வள்ளுவத்தின் இல்லறப் பிணைப்பு விழுமியப் பொருண்மை
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
கூடி
வாழ்கின்ற இயல்புடைய மனிதனின் அடிப்படை இல்லறக் கடமைகளை வள்ளுவம் விரிவாக வகுத்துரைக்கின்றது.
சமூகத்தின் முதன்மை அலகான குடும்பம் திருமணத்தால் கட்டமைக்கப்படுகின்றது. இது அகக்குழு;
புறக்குழு / காதல் மணமாகவோ ஏற்படுத்தப்பட்டதாகவோ நிகழலாம். இவற்றைத் தொல்காப்பியம்
களவு, கற்பு என்னும் கலைச்சொற்களால் குறிக்கின்றது. மக்கட்பேறு, குழந்தை வளர்ப்பு,
நன்னடத்தை போன்றவற்றோடு பண்பாட்டு, மத விழுமியங்களைக் கட்டிக்காக்கின்ற அரும்பணிகளை
இல்லறம் ஆற்றுகின்றது. அதனால் ‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று புகழப்படுகின்றது.
சமூகவியல், மானுடவியல், உளவியல், மருத்துவம், சட்டவியல் ஆகிய துறைகளில் இல்லறவியல்
கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. நிலைபேறுடைய மானிட மதிப்பில் இல்லற நெறி முதன்மை
பெறுகின்றது. உலகெங்கும் இந்த நடைமுறை நிலவினாலும் மாறுபாடுகள் தென்படுகின்றன.
இத்தகைய
மேன்மை மிக்க இல்லற விழிமியங்களை, மானுட வெற்றிக்கான கொள்கை வரைவாக விளங்குகின்ற வள்ளுவம்
நுட்பமாக எடுத்துரைக்கின்றது. இவற்றைக் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பமும் ஒளிரலாம்.
அன்புடைமை அதிகாரத்தில் அன்பின் பன்முகப் பெருமைகளை அறைகின்ற திருவள்ளுவர்,
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு
அன்பி லவர்க்கு
(79)
என்னும் குறட்பாவில்
எவன்? என்று வினவி விளம்பு கருத்தை வலியுறுத்துகின்றார். அதோடு பலவற்றை ஒன்றிணைத்தல்
என்னும் பொருள்கொண்ட யாக்கை என்னும் அறவியல் கலைச்சொல்லை ஆண்டுள்ளார்; இதில் இரண்டு
அறங்களை அறிவுறுத்துகின்றார்.
Ø இக்காலக் கருத்துரையாளோர் செப்புமாறு, மனித
உடம்பிலுள்ள மற்ற உறுப்புகளால் ஏற்படுகின்ற நன்மையைவிட, மனதில் மலர்கின்ற அன்பின் பயன்
மேலானது .
Ø பரிமேலழகர் விளக்குமாறு பிற வசதி வாய்ப்புகளைக்
காட்டிலும் இல்லற வாழ்க்கையில் உறுப்பினர்களிடையே நிலவுகின்ற அன்புப் பிணைப்பும் அக்கறையும்
ஓம்பலும் பணிவும் முதன்மையானவ.
மேற்கூறிய இரண்டு விழுமியங்களும் உறவை
வலுப்படுத்தி உயர் வாழ்க்கையை வாய்ப்பாக்குவன. ஆகவே இவற்றை இளையோர் மனத்தில் பதிப்பது மிகுபயன்
நல்கவல்லது.
நன்றி : இணையத் தரவுகள் *******
Comments
Post a Comment