தொல்காப்பிய ’வயங்கியோர்’ – சொற்பொருள்
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
இலக்கண இலக்கியங்கள் உயர்ந்தோரைக்
குறிப்பிடுவதுடன் , ஆன்றோர்களால் இது கூறப்பட்டது/ ஏற்கப்பட்டது/ ஒதுக்கப்படவில்லை
என்றும் தனக்கு வலுத் தேடிக்கொள்கின்றனர். இம் மேற்கோள் மரபு இக் கால ஆய்விலும் கையாளப்படுகின்றது.
தொல்காப்பியர் புலவர், அறிவர் போன்றவாறு சுட்டி மொழிப, என்மனார் என்றவாறு இம் மரபைப்
போற்றுகின்றார். விளிமரபில் அவையார்> அவையீர் ; நண்பர் > நண்பரீர் என்று (நூற்பா
623 ) விளியேற்பதைச் சுட்டி, அடுத்த நூற்பாவில்,
தொழிற்பெயராயின் ஏகாரம் வருதலும்
வழுக்கின்று என்மனார் வயங்கியோரே
என்று அர்/ஆர் ஈற்று வினையாலணையும்பெயர்கள் விளியேற்கையில் ஈறுடன் ஏகாரமும் [ வாழ்வீரே ] ஏற்பதை வயங்கியோர் குற்றமில்லை என்பர்; ஏற்பர் என்று விளக்குகின்றார். இங்கு வயங்கியோர் என்பது மொழி இயங்கியலைத் தெளிவாக அறிந்து மரபறிந்த மொழி அறிஞரைச் சுட்டுகின்றது. தரவுகளை அலசி ஆராய்ந்து விளக்கவியல் இலக்கணத்தை யாத்த தொல்காப்பியருக்குத் தன் கொள்கைகளை உறுதிப்படுத்த இத்தகைய சொல்லாடல் தேவைப்படுகின்றது. தொன்மப் பின்னணியில் குறிஞ்சிப் பாட்டின் 213ஆம் அடி தேவர்களைக் குறிக்க வயங்கியோர் என்னும் சொல்லை ஆள்வது இவண் ஒப்பத்தக்கது . இத்தகைய அறிவோர் பழங்காலத்தில் வாழ்ந்தனர் என்பது பெருமை.
நன்றி: இணையத்
தரவுகள் --------
Comments
Post a Comment