வள்ளுவம் கண்ட ‘ எழில் ’ : கருத்துப் பொருண்மை முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . வளமான தமிழ் மொழியில் படைக்கப்பட்ட வள்ளுவம் , சொல்லாட்சித் தளத்தில் அய்வுச் செம்மை செறிந்ததாக இலங்குகின்றது . உயர்தனிச் செம்மொழியாம் தமிழில் ஒருபொருட்பல சொல் , பலபொருளொரு சொல் , ஒப்புருச் சொல் போல்வன தொன்மைக் காலந்தொட்டு இயல்வதைத் தொல்காப்பியம் திரிசொல் என்று எச்சவியலின் முதல் நூற்பாவில் குறிப்பிடுகின்றது . அவ் வகையில் எழில் என்னும் , தோற்றப் பொலிவைக் குறிக்கின்ற பெயர்ச்சொல் வள்ளுவத்தில் இயலுமாற்றை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது . நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று ( 407 ) என்னும் குறட்பாவில் அழகான , எழுச்சி மிக்க தோற்றம் என்னும் பொருளில் எழில் பயில்கின்றது . தொல்காப்பியத்தின் 1192 ஆம் நூற்பாவில் , கட்புலனாகாத நுண்பொருண்மை...
Posts
Showing posts from November, 2023
- Get link
- X
- Other Apps
வள்ளுவ ’ ஏர் ’ : கருத்துப் பொருண்மை முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . தமிழ் மொழி தொன்மையானது ; வளம் மிக்கது . கால வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்துக் கன்னித் தன்மையுடன் திகழ்வது . இத்தகைய போக்கினை இலக்கண நூல்கள் மட்டுமின்றி இலக்கியப் பனுவல்களும் வெளிப்படுத்துகின்றன . அந் நிலையில் திருக்குறளின் நடைநலம் மொழி வரலாற்றையும் பொருண்மை மரபையும் அறிய வாய்ப்பாவதால் ‘ ஏர் ’ என்னும் பெயர்ச்சொல் வள்ளுவத்தில் இயலுமாற்றை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது . சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை (1031 ) என்னுமாறு உழவைப் போற்றுவதாக , பொது வழக்கில் ‘ ஏர் ’ அமைந்துள்ளது . வில் லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல் லேர் உழவர் பகை (872) என்னும் குறட்பாவில் ‘ ஏர் ’ திறன் என்னும் கருத்தில் வீரர் , மொழித்திறனாளர் என இயல்கின்றது . இது வள்ளுவர் படைத்த சிறப்பு வழக்காகும் . கரப்பி...
- Get link
- X
- Other Apps
வள்ளுவ ‘ ஆ ’- பொருண்மை நோக்கு முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . அனைத்து வளர்ந்த மொழிகளுக்கும் எழுத்து , சொல் , தொடர் , பொருண்மை ஆகிய இலக்கண அமைப்புகள் இருக்கும் ; ஆயினும் ஒவ்வொரு மொழியிலும் சிறப்பு இயல்புகள் அமைந்திருக்கும் . அதன்படி தமிழில் உள்ள சொல்லாக்க முறைமை , சொற்களின் பொருண்மை ஆற்றல் , வேற்றுமையமைப்பு ஆகியன விதந்து சிறப்பாக அறியத்தக்கன . நெடுங்கணக்கில் உயிர் நெட்டெழுத்தாக இயல்கின்ற ஆ என்னும் ஓரெழுத்தொருமொழி பல்பொருட்சொல்லாகத் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளதை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது . பசுமாட்டைச் சுட்டுகின்ற பெயராகவும் , சேய்மைச் சுட்டு , பெயரெச்ச விகுதி , வினைமுற்று விகுதி என்பதாக இடைச்சொல்லாகவும் ஆ இயல்வதைத் தொல்காப்பியத்தால் தெளியலாம் . ( காண்க , ஜெயதேவன் , ப .2...
- Get link
- X
- Other Apps
வள்ளுவ ‘ அடிமை ’ முனைவர் ப . கொழந்தசாமி , புதுச்சேரி மானுட மேன்மைக்கான கொள்கைவரைவாகத் திகழ்கின்ற வள்ளுவம் , மனிதச் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கியும் பல்துறை நெறிநூல்களைக் கற்றுத் தெளிந்தும் அனைத்து நிலையிலான மானுடர்க்குமான அறநெறிகளை விண்டுரைத்துள்ளது ; குறிப்பிட்ட ஒரு பிரிவினர்க்குக் கூறப்பட்டவை மற்றவர்க்கும் பொருந்தக்கூடும் . அவ் வகையில் , மன்னனுக்காக மடியின்மை அதிகாரத்தில் மொழியப்பட்ட , மடிமை குடிமைக்கண் தங்க...
- Get link
- X
- Other Apps
குறளில் ‘ அம்மா ’ முனைவர் ப . கொழந்தசாமி , புதுச்சேரி . மொழிப் பயன்பாட்டில் ஒரு சொல் பூ என்று தனிச்சொல்லாகவும் , பூப்பந்து போன்றவாறு கூட்டுச்சொல்லாகவும் இயலும் . அதனால் சொல்லின் ஆக்க மரபையும் வழங்கு சூழலையும் அறிந்து , கருத்துணரவேண்டும் . அந் நிலையில் காமத்துப்பாலில் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தின் 1107 ஆம் குறட்பாவிலுள்ள அம்மா என்னும் கூட்டுச்சொல் ஆழ்ந்து நோக்கிப் பொருளுணரத்தக்கது . தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (1107) என்னும் குறட்பாவில் , அம் ( அழகிய ) + மா ( மாமை நிறம் ) என்னும் இரண்டு பெயர்ச்சொற்கள் புணர்ந்து அம்மா என்னும் கூட்டுச்சொல் பண்புப்பெயரடையாக உருவானது . அதாவது அழகிய மாமை நிறமுடைய ( இளம்பெண் ) என்பது இக் கூட்டுச்சொல்லின் கருத்தாகும் ....
- Get link
- X
- Other Apps
1179 ஆம் குறட்பாவின் தொடரமைப்பு முனைவர் ப . கொழந்தசாமி , புதுச்சேரி . தமிழுக்கும் தமிழர்க்கும் இணையிலாப் பெருமையைப் பெற்றுத்தருகின்ற , ஆய்வுக்கு விரிதளமாகத் திகழ்கின்ற திருக்குறள் உலகெங்கும் போற்றிக் கொண்டாடப்படுகின்றது . ஆனால் திருக்குறள் கடைந்து திரட்டித் தருகின்ற வாழ்வியல் விழுமியங்களை , மக்கள் முழுதும் அறிந்திருக்கின்றனர் / புரிந்துகொள்கின்றனர் என்று உறுதியாகப் பறையவியலாது . இந்த இடைவெளியைக் குறைக்க உரையாசிரியர்களைப் போலப் பல அணுகுமுறைகளைக் கண்டறியவேண்டும் . அவற்றுள் ஒன்று குறட்பாக்களின் தொடரமைப்பை அறிதல் ஆகும் . தொல்காப்பிய இலக்கணம் தொடரை அடிப்படையாகக்கொண்டதை இவண் ஒப்பலாம் . காட்டாக , பின்வருகின்ற 1179 ஆம் குறட்பாவின் தொடரமைப்பை நோக்கலாம் . வாராக்கால் துஞ்சா ; வரின்துஞ்சா ; ஆயிடை ...
- Get link
- X
- Other Apps
வள்ளுவத்தில் ‘ அ ’ – பல்பொருள் தன்மை முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . இலக்கியப் படைப்பு ( வாய்மொழி / எழுத்து ஆகிய ) மொழி வாயிலாக , கருத்து , அழகியல் ஆகிய கூறுகளைக் கலந்து ஆக்கப்படுகின்றது . அம் மரபில் , திருவள்ளுவர் தனக்கு முந்தைய / தன் காலத்திய மொழி வழக்குகளையும் மரபுகளையும் போற்றித் தனது படைப்பைச் சிறப்பித்துள்ளார் . அவ் வகையில் அ என்னும் மொழிக் கூறு பலபொருட்சொல்லாக / ஓரெழுத்தொருமொழியாக வள்ளுவத்தில் நுட்பமாக ஆளப்பட்டுள்ளமை இவண் விளக்கப்படுகின்றது . தொல்காப்பியத்தில் குற்றெழுத்தாகவும் , சுட்டுப் பெயராகவும் அசைநிலையாகவும் சாரியையாகவும் ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபாகவும் பலவின்பால் வினைமுற்றாகவும் பெயரெச்ச / வினையெச்ச / வியங்கோள் விகுதியாகவும் ஆகாரத்தின் அளபெடைக் குறியீடாகவும் அ அடையாளப்படுத்தப்பட்டுள்ளது . ( நோக்குக : ஜெயதேவன் , ப .01). இம் மொழி மரபைக் கைக்கொண்டு வள்ளுவம் , 225, 247, 254, 312, 350, 355, 370, 411, 423, 426, 475, 48...
- Get link
- X
- Other Apps
தொல்காப்பியத்திலும் வள்ளுவத்திலும் ‘ மா ’ : வழக்குப் பொருண்மை முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . உயர்தனிச் செம்மொழியான தமிழில் , பல்பொருட்சொற்கள் , ஒப்புருச் சொற்கள் அனைய பல வகைச் சொற்பொருண்மை நுட்பங்கள் இயல்கின்றன . அதனால் தொடரில் அமைகின்ற சூழல் நோக்கி ஒரு சொல்லின் கருத்தை நோக்கவேண்டும் . சான்றாக , மா என்னும் ஓரெழுத்தொருமொழி தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் பல்பொருட்சொல்லாக இயல்வதைக் கருதலாம் . தொல்காப்பியத்தில் மா வழக்கு அட்டவணை : நூற்பா எண் சொல்லாட்சி கருத்து 224 ஆவும் மா வும் விலங்கு ( பெயர் ) 232 மாமரக் கிளவி ; மா மரம் ; விலங்கு ( பெயர் ) 481 வழங்கியல் மா வென் கிளவி நிலவளவைப் பெயர் 758 ...