எழில் நலம் – கருத்தாய்வு புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் மனித ஆற்றலும் ஆளுமையும் போற்றத்தக்கனவாக அமைகின்றன. இவை கல்வியறிவோடும் செயல்திறனோடும் இயையும்போது மேலும் சிறப்படைகின்றன. மானுட மேன்மைக்கான கொள்கை வரைவான திருக்குறளின் கல்லாமை அதிகாரத்தில் இக் கருத்து வலியுறுத்தப்படுகின்றது. சான்றாக , நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று ( குறட்பா 407 ) என்னும் குறட்பாவில் ஒன்றை நோக்கி ஆராயவல்ல கல்வியறிவும் அதனால் உண்டாகின்ற திறனும் இலாதவனின் சமூகப் பயனின்மை உணர்த்தப்படுகின்றது. அப்போது வலிமையான பருத்த உடல் தோற்றம் பொய்யானது; துணிக்கடைப் பொம்மை போன்று இயங்க இயலாதது என்னும் உவமையால் தெளிவிக்கப்படுகின்றது. காண்பாரைக் கவர்கின்ற வளமையான உடல...
Posts
Showing posts from December, 2025
- Get link
- X
- Other Apps
மதுரைக்காஞ்சியில் ”காழ்” – ஒப்புருப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் பாப் புனைவோர் மொழித்திறன் வாய்ப்பால் சொல் விளையாட்டில், ஒரே இலக்கண வகையில் ஒரு வடிவத்தில் பல கருத்தில் சொல்லைக் கையாளுகின்றனர். தமிழின் சொல் வளமும் பொருண்மைக் கட்டமைப்பும் இதை வாய்ப்பாக்குகின்றன. இந் நிலையில் மதுரைக்காஞ்சியில் காழ் என்னும் பெயர்ச்சொல் ஒப்புருச் சொல்லாக இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது. · காழ்: கருத்து : காழ் , பெயர்ச்சொல் . ( https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D) 1. மரவயிரம் , விறகு , காம்பு , கழி 2. மனவுறுதி 3. கட்டுத்தறி 4. தூண் , கதவின் தாழ் 5. ஓடத்தண்டு 6. இரும்புக் கம்பி 7. ...
- Get link
- X
- Other Apps
தலைப்பாடு = நிகழ்தகைமை (probability) : கருத்தாய்வு புதுச்சேரி குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் பழங்காலத்தில் அனைத்து அறிவுத் துறைகளும் இலக்கியங்களாகக் கருதப்பட்டதால் , அரசியல் , போரியல் , பொருளாதாரம் , மனையியல் , வேளாண்மை , மருந்தியல் , இறையியல் போன்ற பலதுறைக் கருத்துகளின் புதைவிடமாக இலக்கியங்கள் திகழ்கின்றன . மேலும் இசை , கணிதம் , வானியல் சார்ந்த நூல்களும் இவற்றைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் தமிழகத்தில் இருந்தனர் ; முழு / பின்ன எண்கள் பயன்படுத்தப்பட்டன . ஆகவே தொல்காப்பியம் தொடங்கி இலக்கண , இலக்கியங்களில் இத்தகைய கருத்துகள் காணப்படுகின்றன . இம் முறையில் நிகழ்தகைமை குறித்த கருத்து , புறநானூறு 70 ஆம் பாவின் 18 ஆம் அடியில் இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது . கோவூர் கிழார் கிள்ளிவளவனின் ஈகைத் திறனைப் போற்றுகையில் , நாடி வந்த இரவலர்க்கு உறுதி...
- Get link
- X
- Other Apps
செல்வை ஆயின் செல்வை ஆகுவை – நடை அழகியல் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் இலக்கியங்கள் மொழித் தொழில்நுட்பத்தைக் கையாண்டு ஆக்கப்படுவதால் உரிய அணுகுமுறையால் பாக்களைத் தெளியலாம் . பாவலர் தன் மொழித் திறனையும் ஆளுமையையும் பயன்படுத்திப் பாவின் முருகியலை வாய்ப்பாக்குகின்றனர் . இதற்காக அழகியலை அனைத்து நிலைகளிலும் புகுத்துகின்றனர் . இம் முறையில் கீழ்வருகின்ற , கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் போற்றிய புறநானூறு 70 ஆம் பாவின் 16 ஆம் அடி நோக்கத்தக்கது . செல்வை ஆயின் , செல்வை ஆகுவை ! இதில்...
- Get link
- X
- Other Apps
மகுளி – ஒப்புருப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் இலக்கியங்கள் மொழித் தொழில்நுட்பத்துடன் இயற்றப்படுவதால், இலக்கியத்தில் இயல்கின்ற ஒவ்வொரு சொல்லையும் சூழல் நோக்கிக் கருத்துணர்ந்து தெளியவேண்டும். அம் முறையில் சங்க இலக்கியங்களில் மகுளி என்னும் ஒப்புருப் பெயர்ச் சொல் பயிலுமாற்றை வெளிப்படுத்துவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. உழவர் எள் விதைத்து நோய் தாக்காமல் காப்பதைப் பாராட்டுகின்ற கபிலர் மலைபடுகடாமில், மகுளி பாயாது………(அடி 103) என்று பூச்சி தாக்காமல் பயிர் முதிர்வதைச் சுட்டுகின்றார். இவண் நோய் என்னும் கருத்தில் மகுளி பயில்கின்றது. அடுத்து, பரிபாடலின் 12ஆம் பாடலில், மத்தரி த...
- Get link
- X
- Other Apps
புறநானூறு - ஓரடியில் இருவேறு முந்நீர்- பொருண்மை விழிப்புணர்வு புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் தமிழ் மொழியின் சொற்களஞ்சியம் ஆழமானது; பரந்து விரிந்தது. இந்தப் பெருவளத்தைப் பாவலோர் வாய்ப்பாக்கி, மொழித்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகப் பேரிலக்கியச் சீர்மையுடன் இலக்கியப் படைப்புகளை அறிவுக்கு விருந்தாகுமாறு செவிநுகர் கனிகளாக வடித்துள்ளனர். அதனால் பொருண்மை/ முருகியல் விழிப்புணர்வுடன் இலக்கியத்தில் இயல்கின்ற சொற்களையும் தொடர்களையும் சூழல் கருதித் தெளிய, இலக்கிய இன்பமும் ஆற்றலும் வெளிப்படும்.. அம் முறையில் புறநானூற்றின் 24ஆம் பாவின் 16ஆம் அடியை அணுகலாம். தீம்நீரோடு உடன் விராஅய் முந்நீருண்டு முந்நீர்ப் பாயும் ( அடிகள் 15,16) என்னும் அடிகளில் இளம் பெண்கள் பனங்கள், கரும்புப் பால், இளநீர் ஆகிய மூன்றையும் கலந்த இன்சுவை முந்நீரைப் பருகிக் கடலில் நீராடிக் களித்தனர் என்று இயற்கை வளமும் மக்களின் மன நிறைவும் செறிந்த செழிப்...
- Get link
- X
- Other Apps
எள் வேளாண்மை- ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்கள் புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் தமிழகம் வேளாண் பெருநாடு. இங்கு நன்செய், புன்செய் வளநிலங்களில் பல்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றுள் எள் பழங்காலத்திலிருந்து பரவலாகப் பயிரிடப்படுகின்ற புன்செய்ப் பயிராகும். ஏரோட்டி எள் விதைத்துப் பாத்தி கட்டியபின் மழையால் / நீர் பாய்ச்சி வளர்ப்பதாக எள் விளைவிக்கப்படுகின்றது. முற்றிய செடியைப் பிடுங்கி உலர்த்தித் தட்டி எள் எடுத்துத் தூய்மையாக்கி, செக்கில் ஆட்டி எண்ணெய் பிழியப்படும். எள்ளோடு கருப்பட்டி, சர்க்கரை சேர்த்து ஆட்டுவதும் உண்டு. இதன் பிண்ணாக்கு மிருகங்களுக்கு இணை உணவாகவும் , நிலத்திற்கு உரமாகவும் பயன்படுகின்றது. பயனற்ற/ திறனற்ற மனிதனைப் புண்ணாக்கு என்று நகையாடுவதுமுண்டு. எள் விதைத்து இரண்டு மாதங்கள் ஆனதும் செடிகளில் பூப்பூத்து இளங்காய்களாக வளரும். இதனுள் விதைகள் அடுக்காக முதிரும். அப்போது எள் செடியைக் கையால் பிடித்தால், ஒரு கைப்பிடி உயரத்தில் கு...
- Get link
- X
- Other Apps
பொதுப் பெயரைச் சிறப்புப் பெயராக்கல் – புறநானூற்றுப் பதிவுகள் புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் ஒட்டுமொழியான தமிழில் வேர்ச்சொல்லுடன் பேசு+கிறு+ஆன் என்றவாறு பின்னொட்டுகளை முறையாக ஒட்டிச் சொற்களை ஆக்குகின்றோம். இதைப் பகுபத உறுப்புகள்/ பொருண்மைக் கூறுகள் என்று குறிப்பர். அடுத்து, சொற்களைத் தேர்ந்து இலக்கணம், பொருண்மை, பண்பாடு ஆகிய கட்டுப்பாடுகளை நோக்கித் தொடர்கள் ஆக்கப்படுகின்றன. அப்போது தொடர்ப் பொருண்மைச் சூழலுக்கேற்ப உடன்பாட்டு/ எதிர்மறையில் தொடர்கள் இயல்கின்றன. இதற்கேற்பச் சொற்கள் பெய்யப்படுகின்றன. சான்றாக, வள்ளல் பரிசு வழங்கினார் / வழங்கவில்லை என்னும் பதிவைக் கருதலாம். இதோடு மரம் என்னும் பொதுச்சொல்லோடு தென்னை என்னும் சிறப்புச் சொல்லை இணைத்துத் தெளிவ...
- Get link
- X
- Other Apps
பல்சான்றீர் ! – அண்மையுறுப்பு/ குறிப்புப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் புறநானூறு நரிவெரூஉத்தலையாரின் 195ஆம் பா, அதிகமாக மேற்கோளாக ஆளப்படு கின்றது. இது பல்சான்றீரே! என்று தொடங்குகின்றது. பல்சான்றீர் என்னும் விளித் தொடர் கீழ்வருகின்ற இரண்டு கருத்துகளுக்கு வாய்ப்பாகின்றது: v ஓரிடத்தில் பல சான்றோர் வாழ்தல் v ஒரு சான்றோர் பல நற்குண ங்களில் நிறைந்திருத்தல் இதனை அண்மையுறுப்பு ஆய்வு, அதாவது ஒரு தொடர்ப் பொருண்மையில் முன்பின் இயல்கின்ற உறுப்புச் சொல்லினால் கருத்தறிதல் என்னும் தொடரியல் அணுகுமுறையில் நோக்கலாம். ஆயினும் பாவின் முழுமையையும் கருதியே கருத்தறியவேண்டும். இம் முறையில் , Ø பல சான்றீர் என்னும் புணர்ச்சியில் பலவின் ஈற்று அகரம் கெட்டு ‘ பல்’ என்றானது. Ø இப் பாவில் உலகின் நிலையாமை; இறப்பு ஆகியன உறுதிப்படுத்தப்ப...
- Get link
- X
- Other Apps
தலைமைக்கும் தகைமைக்கும் சான்றான ’காவிதி’யர்- காஞ்சிப் பொருண்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் நிலைபேறுடைய மானுட மதிப்புகளின் கலனாகத் திகழ்கின்ற சங்கப் பாக்கள் பொதுமேலாண்மையியல் கொள்கைகளையும் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் காவிதிப் பட்டம் என்பதும் ஒன்றாகும். பத்துப்பாட்டில் நீண்ட பாடலான மதுரைக்காஞ்சி அரிய கருத்துகளை ஆவணப்படுத்தும்போது அரசிடமிருந்து காவிதிப் பட்டம் பெற்ற அமைச்சர்களின் தலைமை/ தகைமை மேன்மைகளை விண்டுரைக்கின்றது. மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியின், மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல ...