Posts

Showing posts from May, 2021
  பொருண்மை நோக்கில் புறநானூற்றில் கொண்டியும் போந்தையும் முனைவர் ப . கொழந்தசாமி , இணைப் பேராசிரியர் , காஅபமேஆநி , புதுவை . தொன்மையான , சொல் வளம் மிக்க உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வதால் , தமிழ் இலக்கியங்களில் பல திறப்பட்ட சொற்கள் பெய்யப்பட்டுள்ளன . எனவே இலக்கியங்களைப் புரிந்துகொள்ள , அவற்றில் ஆளப்பட்டுள்ள சொற்களின் கருத்தைத் தெளிவாக அறியவேண்டும் . இக் கருத்துரையில் சங்கத் தொகைப் புற   இலக்கியமான புறநானூற்றில் கொண்டி , போந்தை ஆகிய சொற்கள் பெயர் எனும் ஒரே இலக்கண வகையில் மாறுபட்ட   பொருள்களில் பயின்றுவருவது விளக்கப்படுகின்றது . பல ஊரினரான , பல காலத்தைச் சார்ந்த 157 புலவர்களால் இயற்றப்பட்ட புறநானூற்றுப் பாக்களில் மொழி மற்றும் பண்பாட்டுப் பன்முகத் தன்மை இயல்வது இயற்கை . தொல்காப்பியர் எச்சவியலில் ,   செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம்குறிப்பினவே திசைச்சொல் கிளவி   ( நூற்பா , 883 ) என்று தொல்பழங் காலத்திலேயே தமிழில் வட்டார வழக்குச் சொற்கள் வழங்கப்பட்டதைச் சுட்டிள்ளார் . இதனால் . புறநானூற்றில் ஆளப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லையும் ,   அது தொடரில் அமை...
  நிலையான செல்வம் - குறட்பாவின் தொடர்ப் பொருண்மை          முனைவர் ப . கொழந்தசாமி , இணைப் பேராசிரியர் , காஅபமேஆநி , புதுவை . அற இலக்கியமான திருக்குறளை முறையாகவும் நிறைவாகவும் புரிந்துகொண்டு , வாழ்க்கையில் கடைபிடித்தால் தனி மனிதனும் சமூகமும் சிறப்புறலாம் .   இவ்வாறு திருக்குறளைக் கருத்துணர , இலக்கணக் கூறுகளும் தொடரமைப்பு முறையும் வாய்ப்பாகின்றன . ஆகவே இவற்றில் கருத்தூன்றுதல் இன்றியமையாதது . இத்தகைய கருத்து விளக்கப் பணிகளை உரைகள் செவ்வனே ஆற்றிவருகின்றன . ஒரு குறட்பாவின் கருத்தை அறிய , அதில் எத்தனை தொடர்கள் உள்ளன ? தொடரமைப்பு முறைமை யாது ? தொடரில் பயிலுகின்ற சிறப்புச் சொற்கள் யாவை ? ஆகியவற்றைக் கருதவேண்டும் .   இந்த நோக்கில் 39 ஆம் குறட்பாவின் கருத்து இங்கு விளக்கப்படுகின்றது . அதன்படி , அறத்தான் வருவதே இன்பம் ; மற்று எல்லாம் புறத்த ; புகழும் இல ( குறட்பா , 39 ) என்னும் குறட்பாவின் பொருண்மை அமைப்பை அணுகலாம் . இக் குறட்பாவில் பின்வருகின்ற நான்கு தொடர்களை அமைத்தால் தெளிவு மிகும் : 1.        அ...
     சொல்லின் ஈறாகின்ற அனைத்து கு வு ம் நான்காம் வேற்றுமை உருபன்று .           முனைவர் ப . கொழந்தசாமி , இணைப் பேராசிரியர் , காஅபமேஆநி , புதுவை . தமிழின் இலக்கண வரம்பு கட்டுக்கோப்பானது ; தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் இதைத் தெளிவுறுத்துகின்றன . சொற்கள் முறைப்படி தொடர்ந்து இலக்கண மற்றும் பொருண்மைப் பொருத்தமுடைய தொடர்களை ஆக்குகின்றன .  ஒரு தொடரின் உறுப்புகளாக அமைகின்ற சொற்கள் அந்தத் தொடரின் பொருண்மை மற்றும் ஒலி அமைப்புக்குக் கட்டுப்பட்டவை ; மேலும் நடையியல் தாக்கம் கொண்டவை . இந்த மொழியமைப்பைப் புணர்ச்சி என்று இலக்கணங்களும் , உருபொலியனியல் என்று மொழியியலும் சுட்டுகின்றன . இத்தகைய அமைப்புகளுள் ஒற்று மிகலும் ஒன்றாகும் . இந்தக் கட்டுரையில் , நான்காம் வேற்றுமை உருபான கு தொடரில் அமையும் பாங்கும் ஒற்றுமிகல் பண்பில் அது ஆற்றுகின்ற பணியும் தொடர்ப் பொருண்மையியல் நோக்கில் விளக்கப்படுகின்றன . முறையான இலக்கணப் புரிதிறன் வாய்த்தால் , பிழை தவிர்க்கப்படும் என்னும் கருதுகோளில் , பிழையில்லாமல் மொழியை ஆள வழிகாட்டு வதாகவும் வலியுற...
        சொல்லின் ஈறாகின்ற அனைத்து ஐ யும் இரண்டாம் வேற்றுமை உருபுகளா ?           முனைவர் ப . கொழந்தசாமி , இணைப் பேராசிரியர் , காஅபமேஆநி , புதுவை . தமிழின் இலக்கண வரம்பு கட்டுக்கோப்பானது ; தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் இதைத் தெளிவுறுத்துகின்றன . சொற்கள் முறைப்படி தொடர்ந்து இலக்கண மற்றும் பொருண்மைப் பொருத்தமுடைய தொடர்களை ஆக்குகின்றன .   ஒரு தொடரின் உறுப்புகளாக அமைகின்ற சொற்கள் அந்தத் தொடரின் பொருண்மை மற்றும் ஒலி அமைப்புக்குக் கட்டுப்பட்டவை ; மேலும் நடையியல் தாக்கம் கொண்டவை . இந்த மொழியமைப்பைப் புணர்ச்சி என்று இலக்கணங்களும் , உருபொலியனியல் என்று மொழியியலும் சுட்டுகின்றன . இத்தகைய அமைப்புகளுள் ஒற்று மிகலும் ஒன்றாகும் . இந்தக் கட்டுரையில் , இரண்டாம் வேற்றுமை உருபான ஐ தொடரில் அமையும் பாங்கும் ஒற்றுமிகல் பண்பில் அது ஆற்றுகின்ற பணியும் தொடர்ப் பொருண்மையியல் நோக்கில் விளக்கப்படுகின்றன . முறையான இலக்கணப் புரிதிறன் வாய்த்தால் , பிழை தவிர்க்கப்படும் என்னும் கருதுகோளில் , பிழையில்லாமல் மொழியை ஆள வழிகாட்டு வதாகவும் வ...