Posts

Showing posts from July, 2020

வள்ளுவ உணர்ச்சி மேலாண்மை

திருக்குறள் வகுத்த நகை முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி.     மனித வாழ்க்கையின் மாண்பினை விண்டுரைக்கும் அற இலக்கியமான வள்ளுவம் உணர்ச்சி மேலாண்மையையும் உணரக் கூறியுள்ளது. மனிதச் செயல்பாடுகளில் ஒன்றான நகையையும் அதன் வெளிப்பாட்டு நெறிகளும் முறைப்படி அமைய வலியுறுத்துகிறது. இனிமையாக நகைக்க வேண்டும்; பிறரைப் புண்படுத்துமாறு நகைக்க்க் கூடாது என்றவாறு அறிவுறுத்துகின்றது. இதைத் தொல்காப்பியம் மற்றும் உளவியல் நோக்கில் அணுகுவதாக இந்தக் கட்டுரை அமைகின்றது. தொல்காப்பிய மெய்ப்பாடுகள்:      பொருளதிகார மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் இலக்கிய உணர்ச்சிகளுக்கு மெய்ப்பாடுகள் என்று பெயரிட்டு நகை முதலியவற்றைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் நான்கு காரணங்களால் நகை தோன்றும் என நிலைக்களன் சுட்டியுள்ளார். அதாவது பெரும்பானமை பிறரிடமும் சிலபோது தன்னிடமும் தொய்வு காணும்போது நகைக்கும் எண்ணம் ஏற்படும் என்பது தொல்காப்பியப் பதிவு. இதனால் நகை நன்மையும் புண்மையும் செய்யும் என்பது அறியப்படுகின்றது. 1 உளவியல் நோக்கு :     உள...

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு

Image
        தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு                                       ( முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி-605 008. பேச: 94863 66572 .)         தமிழின் தொன்மையான / தலைமையான இலக்கண நூலாம் தொல்காப்பியத்தில் எழுத்து சொல் ஆகிய அதிகாரங்களில் தமிழ் மொழியின் அமைப்புகளும் அவற்றின் இயங்கு முறையும், பொருளதிகாரத்தில் இலக்கியப் பொருண்மையும் விளக்கவியல் பாங்குடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எழுத்து, சொல்   தொடர் ஆகியவற்றின் இலக்கணங்களை விளக்கும்போது மொழிப் பொருண்மைச் செய்திகள் ஆங்காங்கே தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளன. இது குறித்துத் தொல்காப்பிய உரைகளில் காணப்படும் கருத்துகளையும் ஆய்வுக் கட்டுரைகள்/நூல்கள் கூறும் செய்திகளையும் தொகுத்து வகைதொகைப்படுத்தித் தனியான/முழுமையான ஆய்வை மேற்கொண்டால் அது இலக்கண இலக்கியப் புரிதிறனுக்கும் படைப்புக்கும் ஆய்வுக்கும் உறுதுணையாகும். மேலும் தமிழ் மொழிப்பொருண்மைக...
               தமிழ்ப் பொருண்மையியல் வளம்   (   GLORY   OF   TAMIL   SEMANTICS )       முனைவர் ப. கொழந்தசாமி , புதுச்சேரி- 605 008,    .   பேச: 94863 66572.       உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழி இலக்கண இலக்கிய வளம் பெற்றிருப்பதோடு இவற்றின் பல்வேறு கோணங்களையும் உள்ளடக்கியதாகவும் மிளிர்கின்றது. இன்று கிடைக்கும் இலக்கண நூல்களுள் தொன்மையானதான தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களில் மொழி மற்றும் இலக்கிய அமைப்பு விளக்கங்களையும் பொருண்மையியல் கொள்கைகளையும் தெளிவுறுத்தியுள்ளது. தொல்காப்பியத்தில் கூறப்பட்ட எழுத்து, சொல், அகம், புறம், யாப்பு, அணி, வண்ணம், பாட்டியல் முதலிய இலக்கணச் செய்திகள் பிற்காலத்தில் தனிநூல்களாக வளர்ந்தது போலப் பொருண்மையியல் தனித் துறையாக வளரவில்லை; ஆயினும் அனைத்து இலக்கண நூல்களிலும் இலக்கண இலக்கிய உரைகளிலும் மொழிப் பொருண்மையியல் செய்திகள் இலக்கண விளக்கத்தின் ஒரு கூறாக ஆங்காங்கே சுட்டப்பட்டுள்ள...