பருகுவார்- உறவு உளவியல் பொருண்மை
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
மனித வாழ்க்கையில் உறவுகள் குருதி, திருமணம்,
சமூகம், பணியிடம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்கின்றன;
பயணத்தின்போதும் நட்பு உருவாவதுண்டு. இணங்கி வாழ்கின்ற
சமூக விலங்கான மனிதனுக்கு உறவும் நட்பும் அனைத்து நிலைகளிலும் தேவைப்படுகின்றன.
அதனால் அற இலக்கியங்கள் உறவியல் குறித்து விரிவாக விளக்கியுள்ளன.
உயர்ந்தாரோடு உறவாடுக; நல்லாரோடு நட்பாடுக;
தீய எண்ணத்தாரோடு இணங்காதே என்று அறிவுறுத்துகின்றன. இது குறித்துப் பழமொழிகளும் சொலவடைகளும் பயில்கின்றன. அரசியலிலும் பன்னாட்டு உறவியலிலும் இது நிலவுகின்றது. திருக்குறள் ’தீ நட்பு’ அதிகாரத்தில்,
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது ( 811 )
என்னும் குறட்பாவில் உறவியல் குறித்து எச்சரிக்கின்றார்.
தீ நட்பை விலக்குக என்பது இக் குறட்பாவின்
கருத்தாகும். இதிலுள்ள பருகுவார், பண்பிலார்
எனும் கலைச்சொற்கள் உயிர்ப்புடையன. பழந்தமிழ்ச் சொற்களான இவை இன்றும் வழங்கப்படுகின்றன. பருகு என்னும் செயப்படுபொருள் குன்றா
ஏவல் தன்வினை நீர்மத்தைக் குடித்தல் என்னும் இயல்புப் பொருளோடு, முழுமையாக அனுபவித்தல்/ நுகர்தல் என்னும் நீட்சிப் பொருளும்
கொண்டதாகும்[ ஒப்புக குறள்1266 ]. இங்கு
நண்பன் ஆழமாக நெருங்கி நட்பாடினும் அவன் தீயவனாக இருந்தால் விலக்குக என்னும் அறவுரை
விளம்பப்படுகின்றது. நெருக்கம் இருந்தாலும், சீரிய நட்பாடல் பண்புகள் இல்லாதவனோடு நட்பாடக்கூடாது என்னும் பொருண்மை மானுட
உறவு/ உளவியல் விழுமியமாக இவண் வலியுறுத்தப்படுகின்றது.
இதை இளைஞர்கள் உள்ளத்திருத்தி உய்யலாம். இங்குக்
கீழ்க்காணும் இணையத் தரவு ஒப்பத்தக்கது:
The
term peer group refers to a group of
individuals or companies that share similar characteristics with one another. These characteristics may be age, education,
ethnic background, size, industry, or sector. Peer group influence is the impact that peers have on a
person's behavior, attitudes, and functioning. It can be positive or negative,
and can range from direct to subtle influences. Negative peer pressure
is often related to influencing bullying behaviours, drinking alcohol, drug use
and negative body image, all of which are harmful to a child or young person's
wellbeing. The effects of such behaviours can decreaes
self-confidence, self-worth and distancing from family members and friends.
நன்றி : இணையத் தரவுகள் ********
Comments
Post a Comment