961ஆம்  குறட்பாவின் தொடர்ப் பொருண்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் 

            மானுட மேன்மைக்கான கொள்கை வரைவுகளை, மண்ணில் நல்லவண்ணம் வாழ வாய்ப்பாக்க வகுத்துரைக்கின்ற வள்ளுவம் யாப்புக் கட்டுப்பாடு / சுருக்கம் / ஒப்பீடு ஆகிய காரணங்களால் , குறட்பாத் தொடர்களில் சில கூறுகளைச் சுட்டாமல் விடுக்கின்றது. அதனால் கற்போர் விடுபட்ட சொற்களை வருவித்துக் கருத்துணரவேண்டும். அப்போது தெளிவான தொடர்ப் பொருண்மை வாய்ப்பாகும். சான்றாக, மானம் என்னும் அதிகாரத்தின் கீழ்வரும் முதற் குறட்பாவைக் கருதலாம்.

                    இன்றிமையாச் சிறப்பின ஆயினும்

                          குன்ற வருப விடல் (961)

            இக் குறட்பா நற்குடியில் பிறந்து, தன் மானத்தைப் போற்றிப்  பழிக்கு அஞ்சுகின்ற சான்றோரின் பண்பை அனைவரும் கைக்கொள்ள வலியுறுத்துகின்றது. தான் உயிர்வாழ இன்றியமையாததாக இருந்தாலும், தன்மானத்தை/ பெருமையைக் குறைக்கவல்ல எண்ணத்தை/ செயலை விட்டொழிக்க இக் குறட்பா அறிவுறுத்துகின்றது.

            ஒரு தொடராலான இக் குறட்பாவில், யார் என்னும் எழுவாயும், எதற்குக் குறையேற்படும் என்னும் பெயரெச்சமும் இல்லை. தன் மானத்தைப் போற்றிப்  பழிக்கு அஞ்சுகின்ற நற்குடிப் பிறப்பாளர் என்னும் எழுவாயையும், தன்மானத்தைக் குறைக்கின்ற என்னும் பெயரெச்சத்தையும் உரிய இடத்தில் அமைத்துக் குறட்பாத் தொடரின் கருத்தைத் தெளியலாம். உரையாசிரியோர் இத்தகைய பொருளறி அணுகுமுறையைக் கையாண்டுள்ளனர். நடத்தையியல் சார்ந்த பின்வரும் ஆங்கிலக் குறிப்புகளை மானம் அதிகாரத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம்.

Self-respect is defined as having proper respect for oneself as a human beingIt involves a feeling of worth and dignity. Self-respect is also related to self-esteem, which is a feeling of having respect for oneself and one's abilities. Self-respect is often associated with terms like dignity, integrity, and a sense of personal worth. 

Self-restraint is the ability to stop yourself doing or saying something that you want to because you know it is better not to.

நன்றி : இணையத் தரவுகள்         ********

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு