Posts

Showing posts from September, 2022
 திருக்குறளில் பணை / பனை= வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்க, குறளில் பயில்கின்ற சொற்களின் பொருளை அறிதல் நன்று. ஒப்பொலிச் சொற்களான பணை / பனை ஆகியன முறையே பெருத்த; பெரிய(அளவிடமுடியாத) என்னும் பொருளில் பெயரடைகளாக இயல்கின்றன. நோக்குக: குறட்பாக்கள் 1234 / 104, 133, 1282-
  திருக்குறளில் ‘ தொடி ‘ கருத்தாய்வு பேராசிரியர் குழந்தைசாமி , புதுச்சேரி திருக்குறள் மானுட வெற்றிக்கான விழுமியங்களை விண்டுரைக்கின்ற சீரிய செவ்வியல் இலக்கியம் .  அதன் ஒவ்வொரு சொல்லிலும் ஓர் அறக் கொள்கை புகுத்தப்பட்டிருக்கின்றது . அதனால் சொற்களின் கருத்தைத் தொடரமைப்பு , சூழல் , விளம்புகின்ற பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகி அறிவது இன்றியமையாதது . திருக்குறளில் தொடி என்னும் பெயர்ச் சொல் அளவு , கைவளையல் , இனிய பெண் ஆகிய பொருளில் ஒப்புருச் சொல்லாகப்  பயில்கின்றது . உழவு அதிகாரத்திலுள்ள 1037 ஆம் குறளில் ஓர் அளவை க் குறித்தும் , காமத்துப்பாலிலுள்ள 1235, 1236, 1279 ஆகிய குறட்பாக்களில் கைவளையல் என்றும் பொருட்பாலில் 911, காமத்துப்பாலிலுள்ள 1101, 1135, 1234, 1238, 1275 ஆகிய குறட்பாக்களில்   பெண் என்னும் பொருளிலும் இயல்கின்றது . இவ்வாறு ஒவ்வொரு சொல்லையும் கருத்துணர்ந்து , சுவைப்பதோடு , வள்ளுவத்தை வாழ்க்கை நெறி ஆக்குவோமாக !