பண்டு – நிலை மாற்றப் பொருண்மை
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தொல்காப்பியம்
காலத்தை இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்று மூன்றாகப் பகுக்கின்றது. இது இலக்கண விளக்கம் மட்டுமன்று; வாழ்வியல் விழுமியமும்
ஆகும். அதாவது சென்ற கால மேன்மை தொடருமா ? மாறுமா?, மாற்றம் முன்னேற்றமாகுமா? போன்ற
எண்ணங்கள் நிலையானவை; அனைவருக்கும் அனைத்திற்கும் பொருந்துபவை. இத்தகைய உலகளாவிய மாற்ற
நிலையைக் காஞ்சித் திணையில் தொல்காப்பியம் சுட்டுகின்றது. முன்னைய நிலையைச்
சுட்ட முன்பு, பண்டு போன்ற சொற்கள் வழக்கிலும் செய்யுளிலும்
தொன்றுதொட்டு ஆளப்படுகின்றன. இக் குறிப்புரை பண்டு
என்னும் சொல்லால் வள்ளுவம்
முன்னைய நிலை மாறியதைப் பதிவதை வெளிப்படுத்துகின்றது.
காமத்துப்பாலில்,
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல் (1133)
என்னும் இரண்டு குறட்பாக்களில் தலைவன் தலைவியின்
கண் நோக்கால் ஏற்பட்ட மன வலியையும் , காதல் நோக்கம் கைகூடாததால்
தனக்கு எற்பட்ட தன்மான இழப்பையும் மனத் தளர்ச்சியையும் எடுத்துரைக்கின்றான். இதற்கு பண்டு என்னும் சொல்லை ஆள்கின்றான். இவற்றால் அறியப்படுகின்ற விழுமியம் / பொருண்மைக் கொள்கைகளாவன:
Ø மாற்றம் ஒன்றே மாறாதது ; மாற்றத்தை ஏற்கும் மனமேன்மை வேண்டும். உணர்ச்சிப்
பெருக்கு மன வலியையும் தன்மான இழப்பையும்
மனத் தளர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்போது புலம்பல் தோன்றும்.
இவ்வாறு ஒவ்வொரு சொல்லையும் நோக்கின் தெளிவு
வாய்ப்பாகும்.
நன்றி : இணையத் தரவுகள் ******
Comments
Post a Comment