வள்ளுவத்தில் ’யாதனின்’/   அதனின் – அடுக்கால் பன்மைப் பொருண்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

விழுமியங்களைச் சொற்களால் விளம்புவதால், வள்ளுவத்தின் ஒவ்வொரு சொற்கூறையும் நோக்கிக் கருத்துணரவேண்டும். பயனாளிக்குத் தான் உணர்த்த விழைகின்ற அறவியலைக் கொண்டுசேர்க்கப் படைப்பாளன் மொழி / இலக்கிய நுட்பங்களைக் கைக்கொள்கின்றான். அவற்றுள் பின்வருநிலையணி ஒன்றாகும். அதாவது ஒரு பாடலில் ஒரு சொல்லை அடுக்கி நிறுத்துவதாகும். அம் முறையில் அமைந்த,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (341)          

என்னும் குறட்பாவில் யாதனின், அதனின் ஆகிய இரண்டு சொற்கள் அதே அடியில் பொருள் மாற்றமின்றி அடுக்கிவந்து பன்மை சுட்டுகின்றன அதாவது துறக்கவேண்டியவையும் , துன்பங்களும்/ பயன்களும் பல என்பதைச் சொல்லடுக்குகள் உணர்த்துகின்றன. யாதனின் என்பது ஐந்தாம் வேற்றுமை நீங்கல் பொருள் ; அதனின் என்பது மூன்றாம் வேற்றுமைக் கருவிப் பொருள் பயக்கின்றன. மேலும் ஒலிநுட்பமுள்ள இக் குறட்பாவைப் படிக்கும்போது உதடுகள் ஒட்டா. வள்ளுவத்தின் விளம்பு பொருள் அறிவுக்கு விருந்தாவது போலவே, விளம்பு முறையும் இலக்கிய இன்பம் பயந்து முருகியலை வாய்ப்பாக்குகின்றது.

  நன்றி: இணையத் தரவுகள்                                              ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு