Posts

Showing posts from May, 2025
                                               அமக்களம் – வழக்குப் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்   தமிழ் இரட்டை வழக்குடையது. அதனால் மக்கள் பேச்சிலும் புலவோர் படைப்பிலும் ஒரு சொல் சற்று வேறுபாட்டுடன் இயல்கின்றது.  ஆயினும் இவ் இரண்டு வழக்குகளையும் இணைத்து நோக்கின் தெளிவு வாய்ப்பாகும். ’இவ அமக்களம் பன்றான்’ என்று தாய் தன் மகனைக் கடிகின்றாள். அதாவது தனக்குப் பிடிக்காதவற்றையும் துன்பம் விளைப்பனவற்றையும் இவன் செய்கின்றான்; அடங்க மறுக்கின்றான் என்பது இதன் கருத்து. அமர்க்களம் என்பதன் திரிபு  இவ் அமக்களம். அமர்க்களம் என்பது கலகமான இடத்தை, தனக்குப் பிடிக்காதவற்றையும் துன்பம் விளைப்பனவற்றையும் போர்க் களத்தையும்  குறிப்பதாகும் . இதில் அமர் என்னும் பழஞ்சொல் சண்டை / முரண்பாடு என்னும் கருத்திலானது. அமர் நிகழ்கின்ற பகுதி  அமர்க்களம் எனப்படுகின்றது.   இது அமர் என்னும் பெயரின் அடிப்படையில் தோன்றியதாகும். தகையணங்குறுத்தல் ...
                                        பண்டு – நிலை மாற்றப் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்                 தொல்காப்பியம் காலத்தை இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்று மூன்றாகப் பகுக்கின்றது.  இது இலக்கண விளக்கம் மட்டுமன்று; வாழ்வியல் விழுமியமும் ஆகும். அதாவது சென்ற கால மேன்மை தொடருமா ? மாறுமா?, மாற்றம் முன்னேற்றமாகுமா? போன்ற எண்ணங்கள் நிலையானவை; அனைவருக்கும் அனைத்திற்கும் பொருந்துபவை. இத்தகைய உலகளாவிய மாற்ற நிலையைக் காஞ்சி த் திணையில் தொல்காப்பியம் சுட்டுகின்றது. முன்னைய நிலையைச் சுட்ட முன்பு, பண்டு போன்ற சொற்கள் வழக்கிலும் செய்யுளிலும் தொன்றுதொட்டு ஆளப்படுகின்றன. இக் குறிப்புரை பண்டு என்னும் சொல்லால் வள்ளுவம் முன்னைய நிலை மாறியதைப் பதிவதை வெளிப்படுத்துகின்றது. காமத்துப்பாலில், பண்டறி யேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083) நாணொடு நல்லாண்மை பண்டு டையேன் இ...
                                                      பண்பு – வள்ளுவ உளவியல் புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்                   பலதுறைக் கருத்துகளால் மானுட வெற்றியை வாய்ப்பாக்க வழிவகுக் கின்ற வள்ளுவம் மாந்த உளவியல் கருத்துகளையும் வகுத்துரைக்கின்றது. அம் மரபில் பண்பு என்கின்ற மனித எண்ண ஓட்டம் / செயல் / திறன் / இயல்பு போன்றவற்ரைச் சுட்டுகின்ற  உளவியல் கலைச்சொல்லையும் நுட்பமாக ஆண்டுள்ளது. ஒன்றன் வடிவம், நிறம், சுவை போன்ற குணங்களையும் இயல்பையும், மனிதனின் எண்ணப் போக்கையும்  செயல்திறனையும்  குறிப்பதாக இச் சொல் வழங்கப்படுகின்றது. வள்ளுவத்தில் கீழ்வருகின்ற  குறட்பாக்களில் இச் சொல் பல வடிவங்களில் பயில்கின்றது:             14, 45, 62, 97, 194, 389, 469, 579, 681, 683, 688, 700, 783, 810, 811, 851,...
                                        961 ஆம்   குறட்பாவின் தொடர்ப் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்               மானுட மேன்மைக்கான கொள்கை வரைவுகளை, மண்ணில் நல்லவண்ணம் வாழ வாய்ப்பாக்க வகுத்துரைக்கின்ற வள்ளுவம் யாப்புக் கட்டுப்பாடு / சுருக்கம் / ஒப்பீடு ஆகிய காரணங்களால் , குறட்பாத் தொடர்களில் சில கூறுகளைச் சுட்டாமல் விடுக்கின்றது. அதனால் கற்போர் விடுபட்ட சொற்களை வருவித்துக் கருத்துணரவேண்டும். அப்போது தெளிவான தொடர்ப் பொருண்மை வாய்ப்பாகும். சான்றாக, மானம் என்னும் அதிகாரத்தின் கீழ்வரும் முதற் குறட்பாவைக் கருதலாம்.                      இன்றி ய மையாச் சிறப்பின ஆயினும்                            குன...