பகடுக்குள்ள மனவலிமை உறுக- வள்ளுவ விழுமியம்
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
அற இலக்கியமான
திருக்குறள் மானுட வெற்றிக்கான கொள்கை வரைவாகத் திகழ்கின்றது. மனிதனின் எண்ண ஓட்டத்தை
அளந்து உவமை காட்டி உரமூட்டுகின்ற மனிதவள மேம்பாட்டுப்
பணிகளை வள்ளுவர் வாய்ப்பாக்கிக்கொண்டுள்ளார். அதன்படி,
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து (624)
என்னும் குறட்பா உன்னத்தக்கது. பழந்தமிழ் உழவியல் சொல்லான
எருது என்னும் மக்கள் நன்கறிந்த ஒன்றன்பால்
ஆண்பால் சொல்லை உவமையாக்கி, வண்டி இழுக்கின்ற எருது [ பகடு ] பாதையில் பள்ளம் மேடு இருந்தாலும் கூடுதல் வலிமையை
நல்கித் தொடர்ந்து முன்னேறுவது போல, ஒருவன் கொண்ட கொள்கைக்கும் / முன்னேற்ற முயற்சியிலும்
சிறு தடை ஏற்பட்டாலும் தொய்வின்றித் தொடர்க என்னும் உளவியல் விழுமியத்தை வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
இடுக்கண் அழியாமை அதிகாரக் குறட்பாவான இது உள்ளமாகிய படர்கொடிக்குப் பந்தல் அமைப்பதாக
உள்ளது. அனைவரும் இதை உள்ளத்தில் பதிந்து முன்னேற வாய்ப்புறலாம்.
நன்றி:
இணையத் தரவுகள் …………
Comments
Post a Comment