Posts

Showing posts from September, 2024
                        ’ அறிவாளி ’ திரைப்படப் பாட லில் திருக் குறள் திறனா ய்வு பேராசிரியர் புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்             விளம்பு விழுமியங்களாலும் இலக்கிய முருகியலாலும் சீர்மையுடைய திருக்குறள் காலந்தோறும் பன்னாட்டுப் பாராட்டுகளை ஈர்த்துவருகின்றது . திருவள்ளுவமாலை தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரை இத்தகைய போற்றுரைகள் வலுவாகத் தொடர்கின்றன . அந் நிலையில் 1962 ஆம் ஆண்டு வெளியான ’ அறிவாளி ’ படத்தில் மருதகாசி இயற்றி சௌந்திரராசன் பாடிய ’ அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே ’   என்று தொடங்குகின்ற இன்பாடல் திருக்குறளைப் போற்றுகின்ற பாராட்டுமுறைத் திறனாய்வாகத் திகழ்கின்றது . இப் பாடல் வகுக்கின்ற திறனாய்வுக் கருத்துகள் வருமாறு : v   திருக்குறள் அறிவுக்கு விருந் தாகின்றது v   வள்ளுவரால் ஆக்கப்பட்ட இது அரும்பெரும் இலக்கியம் v   உலகப் பொதுமறை யான இது ஒளி , உயிர் , மழை ஆகியவற்றுக்கு ஒப்பானது . v   வளமான அற வாழ்க்கைக்கு இலக்கணமாக...
                        188 ஆம் குறட்பாவின் பிறழ் உணர்ச்சிப் பொருண்மை பேராசிரியர் புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்             அற இலக்கியமான திருக்குறள் இலக்கியவியல் / இலக்கணவியல் / உளவியல் / தத்துவ ஆய்வுகட்கு வாய்ப்பாவதால் .  ஒவ்வொரு குறட்பாவையும் பல்துறை நோக்கில் நுட்பமாகக் கருத்துணரவேண்டும் .  அந் நிலையில் 188 ஆம் குறட்பா விளக்குகின்ற விழுமியத்தைத் தெளிய , அதன் தொடரமைப்பு   அறியப்படலாம் . தமிழில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை என்கின்ற தொடரமைப்புப் பொதுவாக இயலும் . ஆயினும் வேற்றுமை அமைப்பால் இம் முறைமை மாறுவதுமுண்டு . இதோடு தொடரில் அமைவேண்டிய சொற்கள் இடம்பெறாமல் விடுபடலாம் ; சொன்ன கருத்தோடு சொல்ல விழைகின்ற செய்தியையும் இடைச்சொற்களின் உணர்ச்சிப் பொருண்மையையும் உய்த்தறியலாம் . இதற்கு உரைகள் உறுதுணையாகின்றன . இதன் அடிப்படையில் 188 ஆம் குறட்பாவின் தொடர்ப் பொருண்மையை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது . 188 ஆம் குறட்பா : துன்னியார் குற்ற...
        திருக்குறளில் ‘ அடை’ – ஒப்புருப் பொருண்மை                 பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி   உயர்தனிச் செம்மொழியான தமிழின் பொருண்மை வளம் சீரியது; செறிவானது. தமிழின் ஒவ்வொரு சொல்லையும் தொடர்ச் சூழல் நோக்கிக் கருத்துணரமுடியும். காலத் தொன்மையாலும் வட்டார வழக்காலும் சொற்பொருண்மையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இலக்கண அறிவினால் கருத்தறியலாம். அந் நிலையில் திருக்குறளில்  ’அடை’ என்னும் ஒப்புருச் சொல் இயலுமாற்றை விளக்குவதாக இக் குறிப்புரை அமைந்துள்ளது. ‘அடை’ பொருள் : பழந்தமிழ்ச் சொல்லான இது, இன்றைய வழக்கிலும் இயல்கின்றது. பெயராக உணவுப் பொருள்/ பெயரடை ; வினையாக சேர்தல், மூடுதல் ஆகிய பல பொருளில் ஆளப்படுகின்றது. இலக்கியங்களில் மேலும் பல பொருளில் வழங்கப்படுகின்றது. சொல்லாட்சிப் புதுமைகளைக் கொண்டுள்ள வள்ளுவத்தில், வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் (38 ) அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் (71) ஆகிய குறட்பாக்களில் ’மூடுதல்’ என்கின்ற செயப்படுபொருள்குன்றா வ...
            798 ஆம் குறட்பாவின் பொருண்மையும் சமூக உறவியல் விழுமியமும்                                      பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி             ஒரு பனுவலில் பயில்கின்ற சொற்கள் அனைத்தும் பொருளுடையன; படைப்பாளரின் கருத்துகளை வாசிப்பார்க்குக் கடத்துவன. ஆயினும் சொற்களைத் தொடரில் அமைக்கின்றபோதே  சொல் உணர்த்துகின்ற கருத்துப் புலனாகும். அதோடு ஒரு தொடர் இயல்கின்ற சூழலும் நோக்கத்தக்கது. இதைப் பொருள் இலக்கணத்தில் திணை, துறை என்றும் திருக்குறளில் பால், அதிகாரம் என்றும் சுட்டுகின்றனர். எனவே ஒரு குறட்பாவை அது பயில்கின்ற அதிகாரத்தை நோக்கிப் பொருளுணரவேண்டும்.  அம் முறையில் , உள்ளற்க உள்ளம் சிறுகுவ ; கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு ( 798 )   என்னும் குறட்பாவை அணுகலாம். பொருட்பாலின் நட்பாராய்தல் அ...
                திருக்குறளில் ’ எண்பதம் ’ / ‘ தண்பதம் ’ : பொருண்மையமைப்பு பேராசிரியர் குழந்தைசாமி , புதுச்சேரி             மொழியின் அடிப்படைப் பயன்பாடு கருத்துப் பரிமாற்றம் ஆகும் . இதற்காகச் சொற்கள் , எழுத்துகள் ஆகியன ஆளப்படுகின்றன . ஒவ்வொரு சொல்லுக்கும் சொற்பொருளும் கருத்தும் அமைகின்றன . அதாவது அகராதிப் பொருளும் , தொடர்ப் பொருண்மைச் சூழலுக்கேற்ற கருத்தும் இயல்கின்றன . சான்றாக , பனைமரம் என்னும் தொடர் மரத்தையும் , உயரமாக வளர்ந்தவனையும் சூழலுக்கேற்பச் சுட்டுகின்றது . மேலும் பல சொற்கள் பொருட்பன்மையில் பயில்கின்றன . இதனால் ஒரு பனுவலைக் கற்கையில் மயக்கத்தைத் தவிர்க்கச் சூழலுக்கேற்ற சொற்பொருண்மை அமைப்பை அறிந்து தெளியவேண்டும் . இம் முறையில் திருக்குறளில் ’ எண்பதம் ’ / ‘ தண்பதம் ’ ஆகிய சிறப்புச் சொற்களின் பொருண்மையமைப்பை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது . ’ எண்பதம் ’ / ‘ தண்பதம் ’ :             பெருமையுடைய திருக்குறள் சொல்லேருழவர் போ...