தொல்காப்பிய - பொருட்பன்மை

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            விளக்கவியல் இலக்கண நூலான தொல்காப்பியம் நுட்பமாக மொழி இயங்கியலை எடுத்துரைக்கின்றது. நூற்பாக்களில் இடம்பெறுகின்ற சொற்கள் செறிவானவை. அதனால் கொள்கை நோக்கில் ஒவ்வொரு சொல்லின் கருத்தையும் தெளியவேண்டும். இந் நிலையில் என்னும் சொல்லைப் பலபொருட்சொல்லாகத் தொல்காப்பியம் சுட்டுவதை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது.

            ஐ –  உயிர் நெடில்; இரட்டையுயிர்; கூட்டொலி(54)

-         உறவுப் பெயர் - அண்ணன் (1087)

-         ஐந்து என்னும் எண்ணுப்பெயர்/ அடை (1311)

-         இரண்டாம் வேற்றுமை உருபு (556)

-         வியப்புப் பொருள உரிச்சொல் (869)

-         விகுதி (708, 1222)

-         சாரியை (1152)

-         அசைநிலை (80)

இங்ஙனம் பெயர், இடை, உரி என்று பொருட்பன்மையில் ஐ இயலுமாற்றைத் தெளியுமாறே, குறிப்பிட்ட நூற்பாவில், விளம்பப்படுகின்ற இலக்கணக் கொள்கைக்கேற்ப ஒவ்வொரு சொல்லின் கருத்தையும் தெளிந்து புரிதிறனைச் செம்மையாக்கலாம்.

நன்றி: ஜெயதேவன்,வ., 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.

                                                             *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு