Posts

Showing posts from June, 2021
  ThirukuRaL is literature for human excellence, It says that “ The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams”.     கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு   சொல்வேறு பட்டார் தொடர்பு. (819) Yes.Our visions will become clear only when you can look into your own heart.           “Who looks outside, dreams; who looks inside, awakes.”  The famous psychologist Jung believed that our dreams were messages from the unknown and that we are all connected by them. The more time you spend looking inward, journaling, meditating, and focusing on your dreams, the more connected with them you will become, and the easier it will be to feel awake when you are dreaming. Aim for High. -        Dr. P. Kolandasamy, State NSS Officer, Puducherry UT.     
  திருக்குறளில் உழை – பொருண்மை நோக்கு முனைவர் ப , கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி .         அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது . வாழ்வியல் விழுமங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும் , இலக்கிய உத்திகளும் நடையியல் நுட்பங்களும் திருக்குறளில் செறிந்து காணப்படுகின்றன . காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் ஆர்வமுள்ள அன்பர்களால் கூடச் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை . குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் தான் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி , அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் மக்களிடம் பிறக்கும் . அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள மொழி , இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிவது தேவையாகின்றது . இதற்கு உரைகள் துணையாகின்றன . குறட்பாக்களின் புரிதிறனில் உள்ள கடினத் தன்மை / மருட்சி ஆகியவற்றை நீக்கப் பொருண்மையியல் அணுகுமுறை உறுதுணையா...