Posts

Showing posts from December, 2024
                               வாகை – தொல்காப்பிய ஆளுமைப் பொருண்மை ( Concept of skilled personality ) புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் தொல்காப்பியம் புறத்திணையியலில் போரியலை மட்டுமின்றி மானுட மேம்பாட்டுக்கான கொள்கைவரைவுகளையும் எடுத்துரைத்துள்ளது . வாகைத் திணையை அறிமுகப்படுத்தும்போது , தாவில் கொள்கை தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப ( நூற்பா , 1020 ) என்று தத்தம் துறையில் / ஆற்றுகின்ற வினையில் ஒருவர் சிறந்துவிளங்க ஊக்குகின்றது . இத்தகைய ஆளுமைத் தகைமை தனிமனித மேன்மைக்கும் உலக உய்விற்கும் உயர்விக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிக்கும் வாய்ப்பாகும் . தொல்காப்பியரின் / பழந்தமிழரின் இத்தகைய விழுமியங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டவை . இதை இளைஞர்கள் உணர்ந்து சிறக்கலாம் . கீழ்வருகின்ற இணையத் தரவு இவண் ஒப்பத்தக்கது : The concept of a  skilled personality  refers to an individual who possesses a well-developed set of attributes, skills, and behaviors that enab...
                                               பருகுவார் - உறவு உளவியல் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்             மனித வாழ்க்கையில் உறவுகள் குருதி , திருமணம் , சமூகம் , பணியிடம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்கின்றன ; பயணத்தின்போதும் நட்பு உருவாவதுண்டு . இணங்கி வாழ்கின்ற சமூக விலங்கான மனிதனுக்கு உறவும் நட்பும் அனைத்து நிலைகளிலும் தேவைப்படுகின்றன . அதனால் அற இலக்கியங்கள் உறவியல் குறித்து விரிவாக விளக்கியுள்ளன . உயர்ந்தாரோடு உறவாடுக ; நல்லாரோடு நட்பாடுக ; தீய எண்ணத்தாரோடு இணங்காதே என்று அறிவுறுத்துகின்றன . இது குறித்துப் பழமொழிகளும் சொலவடைகளும் பயில்கின்றன . அரசியலிலும் பன்னாட்டு உறவியலிலும் இது நிலவுகின்றது . திருக்குறள் ’ தீ நட்பு ’ அதிகாரத்தில் ,                         ...
                                      அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவி – கருத்தாடல் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்                                           தொல்காப்பியம் மானுட மேன்மையை வாய்ப்பாக்கும் பல தரவுகளைக் கொண்டிலங்குகின்ற கலைக்களஞ்சியமாகத் திகழ்கின்றது . இயற்கை , பண்பாடு , மொழியியல் , அணியியல் , இலக்கிய அழகியல் / அமைப்பியல் / உணர்ச்சிகள் , அரசியல் / போரியல் , திறனாய்வியல் ஆகியவற்றை வகுத்துரைக்குமாறே நுட்பமான கருத்தாடல் நெறிகளையும் கருதத்தந்துள்ளது . மனித வாழ்க்கை இயக்கத்தில் சொல்லாடல் இன்றியமையாப் பணியை ஆற்றுவதைத் தொல்காப்பியம் கூற்று , மெய்ப்பாடு ஆகிய கலைச்சொற்களால் உணர்த்துகின்றது . அவற்றுள் அகத்திணைத் தலைமை மாந்தர்க்கிடையிலான [ இல்லற இணையர் ] சொல்லாடல்களுள...
                                   பகடுக்குள்ள  மனவலிமை உறுக- வள்ளுவ விழுமியம் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             அற இலக்கியமான திருக்குறள் மானுட வெற்றிக்கான கொள்கை வரைவாகத் திகழ்கின்றது. மனிதனின் எண்ண ஓட்டத்தை அளந்து  உவமை காட்டி உரமூட்டுகின்ற மனிதவள மேம்பாட்டுப் பணிகளை வள்ளுவர் வாய்ப்பாக்கிக்கொண்டுள்ளார். அதன்படி, மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து (624) என்னும் குறட்பா உன்னத்தக்கது. பழந்தமிழ் உழவியல் சொல்லான எருது என்னும்  மக்கள் நன்கறிந்த ஒன்றன்பால் ஆண்பால் சொல்லை உவமையாக்கி, வண்டி இழுக்கின்ற எருது [ பகடு ]  பாதையில் பள்ளம் மேடு இருந்தாலும் கூடுதல் வலிமையை நல்கித் தொடர்ந்து முன்னேறுவது போல, ஒருவன் கொண்ட கொள்கைக்கும் / முன்னேற்ற முயற்சியிலும் சிறு தடை ஏற்பட்டாலும் தொய்வின்றித் தொடர்க என்னும் உளவியல் விழுமியத்தை வள்ளுவர் எடுத்துரைக்கின்றார். இடுக்கண் அழியாமை அதிகாரக் குறட்பா...
                                      சொற்பொருண்மை நோக்கில் ’ மொழி நிறைபு ’ புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்             விளக்கவியல் இலக்கணத் தொன்னூலான தொல்காப்பியம் ஆங்காங்கே வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தமிழ்ப் பொருண்மையியல் கொள்கைகளைச் சுட்டுகின்றது . நுட்பமாக நோக்கின் பெரும்பாலான நூற்பாக்களில் பொருண்மையியல் கொள்கை புதைந்திருக்கும் . அதன்படி , மொழி மரபு இயலின் ,             நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்தொருமொழி ( நூற்பா 10 )             குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே ( நூற்பா 11 ) ஆகிய நூற்பாக்களும் , மொழி நிறைபு என்னும் கலைச்சொல்லும் உன்னத்தக்கன . மொழியின் அனைத்துக் கூறுகளும் பொருண்மை மதிப்புடையன. எழுத்து, சொல்லின் பொருளை வேறுபடுத்துகின்ற ஆற்றலுடையது [அம் மா / அம் மி ]. அதாவது சொல்லின் ஓரெழுத்தை மாற்றினா...
                                      தொல்காப்பிய ’வயங்கியோர்’ – சொற்பொருள் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்                             இலக்கண இலக்கியங்கள் உயர்ந்தோரைக் குறிப்பிடுவதுடன் , ஆன்றோர்களால் இது கூறப்பட்டது/ ஏற்கப்பட்டது/ ஒதுக்கப்படவில்லை என்றும் தனக்கு வலுத் தேடிக்கொள்கின்றனர். இம் மேற்கோள் மரபு இக் கால ஆய்விலும் கையாளப்படுகின்றது. தொல்காப்பியர் புலவர், அறிவர் போன்றவாறு சுட்டி மொழிப, என்மனார் என்றவாறு இம் மரபைப் போற்றுகின்றார். விளிமரபில் அவையார்> அவையீர் ; நண்பர் > நண்பரீர் என்று (நூற்பா 623 ) விளியேற்பதைச் சுட்டி, அடுத்த நூற்பாவில், தொழிற்பெயராயின் ஏகாரம் வருதலும் வழுக்கின்று என்மனார் வயங்கியோரே   என்று அர்/ஆர் ஈற்று வினையாலணையும்பெயர்கள் விளியேற்கையில் ஈ றுடன் ஏகாரமும் [ வாழ்வீரே ] ஏற்பதை வயங்கியோர் குற்றமில்லை என்பர்; ஏற்...
        தொல்காப்பியத்தி ல் ’ அண்மை / அன்மை ’ – ஒப்பொலிப் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் உயர்தனிச் செம்மொழியான தமிழ் இலக்கிய இலக்கண வளம் நிறைந்தது. இதனால் தமிழில் செறிவான சொற்கள் மிகுந்திருக்கின்றன. இதைக் கருதித் தொல்காப்பியர் விரிவான சொல்லிலக்கணம் வகுத்துள்ளார். அதோடு அவரது மொழிநடையாலும் பொருண்மைக் கருத்துகளை அறியலாம்.   தொல்காப்பியத்தில் அண்மை [ அருகில் ] , அன்மை [ இல்லாமை ] ஆகிய குறைந்த ஒலி வேறுபாடுடைய பொருள் வேறுபடுகின்ற  ஒப்பொலிச் சொற்களின் பொருண்மையை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. இதனால் இலக்கணவியல் கொள்கைகளைத் தெளியலாம். அண்மை : பழந்தமிழ்ச் சொல்லான அண்மை அருகில்/ சிறிது காலத்திற்கு முன்னர் ஆகிய பொருளில் இன்று வரை இயல்கின்றது. அண்டை வீடு, அண்மையில் பெய்த மழை ஆகியவற்றை இவண் கருதலாம். தொல்காப்பியம் ,             அண்மை சுட்டிய = அருகில் (நூற்பா 210)             அண்மைச் சொல்லே = அருகில் (நூற்பா 612)   ...
Image
                                          அண்நா – தொடர்ப் பொருண்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியமான முடத்தாமக் கண்ணியார் இயற்றிய பொருநராற்றுப்படை   விவரிப்பு இலக்கியமாகத் திகழ்கின்றது. தலையிலிருந்து கால் வரை பாடினியின் அழ கு இனிய உவமைக ளால் விவரிக்கப்பட்டுள்ளது. கரிகாலனின் விருந்தோம்பல் பண்பு , காவிரியின் சிறப்பு , சோழ நாட் டு வளம் , பண்ட மாற்று வ ணிகம், சோழ நாட் டு  நிலங்கள் ஆகியவற்றையும்  விவரித்துள்ளார். இவற்றோடு பாலை யாழின் வருணனையும் விரிவாக இடம்பெறுகின்றது. இதைப் படிப்பாருக்கு யாழின் அமைப்பு உளத்தே நிழலாடும். அதில், எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இ ல்லா அமைவரு வறுவாய் (அடிகள் 11-12) என்று எட்டாவது நாள் நிலவு போலும் வடிவை உடை ய உள் நாக்கு இல்லாத , உள்ளே ஒன்றும் இல்லாத வாயினையு டைய யாழ் என்று உவமையுடன் உருக்காட்சிப்படுத்தியுள்ளார். இ...
                              தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் ’அன்மை’ – கருத்தாய்வு புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் உயர்தனிச் செம்மொழியான தமிழ் இலக்கிய இலக்கண வளம் நிறைந்தது. இதனால் தமிழில் செறிவான சொற்கள் மிகுந்திருக்கின்றன. இதைக் கருதித் தொல்காப்பியர் விரிவான சொல்லிலக்கணம் வகுத்துள்ளார். அதோடு அவரது மொழிநடையாலும் பொருண்மைக் கருத்துகளை அறியலாம். இந்த மரபில் திருக்குறள் மொழிநடையும் சொற்பொருண்மை ஆய்வுக்கு வாய்ப்பாகின்றது. இந் நிலையில் இல்லாத நிலை என்று பொருள்படுகின்ற அன்மை என்னும் சொல் இவ் இரண்டு நூல்களிலும் பயிலுமாற்றை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. தொல்காப்பியம்,  தன்மை சுட்டலும் உரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத்தான ( நூற்பா 508 )   என்னும் நூற்பாவில், ஒரு பொருளை எது? என்னும் ஐயம் நீக்கி, அது அன்று; இது தான்! என்று தெளிவாகச் சுட்டவேண்டும்  என்று குறிப்பிடுகின்றது. சான்றாக, இது மடமா? கோவிலா? என்று ஐயம் எழும்போது, உறுதியாக மடம் என்றறிந்தபின், கருத்துத் ...