வள்ளுவ  ‘’- பொருண்மை நோக்கு

முனைவர் ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

                           அனைத்து வளர்ந்த மொழிகளுக்கும் எழுத்து, சொல், தொடர், பொருண்மை ஆகிய இலக்கண அமைப்புகள் இருக்கும்; ஆயினும் ஒவ்வொரு மொழியிலும் சிறப்பு இயல்புகள் அமைந்திருக்கும் . அதன்படி தமிழில் உள்ள சொல்லாக்க முறைமை, சொற்களின் பொருண்மை ஆற்றல், வேற்றுமையமைப்பு ஆகியன விதந்து சிறப்பாக அறியத்தக்கன. நெடுங்கணக்கில் உயிர் நெட்டெழுத்தாக இயல்கின்ற ஆ  என்னும் ஓரெழுத்தொருமொழி பல்பொருட்சொல்லாகத் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளதை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது.

பசுமாட்டைச் சுட்டுகின்ற பெயராகவும்,சேய்மைச் சுட்டு,  பெயரெச்ச விகுதி, வினைமுற்று விகுதி என்பதாக  இடைச்சொல்லாகவும் இயல்வதைத் தொல்காப்பியத்தால்  தெளியலாம். ( காண்க, ஜெயதேவன், .21 ). மொழி மரபைப் பின்பற்றுகின்ற திருவள்ளுவர் தனது படைப்பைச் சிறப்பாக்கவும் விளம்புகின்ற விழுமியத்தைப் படிப்பவர் உளங்கொள்ள வாய்ப்பாகவும் என்னும் ஓரெழுத்தொருமொழியைச் செவ்வனே கையாண்டுள்ளார்.

                       ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
                                   காவலன் காவான் எனின்
(:560)

என்னும் குறட்பாவில் என்னும் சொல்லை மாடு என்னும் பொருளில் ஆண்டுள்ளதாகப் பழைய உரைகள் சுட்ட, கா.சு.பிள்ளை, சிவயோகி சிவக்குமார், மு. கருணாநிதி ஆகியோர் ஆக்கம் என்று தொழிற்பெயராக, உண்டாகக்கூடிய எனும் கருத்தி இயல்வதாகக் குறித்துள்ளனர். திருக்குறளின் கருத்து விளக்க மரபைக் கருதும்போது, பசும்பாலும் ஆக்கத்துள் ஒன்றாவதால், விரிவான பொருளில் ஆக்கம் என்னும் பொருள் பொருத்தமாக அமைகின்றது. இதனால் வைப் பெயராகவும் தொழிற்பெயராகவும் கருத வாய்ப்பாகின்றது.

                         வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா ;ஆயிடை
                         ஆரஞர் உற்றன கண்.(1179)

என்னும், மூன்று தொடர்களைக் கொண்டுள்ள குறட்பாவில்,

                   வாரா, துஞ்சா, ஆயிடை

ஆகிய சொற்களில் மாறுபட்ட பொருளில் இயல்கின்றது. வாரா, துஞ்சா ஆகிய  பலவின்பால் எதிர்மறை வினைச்சொற்களின் ஈறாக இயல்கின்றதுஆயிடை என்னும் சொல்லில் என்னும் சேய்மைச் சுட்டு நீண்டு ஆ என்றாகி, அவற்றுக்கிடையில் என்னும் பொருளில் இயல்கின்றது.

            இவ்வாறாக, பெயராகவும் வினைச்சொல்லின் ஈறாகவும்  சேய்மைச் சுட்டாகவும் வள்ளுவத்தில் ஆ இயல்கின்றது என்னும் தெளிவுடன் குட்பாளை அணுகினால் பயன் மிகும்.

                                        பயன்பட்டவை

  ஜெயதேவன்,., (பதிப்.) 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.

      குறள் திறன் kuralthiran.com

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு