தொல்காப்பியத்திலும் வள்ளுவத்திலும் ‘ அற்றம் ’: சொல் கருத்தாய்வு ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி தொன்மையான விளக்கவியல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் , அற இலக்கியமான திருக்குறளிலும் சொற்பொருள் ஆய்வுக்கான களம் நுட்பமாக அமைந்துள்ளது . தொல்காப்பியத்தில் கலைச்சொல்லாகவும் , திருக்குறளில் வாழ்வியல் விழுமியமாகவும் பயில்கின்ற சொற்களின் கருத்தை நோக்கி அறிந்தால் தெளிவு வாய்க்கும் . இம் முறையில் ‘ அற்றம் ’ என்னும் தொழிற்பெயர்ச் சொல்லின் கருத்தைச் சூழல் நோக்கி விளக்குவதாக இக் கட்டுரை இயல்கின்றது . கருதுகோள் : ஒப்புருச் சொல்லாக அற்றம் ஆளப்படுகின்றது . அற்றம் : சொற்பொருள் : அறு > அற்று + அம் = அற்றம் . இது அறு என்னும் குறை , நீக்கு என்னும் பொருளுடைய வினைப் பகுதியுடன் அம் என்னும் தொழிற்பெயர் விகுதியை ஒட்டித் தொழிற்பெயரும் , குற்றம் / இறுதி ஆகிய பெயர்ச்சொற்களும் ஆக்கப்படுகின்றன . இதனால் ஒப்புச்சொல்லாக இது ஆளப்படு...
Posts
Showing posts from January, 2024
- Get link
- X
- Other Apps
நிறங்களின் உணர்வுப் பொருண்மை மதிப்பு முர் . ப , கொழந்தசாமி , இணைப் பேராசிரியர் , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . மானுட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளோடு உணர்வுத் தேவைகளும் இயல்கின்றன . உணவு , உடை , உறைவிடம் , கல்வி ஆகிய தேவைகள் நிறைவேறினாலும் விருப்பங்கள் , எதிர்பார்ப்புகள் , புகழ் . பெருமை என்பவற்றிற்காகவும் மனித மனம் விழைகின்றது . இதனால் நிறம் , திசை , நம்பிக்கை , சகுணம் ஆகியவை வாழ்க்கையில் முதன்மை பெறுகின்றன . நிறங்களுள் நன்னிறங்களும் , விரும்பாத வண்ணங்களும் அமைந்துள்ளன .( இறுதியில் தரப்பட்டுள்ள ஆங்கிலக் குறிப்புகளை ஒப்புநோக்குக ) அதனால் இவை உணர்வுப் பொருண்மை மதிப்புடையனவாகத் திகழ்கின்றன . நிறங்கள் அனைத்து மொழிகளிலும் பொருட் களங்களுள் ( அதாவது பல நிறங்களைக் குறிக்கும் சொற்றொகுதி ) ஒன்றாக அமைந்துள்ளன . ஆன்மீக அடிப்படையிலும் நிறங்களுக்கு உணர்வுப் பொருண்மை சுட்டப்படுகின்றது . குங்குமம் , திருநீறு , திருமண் , மஞ்சள் . பூக்கள் ஆகியவற்றி...
- Get link
- X
- Other Apps
வாகை ‘ அவையகம் ’ – மனிதவள அறவியல் நோக்கு ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி தமிழியல் தளத்தில் தொல்காப்பியத்திற்குப் பல்வேறு சிறப்புகள் உள . இலக்கணவியல் , இலக்கியவியல் , பொருண்மைக் கொள்கைகள் , மொழி வரலாறு போன்றவற்றை வகுத்துரைப்பதோடு மொழி / இலக்கிய வளர்ச்சிக்கும் இக்காலத் தேவைகட்குக் கருத்தளிப்பதாகவும் இவற்றை ஊக்குவிப்பதாகவும் தொல்காப்பியம் தாய்மைப் பண்போடு மிளிர்ந்து , தமிழியல் ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமைகின்றது . முதல் இரண்டு அதிகாரங்களில் தமிழ் மொழியின் இயங்கியலையும் பொருளதிகாரத்தில் இலக்கிய வகைமை , அமைப்பியல் , மரபுகள் போன்ற இலக்கியவியல் கொள்கைகளையும் தொல்காப்பியம் விண்டுரைக்கின்றது . ஆகவே தாய்மைப் பண்பும் தனிச் சிறப்புகளும் நிகழ்தகைமைச் சீர்மையும் பெற்றதாகத் தொல்காப்பியம் அறியப்படுகின்றது . நோக்கம் : தொல்காப்பியத்தின் தாய்மைப் பண்பை நிறுவல் . கருதுகோள் : தொல்காப்பியக் கருத்துகள் வாழ்வியல் விழுமியங் க ளாக ...
- Get link
- X
- Other Apps
திருக்குறள் கண்ட ‘ தக்கா ர்’: கருத்தாய்வு ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி அற இலக்கியமான திருக்குறள் மனித வளமைக்கு வழிகாட்டுவதாகும் . இதற்காகச் சிறப்புச் சொற்களை வள்ளுவர் ஆக்கியுள்ளார் . இவற்றைத் தெளிந்தால் , விழுமியத்தை அறிந்து படைப்பின் பயனை முழுமையாகப் பெறலாம் ; இத்தகைய அரிய சொற்களுள் ‘ தக்கார் ’ என்பது ஒன்றாகும் . இ தன் கருத்தை விளக்குவதாக இக் கட்டுரை இயல்கின்றது . ‘ தக்கா ர்’ கருத்துப் பொருள்: ஒட்டுமொழியான தமிழில் பொருண்மைக் கூறுகளால் சொற்கள் ஆக்கப்படுகின்றன. இதைப் பகுபத உறுப்புகள் என்று இலக்கணங்கள் சுட்டுகின்றன. சான்றாக, பேசுகின்றான் என்னும் ஆண்பால் நிகழ்காலப் படர்க்கை வினைமுற்று, பேசு+ கிறு+ ஆன் [ என்ன + எப்போது+ யார் ] என்னும் மூன்று பொருணமைக் கூறுகளை, தமிழின் இலக்கண / பொருண்மை அ...
- Get link
- X
- Other Apps
வள்ளுவத்தில் சாகாடு × சாக்காடு ; உறழ்பொருண்மை ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி இலக்கியம் பொருள் பொதிந்த சொற்களால் ஆனது; ஒவ்வொரு சொல்லும் கருத்தைக் கடத்துகின்ற பொருண்மை மதிப்புடையவை என்பதோடு, சொல்லின் பொருளை ஆக்குகின்ற ஒவ்வோர் எழுத்தும் , சொல்லின் பொருளை உறுதிப்படுத்துகின்றன. அந் நிலையைத் தெளிய, சொல் வழக்காறு வாய்ப்பாகின்றது. அதனால் திருக்குறளில் பயில்கின்ற சாகாடு , சாக்காடு என்னும் குறைந்த ஒலி வேறுபாடுடைய இணைச்சொற்களின் பொருண்மை மாறுபாடு இவண் விளக்கப்படுகின்றது. சாகாடு= வண்டி : அற இலக்கியமான வள்ளுவம் எல்லை மீறலைக் குறித்து எச்சரிக்குபோது, பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்ட ம் சால மிகுத்துப் பெயின் ( 475 ) என்று, வலியறிந்து/ எல்லை மீறாமல் செயலாற்றி வெ...
- Get link
- X
- Other Apps
வள்ளுவத்தில் ‘சலம்’ : கருத்தாய்வு ப, கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி இலக்கியம் மனித வாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டு, மானுட மேன்மைக்காக ஆக்கப்படுகின்றது. பல வகையான இலக்கியங்களுள் அறப் பனுவல்கள் செய் × செய்யாதே ; நன்று × தீது என்னுமாறு இருமைத் தன்மையை எடுத்துரைப்பனவாக இயல்கின்றன. இத்தகைய வாழ்நெறிகளை விளக்கத் தேவையான சொற்களைத் தன் மொழித்திறத்தால் தேர்ந்து / ஆக்கி / திரித்துப் பாவலர் ஆளுகின்றனர். எனவே விளம்பு செய்தியைத் தெளிய, இலக்கியத்தில் பயில்கின்ற ஒவ்வொரு சொல்லையும் நோக்கிக் கருத்தறியலாம். அந் நிலையில் ‘சலம்’ என்னும் பல்பொருட்சொல் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளதை விளக்குவதாக இக் கட்டுரை இயல்கின்றது. சலம்: சொற்பொருள் : பாட்டும் தொகையும் என்னும் சங்கச் சொல்விளக்கி , சலம் என்னும் பல்பொருட்சொல்லுக்கு நீ...
- Get link
- X
- Other Apps
வள்ளுவத்தில் ‘மா லை ’: சூழல் பொருண்மை ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்பொருண்மைக் களம் விரிவான ஆய்வுத் தளமாக உள்ளது . தொல்பழங்காலச் சொற்கள் தொடர்ந்து இன்றுவரை பயில்கின்றன . அவ்வாறே தமது விளம்பு நெறிக்கேற்பப் படைப்பாளர் புதிய சொற்களைப் படைக்க உரிமையுள்ளவர். இந் நிலையில் ‘மா லை ’ என்னும் பல்பொருட்சொல் திருக்குறளில் இயல்வதை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது . மா லை - சொற்பொருள் : தனிச் பெயர்ச்சொல்லாக , மா லை என்னும் சொல் ஒரு பகல் நேரத்தின் இறுதி நேரத்தையும் , பூ மாலை என்று ஒன்றன் திரட்சியையும் குறிக் கின்றது, எனவே ஒரு தொடரில் மாலை என்னும் ஒப்புருச் சொல் பயின்றால் , சூழல் நோக்கி முறையாக க் கருத்துணரவேண்டும் . அப்போது தான் மெய்ப்பொருள் அறியலாகும். வள்ளுவத்தில் : பழந்தமிழ...