Posts

Showing posts from August, 2025
                                                வள்ளுவத்தில் ‘ ஞாட்பு ’ – சூழற் கருத்தாய்வு புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்   தமிழுக்கும் தமிழருக்கும் பெருமையை உலகளவில் ஈட்டித் தருகின்ற வள்ளுவம் பழந்தமிழ்ச் சொற்களைச் செவ்வனே பயன்படுத்திக்கொண்டுள்ளது . இவற்றின் பொருள் எளிதில் புரியாமல் , அறிதலில் இடைவெளி ஏற்படுகின்றது . இதனால் குறட்பாக்களைப் பயில்கையிலும் கற்பிக்கும்போதும் அரிய / இக் காலத்தில் வழக்கிறந்த சொற்களை , உரையாசிரியர்களைப் போல விளக்கித் தெளிவிக்கவேண்டும் . ஞாட்பு என்னும் பெயர்ச் சொல்லின் பொருளை விதந்து விளக்காமல் , இயல்பாகக் கற்போரால் அறியமுடியாது . ஒண்ணுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு ( 1088) என்னும் குறட்பாவில் மட்டும் ஞாட்பு என்னும் பழந்தமிழ்ப் பெயர்ச் சொல் போர்க்களம் என்கின்ற கருத்தில் ஆளப்பட்டுள்ளது . போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை , இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே ...
                                       அவம் : வள்ளுவ மானுடச் சிதைவுப் பொருண்மை                                           பஞ்சலிங்கபுரம் குழந்தைசாமி, புதுவை பேச்சொலிகளால் சொற்களும் சொற்களால் தொடர்களும் ஆக்கப்பட்டுக் கருத்து / உணர்ச்சிப் பரிமாற்றம் நிகழ்த்தப்படுகின்றது. சொற்கள் எண்ணங்களையும் செய்திகளையும் வெளிப்படுத்துகின்றன. அதனால் ஒவ்வொரு சொல்லிலும் புதைந்துள்ள மனிதவளப் பொருண்மையைக் கூர்ந்து அறியவேண்டும். அதனால் வாழ்க்கை வளப்படும். மானுட மேம்பாட்டை வகுத்துரைக்கின்ற வள்ளுவம் அவம்  என்னும் பெயர்ச்சொல்லால் சிதைந்து விடாதே என்னும் எச்சரிக்கையை விடுக்கின்றது. தவம் , அறநெறி ஆகியவை வளத்தை மிகுவிப்பன; அவம் என்பது பயன்தராத, கேடு விளைக்கின்ற செயல்பாடு...
                   சிந்தாமணியில் நம்பன் , நம்பி என்னும் சொற்கள் உணர்த்துகின்ற இளைஞர் வளம் புதுவை குழந்தைசாமி , புதுச்சேரி முதன்மைச் சொற்கள் : இளைஞர் வளம் , நிலைபேறுடைய மானுட மதிப்புகள் , சீவகன் ,    விமலை , உதயணன் , யூகி . “ இளைஞர்களே , எழுந்து நில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை வலிமையான கைகளால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்துகொண்டே வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை. பயத்திற்கு மாற்று , வலிமையைக் குறித்து எண்ணுவது தான். அளவற்ற தன்னம்பிக்கை அச்சத்தை விரட்டிவிடும். முழு வேகத்துடன் செயலாற்றினால் வெற்றி இலக்கை விரைவில் அடையமுடியும். என்னோடு வாருங்கள். உங்களுக்குத் தோள்கொடுக்க நான்  இருக்கிறேன் ” என்று இளைஞர்களுக்குத் தன் வீரக்குரலால் அழைப்புவிடுத்தவர் வீரத்துறவி விவேகானந்தர் . இவரைப் போலவே இலக்கியப் படைப்பாளர்கள் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் இளைஞர் நலன் , இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் குறித்துக் குரல்கொடுத்துள்ளனர் . தொல்காப்பியப் பொருளதிகாரம...