திருக்குறளில் ‘ தொடி ‘ கருத்தாய்வு
பேராசிரியர்
குழந்தைசாமி, புதுச்சேரி
திருக்குறள் மானுட வெற்றிக்கான விழுமியங்களை
விண்டுரைக்கின்ற சீரிய செவ்வியல் இலக்கியம். அதன் ஒவ்வொரு சொல்லிலும் ஓர் அறக்
கொள்கை புகுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் சொற்களின் கருத்தைத்
தொடரமைப்பு , சூழல் , விளம்புகின்ற பொருள்
ஆகியவற்றின் அடிப்படையில் அணுகி அறிவது இன்றியமையாதது. திருக்குறளில்
தொடி என்னும் பெயர்ச் சொல் அளவு,
கைவளையல், இனிய பெண் ஆகிய பொருளில் ஒப்புருச் சொல்லாகப்
பயில்கின்றது. உழவு அதிகாரத்திலுள்ள
1037ஆம் குறளில் ஓர் அளவைக் குறித்தும்,
காமத்துப்பாலிலுள்ள 1235, 1236, 1279 ஆகிய குறட்பாக்களில்
கைவளையல் என்றும் பொருட்பாலில் 911, காமத்துப்பாலிலுள்ள 1101, 1135, 1234, 1238, 1275ஆகிய
குறட்பாக்களில் பெண் என்னும் பொருளிலும் இயல்கின்றது.
இவ்வாறு ஒவ்வொரு சொல்லையும் கருத்துணர்ந்து, சுவைப்பதோடு,
வள்ளுவத்தை வாழ்க்கை நெறி ஆக்குவோமாக!
Comments
Post a Comment