Posts

Showing posts from October, 2024
                     வள்ளுவத்தில் ’யாதனின் ’/    அதனின் – அடுக்கால் பன்மைப் பொருண்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் விழுமியங்களைச் சொற்களால் விளம்புவதால், வள்ளுவத்தின் ஒவ்வொரு சொற்கூறையும் நோக்கிக் கருத்துணரவேண்டும். பயனாளிக்குத் தான் உணர்த்த விழைகின்ற அறவியலைக் கொண்டுசேர்க்கப் படைப்பாளன் மொழி / இலக்கிய நுட்பங்களைக் கைக்கொள்கின்றான். அவற்றுள் பின்வருநிலையணி ஒன்றாகும். அதாவது ஒரு பாடலில் ஒரு சொல்லை அடுக்கி நிறுத்துவதாகும். அம் முறையில் அமைந்த, யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (341)            என்னும் குறட்பாவில் யாதனின் , அதனின் ஆகிய இரண்டு சொற்கள் அதே அடியில் பொருள் மாற்றமின்றி அடுக்கிவந்து பன்மை சுட்டுகின்றன அதாவது துறக்கவேண்டியவையும் , துன்பங்களும்/ பயன்களும் பல என்பதைச் சொல்லடுக்குகள் உணர்த்துகின்றன. யாதனின் என்பது ஐந்தாம் வேற்றுமை நீங்கல் பொருள் ; அதனின் என்பது மூன்றாம் வேற்றுமைக் கருவிப் பொருள் பயக்கின்றன. மேலும் ஒலிநுட்பமுள்ள இக்...
                                                            தகைமாண்ட தக்கார் யார் ? புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்                 உலகில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் இணையானோர். ஆனால் பண்பில் / திறனில் வேறுபடுவர். ஒருவர் அனைத்து அடிப்படைப் பண்புகளிலும் அறவோனாக விளங்கினால் / எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தால் / நல்லெண்ணங்களை வாய்ப்பாக்கினால்; மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்தால் அவரைத் தகைமாண்ட தக்கார் என்று வள்ளுவம் அடையாளப்படுத்துகின்றது. அடுத்து, இத்தகைய பெருமை சான்ற ஆன்றோர் சினக்கும்படி செயலாற்றலாகாது என்று அறிவுறுத்துகின்றது. ஆன்றோர் வெகுளார்; கொடுஞ்செயல் புரிந்தால் மட்டுமே அவர்கள் சினப்பர்: ஆயினும் அதனால் பெரும்பொருளும் பேரழிவுறும் என்பதை, வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின் ( 897) என்னும் குறட்பாவில் எச்சரிக்கின்றார்.  இத...
                                                வள்ளுவம் ‘ பயக்கும் ’ – விழுமியப் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்               அற இலக்கியமான திருக்குறள் மானுட மேன்மைக்கான விழுமியங்களை விண்டுரைக்கின்றது .  அப்போது இதை இப்படிச் செய்தால் இத்தகைய பேறு விளையும் என்று ஊக்கியும் ; இதனால் இன்ன கேடு நேரும் என்பதை எடுத்துரைத்து எச்சரித்தும் , எண்ணச் சீரமைவை வாய்ப்பாக்குகின்றது . இதற்குரிய சொற்களை , அறவியல் கலைச்சொற்களாக வள்ளுவம் ஆள்கின்றது . எனவே ஒவ்வொரு சொல்லையும் சூழல் நோக்கிக் கருத்துணரவேண்டும் . இந் நிலையில்  ‘ பயக்கும் ’ என்னும் வினைச்சொல் நற்பயன் விளைவை ச் சுட்டுவதை , நன்மையின்பால் மாந்தரைத் திசை திருப்புவதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது .   கீழ்வருகின்ற அட்டவணை இச் சொல் வரவை வரிசைப்படுத்துகின்றது :   குறட்பா எண் சொல் வடிவம் கருத்து ...
                                பொருண்மைக் கூறு அடிப்படையில் பகு / பகாப்பதங்கள் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்               உயர்தனிச் செம்மொழியான தமிழ் ஒட்டுமொழி ஆகும். அதனால் பொருண்மைக் கூறுகளை முறைப்படி இணைத்துச் சொற்கள் ஆக்கப்படுகின்றன. சொற்பாகுபாட்டில் பகுபதம், பகாப்பதம் என்பன பொருண்மைக் கூறு அடிப்படியில் அமைந்தவை என்பதை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. நன்னூலின் பதவியலில் கூறப்படும் சொல்லாக்க மரபுகள் இவண் உற்று நோக்கத்தக்கன. பகுபதம் , பகாப்பதம் என்பனவற்றில் பகுத்தால் பொருள் உணர்த்தும் பண்பு , அதாவது ஒரு சொல் ஒரே பொருட்கூறு உடையதாக இருப்பின் பகுபதம் ; ஒன்றுக்கு ம் மேற்பட்ட பொருட் கூறுகளை ப் பெற்றிரு ந்தால் பகுபதம் என்னும் பொருண்மை நுட்பம் உன்னத்தக்க து. நன்னூலின் ,                         பகுப்பால் பயனற்று இடுகுறி ...
                  Be kind /sympathetic /generous                               அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்                                       என்பும் உரியர் பிறர்க்கு( ThirukuRaL, 72)      The couplet insists on kindness & self-sacrifice. According to Merriam-Webster, self-sacrifice is defined as "an unselfish giving over of oneself or one's own interest for others". Kindness can mean putting other’s needs first (above our own) but it doesn’t necessarily need to involve high levels of self-sacrifice. In fact, showing kindness doesn’t rely on expensive or time-consuming actions – small acts of kindness can be equally powerful. Sharing a kind word with a stranger, paying someone a compliment, and expressing appreciation...
                                        இனியவை கூறல் : பயன் நோக்கு                                                 Utilitarianism in Good-natured conversation      புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             மனித வாழ்க்கையில் கருத்து/உணர்வுப் பகிர்வு முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. அதனால் பேசல்-கேட்டல் நெறிகளை அற இலக்கியங்கள் வகுத்துரைக்கின்றன. நட்பாடல், உறவியல், வேலைவாய்ப்பு, வணிகம், அரசியல், படைப்பாக்கம், ஊடகங்கள் ஆகிய தளங்களில் இத்தகைய ஆக்க இன்பகிர்வு பயன் நோக்கில் மக்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. சொல்லாடலில் உரிய, எளிய, இனிய, பயன்மிக்க சொற்களை ஆளவேண்டும் என்றும், ஒவ்வொரு சொல்லாடலும் மிகுபயனை விளைவிக்கவேண்டும் என்றும் மாந்தர் விழைகின்றனர். அதனால் இனியவை கூறுக என்று வள்ளுவம் வலியுறுத்து...
                                               வள்ளுவத்தில் ‘அமர்’ – பொருட்பன்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்                 இலக்கியம் மனித வாழ்க்கையிலிருந்து தோன்றி, மானுட வெற்றியை வாய்ப்பாக்க விழைகின்றது. அதற்கு இலக்கியத்தின் பாடுபொருளை / விழுமியத்தைக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு சொல்லையும் / கருத்தையும் தெளியவேண்டும். திருக்குறளின் சொல்லாட்சி நுட்பமானது. அதனால் வள்ளுவச் சொற்களைச் சூழல் நோக்கிக் கருத்துணரலாம். இந் நிலையில் ‘அமர்’ என்னும் பழந்தமிழ்ச் சொல் வள்ளுவத்தில் பெயராகவும் வினையாகவும் பொருட்பன்மையில் இயல்வதைச் சுட்டுவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. அமர்:             பழங்காலத்திலிருந்து   போர் என்று பெயராகவும், விரும்பி உறை / உட்கார் என்னும் பொருளில் வினையாகவும் பொருட்பன்மையில் ‘அமர்’ வழங்குகின்றது. மொழி மரபைப் போற்று...
                                 புறநானூற்றின் அடிப்படையில் ‘வரிசை’ வகுக்கின்ற வள்ளுவம் புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் அறத்துப்பாலில் தனிமனித அறங்களையும் பொருட்பாலில் சமூக, அரசியல், பொது வாழ்வியல் நெறிகளையும் வகுத்துரைக்கின்ற வள்ளுவம் , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (972) என்று அனைவரும் இணையானோர்; திறன் அடிப்படையில் வேறுபாடு இருக்கலாம் என்று சுட்டி, இதை வழிமொழிவதாக, பொதுநோக்கான் வேந்தன் வரிசை யா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் (528) என்னும் குறளை அமைத்துள்ளார். அனைவரையும் ஒரே நிலையில் பார்க்காதே ; தகுதியறிந்து மதிக்க; பாராட்டுக என்பது அரசியல் விழுமியமாகும். சுற்றம் காக்கவேண்டிய ஆட்சித் தலைமை, அரசுப் பணியாளரின் அறிவுத் திறன், ஆளுமைச் சீர்மை, கடமையுணர்வு, பங்களிப்பு ஆகியவற்றைப் போற்றி விருதளித்து ஊக்கலாம். இதனால் அரசனைச் சுற்றிலும் திறனாளர் சூழ்ந்திருப்பர்; அரசுப் பணிகள் செம்மையாக இயலும். இங்கு வரிசை   என்பது தகுதி / திறமைக்கேற்ற மதிப்பு ...