை ஏர்க்களம்/ போர்க்களம் பாடுநர் என்று அடையாளப்படுத்தினர். அதாவது உழவின் விளைச்சல் வெற்றியைக் களத்திலும் போரின் வெற்றியைப் போர்க்களத...
- Get link
- X
- Other Apps
தொல்காப்பிய ஐ - பொருட்பன்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் விளக்கவியல் இலக்கண நூலான தொல்காப்பியம் நுட்பமாக மொழி இயங்கியலை எடுத்துரைக்கின்றது. நூற்பாக்களில் இடம்பெறுகின்ற சொற்கள் செறிவானவை. அதனால் கொள்கை நோக்கில் ஒவ்வொரு சொல்லின் கருத்தையும் தெளியவேண்டும். இந் நிலையில் ஐ என்னும் சொல்லைப் பலபொருட்சொல்லாகத் தொல்காப்பியம் சுட்டுவதை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. ஐ – உயிர் நெடில்; இரட்டையுயிர்; கூட்டொலி(54) - உறவுப் பெயர் - அண்ணன் (1087) - ஐந்து என்னும் எண்ணுப்பெயர்/ அடை (1311) - இரண்டாம் வேற்றுமை உருபு (556) - ...
- Get link
- X
- Other Apps
கையாறு –உணர்ச்சிப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் தொல்காப்பியம் இலக்கண, இலக்கியக் கொள்கைகளைக் கலைச்சொற்களால் வகுத்துரைக்கின்றது. முந்து நூல் கண்டு, செய்யுள்/ வழக்குத் தரவுகளை ஆய்ந்து, விளக்கவியல் பனுவலாக முறைப்படி ஆக்கப்பட்டுள்ளது. இவ் இலக்கண நூலின் ஒவ்வொரு சொல்லையும் நோக்கிக் கருத்துணர்ந்தால் தமிழியலைத் தெளியலாம். சொற்கள் கருத்தை உணர்த்துவதால், துறைச்சொற்களை நுணுகிக் கருத்துணரவேண்டும். அம் முறையில் இலக்கிய/ நாடக உணர்ச்சிகளை எடுத்துரைக்கின்ற மெய்ப்பாட்டியலில் இயல்கின்ற உளவியல் கலைச்சொற்கள் பொருண்மைச் செறிவானவை. இவண் மெய்ப்பாட்டியலின் ” ஆங்கவை ஒருபாலாக….” என்று தொடங்கும் 12ஆம் நுற்பாவில் பயில்கின்ற “கையாறு ” என்னும் இலக்கிய உணர்வியல் கலைச்சொல...