அறிவாளிதிரைப்படப் பாடலில் திருக்குறள் திறனாய்வு

பேராசிரியர் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            விளம்பு விழுமியங்களாலும் இலக்கிய முருகியலாலும் சீர்மையுடைய திருக்குறள் காலந்தோறும் பன்னாட்டுப் பாராட்டுகளை ஈர்த்துவருகின்றது. திருவள்ளுவமாலை தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரை இத்தகைய போற்றுரைகள் வலுவாகத் தொடர்கின்றன. அந் நிலையில் 1962ஆம் ஆண்டு வெளியான அறிவாளிபடத்தில் மருதகாசி இயற்றி சௌந்திரராசன் பாடிய அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே’  என்று தொடங்குகின்ற இன்பாடல் திருக்குறளைப் போற்றுகின்ற பாராட்டுமுறைத் திறனாய்வாகத் திகழ்கின்றது. இப் பாடல் வகுக்கின்ற திறனாய்வுக் கருத்துகள் வருமாறு:

v  திருக்குறள் அறிவுக்கு விருந்தாகின்றது

v  வள்ளுவரால் ஆக்கப்பட்ட இது அரும்பெரும் இலக்கியம்

v  உலகப் பொதுமறையான இது ஒளி, உயிர், மழை ஆகியவற்றுக்கு ஒப்பானது.

v  வளமான அற வாழ்க்கைக்கு இலக்கணமாக அமைந்துள்ளது

v  மனம், மொழி, மெய் இனிக்க வார்த்திட்ட தேன்/ இனிமையானது

v  காலம், மதம், மொழி  ஆகியவற்றைக் கடந்த உலகப் பொதுமறை

இந்தத் திறனாய்வுக் கருத்துகளை எளியோரும் புரிந்துகொள்ளலாம்; அதோடு திரைப்படத்தில் இடம்பெறுவதால் பரவலான மக்களை வலுவாகச் சென்றடைவதோடு, ஒலி/ஒளிப் பேழையாகவும், ஊடகங்களில் பரப்பப்படுகின்றது. இவ்வாறே இலக்கியக் கருத்துகளையும் கதைகளையும் கொண்ட திரைப்படங்கள் உள்ளன. இவை இளைஞர்கள், பொதுமக்கள், வெளிநாட்டினர் ஆகியோரிடையே பரவினால் இலக்கியப் பரவல் / சீர்மை சிறக்கும்; மானுடம் வெல்லும்.

நன்றி: இணையத் தரவுகள்                              ********

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு