ஆணி யால் வள்ளுவம் வகுக்கும் அறம் பேராசிரியர் குழந்தைசாமி , புதுச்சேரி திருக்குறளில் ஆளப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லிலும் ஓர் அறக் கொள்கை இலக்கியத் தொழில்நுட்பத்துடன் புகுத்தப்பட்டிருப்பதால் , மானுட மேன்மைக்கான விழுமியங்களை விண்டுரைக்கின்ற சீரிய செவ்வியல் இலக்கியமாக வள்ளுவத்தை உலகம் உணர்ந்துள்ளது . இதனைத் தெளிவாக அறியத் திருக்குறள் சொற்களின் கருத்தைத் தொடரமைப்பு , மொழிச் சூழல் , விளம்புகின்ற பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகி அறிவது இன்றியமையாததாகின்றது . திருக்குறளில் ஆணி என்னும் பெயர்ச் சொல் ஒன்றன்பால் பொருட்பெயராக , உருவுகண்டு எள்ளாமை வேண்டும் ; உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. ( வினைத் திட்பம் , குறட்பா 667 ) ( Despise not men of modest bearing; Look not at form, but what men are: For some there live, high functions sharing, Like linchpin of the mighty car!.) உழுவார் உலகத்தார்க்கு ஆணி ; அஃ தாற்றாது ...
Posts
Showing posts from July, 2023