தலைப்பாடு=நிகழ்தகைமை (probability) : கருத்தாய்வு

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                பழங்காலத்தில் அனைத்து அறிவுத் துறைகளும் இலக்கியங்களாகக் கருதப்பட்டதால், அரசியல், போரியல், பொருளாதாரம், மனையியல், வேளாண்மை, மருந்தியல், இறையியல் போன்ற பலதுறைக் கருத்துகளின் புதைவிடமாக இலக்கியங்கள் திகழ்கின்றன. மேலும் இசை, கணிதம், வானியல் சார்ந்த நூல்களும் இவற்றைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் தமிழகத்தில்  இருந்தனர்; முழு / பின்ன எண்கள் பயன்படுத்தப்பட்டன. ஆகவே தொல்காப்பியம் தொடங்கி இலக்கண, இலக்கியங்களில் இத்தகைய கருத்துகள் காணப்படுகின்றன. இம் முறையில் நிகழ்தகைமை குறித்த கருத்து, புறநானூறு 70ஆம் பாவின் 18ஆம் அடியில் இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது.

கோவூர் கிழார் கிள்ளிவளவனின் ஈகைத் திறனைப் போற்றுகையில், நாடி வந்த இரவலர்க்கு உறுதியாகப் பரிசளித்து வளப்படுப்பான் என்பதை,

விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்

தலைப்பாடு அன்றுஅவன் ஈகை;

நினைக்க வேண்டாவாழ்கஅவன் தாளே!  (புறநானூறு பா 70; அடிகள் 17-19)

 

என்றவாறு ஓர் உவமை கூறிப் போற்றுகின்றார்.  அதாவது, விறகு சேகரிக்கக் காட்டுக்குள் செல்வானுக்கு எப்போதாவது/ நல்வாய்ப்பாகப் பொன் காசு கிடைப்பதுண்டு. மேலும் அது நிலையானதன்று/ குறைவான நிகழ்தகைமை  உடையது. ஆனால் கிள்ளிவளவனின் கொடை நிலையானது; முழு நிகழ்தகைமை  உடையது என்று கோவூர் கிழார் உறுதியளிக்கின்றார். இதை,

Probability is the branch of math measuring how likely an event is, expressed as a number from 0 (impossible) to 1 (certain), calculated by dividing favorable outcomes by total outcomes, and used to quantify uncertainty in daily life, science, finance, and AI. 

என்னும் விளக்கத்தோடு இணைத்து நோக்கலாம். பாணனின் ஐயத்தைப் போக்கி, வளவனின் ஈகைப் பெருமையைப் போற்றுகின்ற இவ் அடிகள் ஆழமான அறிவுத் தேடலுக்கு வாய்ப்பாகின்றன.

  நன்றி: இணையத் தரவுகள்                                  >>>>>>>

 

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு